சமூக ஊடகங்கள் எப்படி ஒரு கற்றல் கருவியாக இருக்கும்

கடந்த இருபது ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இந்த செயலிகள் மீது மக்களுக்கு ஒரு எதிர்மறை பிம்பம் ஏற்பட்டு விட்டது. சமூக ஊடகங்களை அளவுக்கதிகமாக உபயோகிப்பதன் கெடுவிளைவுகளை அனைவரும் அறிகிறார்கள். ஆனால், இந்தத் தளங்கள் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர்களுக்கு உண்மையிலே நன்மையளிக்கும் என்பதைக் காட்டும் காரணிகள் இன்னும் அறியப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்களின் இந்த அம்சங்களை முன்னிலைப்படுத்தி அனைவருக்கும் முக்கியமாக குழந்தைகளுக்கு நன்மையளிக்கும் விதமாக வழங்குவது அவசியமாகும்.

1. ஒரு கற்றல் கருவியாக: Reddit, Quora மற்றும் Wikipedia போன்ற கற்றல் கருவியாக உபயோகிக்கப்படும் சமூக ஊடகங்கள் பல உள்ளன, இவை திறந்த தளங்கள் ஆகும். குறிப்பிட்ட துறையில் ஆர்வம் உள்ள மக்கள் சிலர் சேனல்களை உருவாக்கி அதில் கேள்விகளைக் கேட்டு பதிலளிப்பார்கள். இந்த மக்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருபவர்கள், அதனால் பல வகையானக் கண்ணோட்டங்கள் அதில் இருக்கும். இது உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் தருவதுடன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களின் பார்வையை ஆய்வு செய்ய உதவும்.

2. வகுப்பறைக்கான Facebook குழுக்கள்: அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் இருக்கும் அம்சங்களில் சிறந்தது இதுவாகும். உங்கள் Facebook வகுப்புக்குழுவில் நீங்கள் பாடம் சார்ந்த பொருட்கள், கருத்துக்கள் மற்றும் புதிர்களுக்கானத் தீர்வுகளைப் பகிரலாம். இது ஆக்கபூர்வமாக இருப்பதுடன் ஒரே இடத்தில் அனைத்து கற்றல் பொருட்களையும் வைத்திருக்க உதவுகிறது. இந்தக் குழுக்களில் நீங்கள் ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம் அல்லது பாடம் குறித்து நீங்கள் கற்றதை சோதிக்க ஒரு புதிர் அமைக்கலாம்.

3. கல்வி வளங்களை பின் செய்ய Pinterest : பயனர்கள் தங்களுக்கு விருப்பமாகக் கருதும் வளங்களை, கல்வி சார்ந்த வளங்கள் உட்பட பின் செய்ய Pinterest அனுமதிக்கிறது. நீங்கள் அவற்றை பாடத்திற்கேற்ப வகைப்படுத்தலாம். இந்த முறையில் உங்கள் குழந்தை முறையாக இருப்பதுடன் மணிக்கணக்கில் செலவு செய்து அவர்கள் தேர்ந்தெடுத்த தரவை எளிதாகவும் அணுகலாம்.

சிறு குழந்தைகளுக்கு இந்த முறைகளில் சமூக ஊடகங்கள் சிறந்த கற்றல் தளமாக அமையலாம்.