உங்கள் திட்டங்களில் 10/10 பெறுவது எப்படி?

உங்கள் பள்ளித் திட்டங்களில் எவ்வாறு முழு மதிப்பெண்கள் பெறுவது என்று எப்போதும் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்கள் திட்டங்களில் தனித்து நிற்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால், நாங்கள் உங்களுடன் ஒரு இரகசியமான ஃபார்முலாவைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் – தொழில்நுட்பம்!

நீங்கள் கருத்துருக்களை எவ்வாறு செயல்விளக்கப்படுத்துகிறீர்கள் மற்றும் எவ்வாறு திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள் என்பதை மாற்றக்கூடிய ”கம்ப்யூட்டர் வகுப்பிலிருந்து” ஒரு பல்துறைக் கல்விக் கருவியாக பள்ளிகளில் தொழில்நுட்பம் உருபெற்றுள்ளது. இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் அது உங்கள் திட்டங்களுக்கான மேலான படித்தரங்களை உங்களுக்குப் பெற்றுத்தர உதவும்.

திட்டங்களுக்கான மேலான படித்தரங்களை பெறுவதற்கான வழிவகைகள் என்ன?

 

1. சிறப்பான உருவகப்படுத்தல்கள் மற்றும் மாதிரிகள்

அதிர்வுகள் எவ்வாறு ஒலி எழுப்புகின்றன என்பதன் செயல்விளக்கத்திற்கு ட்யூனிங் ஃபோர்க் ஒரு கச்சிதமாக ஏற்கத்தக்க வகையாக இருக்கும் போது, எவ்வாறு மூலக்கூறுகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் நடந்து கொள்கின்றன, அல்லது இரண்டு குறிப்பிட்ட இரசாயனங்களை சரியாகக் கலக்குவது அபாயகரமானது என்பதைக் காட்டுவது அபாயகரமானதாகும். இது இணையத்தில் கிடைக்கப் பெறும் பல்வேறு உருவகங்கள் மற்றும் மாதிரிகளைப் பயன்படுத்தி செய்யப்படலாம். மிகவும் சிக்கலான அறிவியல் சார்ந்த கருத்தாக்கங்களுக்கான சிறப்பான உருவகங்கள் மற்றும் மாதிரிகளுக்காக இந்த கட்டுரையைப் பார்க்கவும். பாடம் பற்றிய உங்களின் புரிதலை செயல்விளக்கப்படுத்தவும் உங்கள் திட்டத்தை அழகாக காட்சிப்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தவும்.

 

2. கதை சொல்லுதல் மற்றும் மல்டிமீடியா

ஏதேனும் ஒன்றினை விளக்குவதற்காக அதனை சுற்றி ஒரு கதையை உருவாக்குவதைக் காட்டிலும் ஒர சிறந்த வழி இருக்காது. கதை சொல்வது, அதன் பின்னணியில் ஒலி-ஒளி கருவிகள் இருப்பது உங்கள் திட்டம் தனித்து நிற்பதற்கான ஒரு சிறந்த வகையாகும்! இந்த அணுகுமுறையின் காரணமாக, நீங்கள் உரைநடைப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்காத ஒன்றினையும் அறிந்து கொள்ளக்கூடும், மற்றும் செயல்முறையில் பெரும் மகிழ்ச்சியடையக்கூடும்.

”நீங்கள் சேகரித்துள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதற்காக நீங்கள் எடுத்துள்ள கதை சொல்லும் வழியின் காரணமாக உங்கள் திட்டம் 10/10க்கு பெறுகிறது ” என்கிறார், மகாராஷ்டிராவின் உல்லாஸ் நகர், கெமானி பள்ளியின் முதல்வரும் மூத்த பயிற்றுனருமான,மோனிகா செவானி.

 

3. மறக்கமுடியாத பிரசன்டேஷன்கள் உண்டாக்குங்கள்

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை அவர்களின் பிரசன்டேஷன் திறன்களை சோதிக்கிறார்கள். கல்வியில் பிசி கதை சொல்லிகளில் வெற்றியாளரான அஸ்னா நயீம், ”வேறு எந்த திறன்களையும் போன்று மென்திறன் முக்கியமானது, மற்றும் பவர்பாயின்ட் அசைன்மென்ட்டுகளைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்களின் பிரசன்டேஷன் திறன்களை அழகாக மேம்படுத்திக்கொள்ள முடியும். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பிசி மற்றும் ஒரு நல்ல இன்டர்நெட் இணைப்பும் தான், ஒரு மறக்க முடியாத பிரசன்டேஷன் தயாராகிறது!” என்கிறார்.

மாணவர்கள் கதை சொல்லும் திறனை அறிந்து கொள்ளலாம், அதே சமயம் தொழில்நுட்பத்தின் உதவியுடன்  தொடர்புடைய வகையில் பேசவும் செய்யலாம்.

உங்கள் ஆசிரியர்கள் மற்றும் வகுப்புத்தோழர்களுடன் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை படங்கள் மற்றும் டெக்ஸ்ட்டுடன் ஒரு சிறப்பான பிரசன்டேஷனில் ஒன்று சேர்க்கலாம்.

 

எளிய காகிதம் மற்றும் பேனா திட்டங்களில் இருந்து, இன்றைய கம்ப்யூட்டர்கள் சிறப்பாகவும் அதிக சுவாரசியமான வகையிலும் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதை காட்டுவதற்கு அனுமதிக்கிறது. வெறுமனே தகவல்களைக் காட்டுவதற்கு பதிலாக, பிசிகள் நமது திட்டங்களுக்காக சிறப்பான மதிப்பெண்களை பெறுவதற்கு அனுமதிப்பதற்காக நமது கற்றல்களை வெவ்வேறு வகைகளில் பயன்படுத்துவதற்க்கு அனுமதிப்பதோடு, நாம் ஆற்றலோடு கற்பதற்கும் அவற்றை மகிழ்ச்சியுடன் செய்வதற்கும் அனுமதிக்கிறது.