ஒரு டிஜிட்டல் பெற்றோராக இருப்பது எப்படி

டிஜிட்டல் யுகத்தின் வருகையினால், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அவர்களை டிஜிட்டல் சூழலில் வளர்ப்பது அவசியமாகும். ஏதோ ஒரு விதத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களுடைய வாழ்வின் பெரும்பகுதியை கழிக்க வேண்டியதிருக்கும். இந்த எண்ணம்தான் வேகமாக வளரும் தொழில்நுட்ப அரங்கில் செயல்பட தங்கள் குழந்தையை தயார்படுத்த பயிற்சியளித்து வரும் “டிஜிட்டல் பெற்றோர்” உருவாக வழிவகுத்தது. குழந்தைகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சௌகரியமாகவும் திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

 

 

இப்போது டிஜிட்டல் பெற்றோர் என்றால் யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், இவ்வாறே நீங்களும் அவர்களில் ஒருவராகலாம். 

1. டிஜிட்டல் சூழல் பற்றி கற்றுக்கொள்ளவும்

உங்களை கல்வியறிவுடையவர்களாக்குவதும் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதுமே ஒரு டிஜிட்டல் பெற்றோராக இருப்பதற்கான முதல் படி ஆகும், இதன்மூலம்  உங்கள் குழந்தைகளுக்கு டிஜிட்டல் சூழலில் எவ்வாறு  பயணிப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொடுக்கலாம். பெற்றோர்களுக்கு கணினியின் செயல்பாடுகள் குறித்து குறைவான அறிவே இருப்பதனால் தங்கள் குழந்தைகள் இணையத்தில் அல்லது கணினியில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது கணிசமான எண்ணிக்கையிலான பெற்றோருக்கு சவாலாகவே இருப்பதாக இந்து இதழில் டிஜிட்டல் பெற்றோர்கள் என்ற கட்டுரை தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், தொழில்நுட்ப பாதைக்குள் நுழைவதற்கு உங்களை நீங்களே கல்வியறிவுடைவர்களாக்குவது மிக மிக அவசியமாகும். 

2. இணையவழியிலோ அல்லது இணையத்திற்கு வெளியிலோ உங்கள் குழந்தையின் மதிப்புகளை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்

குழந்தைகள் தங்கள் கற்றல் செயல்பாட்டை மீண்டும் செய்துபார்ப்பதற்கு இணையமானது முற்றிலும் புதிய விளையாட்டு மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இவற்றில், மிகவும் ஆபத்தானது என்னவென்றால்  இணையத்தில் குற்றம் செய்வதாகும். சிங்கப்பூர் ஊடக கல்விக் குழுவின் படி, தங்கள் குழந்தை இணைய குற்றம் எதிலும் பங்கெடுக்கவில்லை அல்லது வேறு எந்த தீய இணைய நவடிக்கையிலும் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்த பெற்றோர் “முன்மாதிரி பயிற்சியாளர்” பாத்திரத்தை எடுப்பது அவசியமாகும்.

3. அவர்களின் தனியுரிமையில் தலையிடாமல் எல்லா நேரங்களிலும் கணினி அணுகலை கண்காணியுங்கள்

உங்களுக்கு சரியென தோன்றுகிற விதத்தில் அனைத்து அணுகலையும் கண்காணியுங்கள். உங்கள் சாதனங்களில் உள்ள பெற்றோர் அணுகல் கட்டுப்பாடுகளை அமைக்க அனுமதிக்கும் ஏராளமான மென்பொருட்கள் உள்ளன, இதன்மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகள் அவற்றை எப்பொழுது மற்றும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். உங்கள் Wi-Fi மற்றும் கணினியை கடவுச்சொல்லை பயன்படுத்தி பாதுகாக்க மறக்கக் கூடாது, இது அவர்களின் அணுகலை கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும். கணினியை உங்கள் வீட்டிலுள்ள ஒரு பொதுவான இடத்தில் வையுங்கள் இதன்மூலம் உங்கள் குழந்தை உங்களுக்குத் தெரியாமல் அதை அணுக முடியாது. 

டிஜிட்டல் தளமானது கற்பதற்கும், விளையாடுவதற்கும் மற்றும் குழந்தைகளுடன் இணைந்திருக்கவும் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றோர்களுக்கு வழங்குகிறது. உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக கணினியை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இதுவாகும். டிஜிட்டல் பெற்றோர்த்துவம் என்பது இணையத்திலும் மற்றும் இணையத்திற்கு வெளியேயும் உங்கள் குழந்தை ஒரு பொறுப்புள்ள நபராக வளர்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு பெற்றோர்த்துவ அமைப்பாகும்.