ஒரு PC யை பயன்படுத்தி ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவ முடியும்

 

இது பள்ளியில் ஒரு கட்டாயமாக இருக்கலாம், ஆனால் இரண்டாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது வேலை செய்யும் உலகில் உங்கள் குழந்தையை தயாராக வைக்கும். இது மிக அவசியமானது ஏனென்றால் இது உங்கள் பிள்ளை ஒரு சவாலை பொறுப்பாக ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கிறது, மேலும் வீட்டில் பேசாத ஒரு மொழியை கற்றுக் கொள்வதையும் இது உள்ளடக்கி இருக்கிறது.

உங்கள் குழந்தைகளுக்கான ஒரு PC மூலம் வீட்டில் ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது மிகவும் எளிதான ஒரு காரியம் தான். உண்மையிலேயே, சொல்ல வேண்டுமானால் அது விரைவானதும் கூட. லேர்னிங் ரிஸோர்சஸ் 24/7 என எப்போதும் கிடைப்பதால், உங்கள் குழந்தைகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களாகவே அதன் பேஸிக்கை கற்றுக் கொள்ள முடியும் – பள்ளி மற்றும் சிறப்பு வகுப்புகளை விட மிக விரைவாகவே கர்றுக் கொள்ளலாம் ஏனென்றால் ஒரு ஊடாடும் முறையில் மற்றும் சந்தோசமான வழியில் புதிதாக ஏதாவது ஒன்றை கற்பது என்பது உற்சாகத்தையேக் கொடுக்கும்.

ஒரு PC, இவ்வாறு தான் உதவியாக இருக்கும்:

 

1) கிராமரைக் கைக்கொள்ளுங்கள்

கிராமர் தான் உங்கள் குழந்தையின் லேர்னிங் ஜர்ணிக்கான முதல் படிநிலை ஆகும். நம்முடைய நாட்டில் கற்பிக்கப்படும் கீழ்வரும் பிராந்திய மொழிகளுக்கான விஷூவல் மற்றும் ஆடியோவிற்கான இரண்டு ரிசோர்ஸஸ்களையும் இந்த மைலாங்குவேஜ் வழங்குவதால் இதுவே ஆரம்பிப்பதற்கான ஒரு இடமாகும்.

1. குஜராத்தி
2. கன்னடா
3. தெலுங்கு
4. பெங்காலி
5. ஹிந்தி
6. மலையாளம்
7. மராத்தி
8. பஞ்சாபி
9. தமிழ்

அதிகமான அரசு தேர்வுகளில், வேர்பல் அல்லது ஸ்பீக்கிங் டெஸ்ட்களும் கூட உள்ளடக்கும். உங்கள் குழந்தை கிராமரின் தெளிவான புரிதலை அடைந்து, அடிப்படை வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அறிந்தவுடன், ஒரு உரையாடலை எளிதாக ஆரம்பிக்க முடியும்.

 

2) மொழி உயிரோட்டமுள்ளதாக மாறுவதை பாருங்கள்

ஒரு மொழியை பேசுவது என்பதே நீங்கள் பாதி வேலையை முடித்து விட்டதற்கு சமம், அது ஒரு மொழியோடு அதிக தனிப்பட்ட பிணைப்பை உருவாக்கிவிடும். YouTube, Voot, Hotstar, Netflix மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்களில் வயதுக்குட்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன உங்கள் குழந்தைகள் சப் டைட்டிலுடன் அதை பார்த்து அந்த மொழிக்கான உச்சரிப்பு, மொழி சார்ந்த நுணுக்கங்கள் மற்றும் புதிய வார்த்தைகளை- உங்கள் குழந்தைகள் ஒரே நேரத்தில் பொழுதுபோக்காகவே கற்றுக் கொள்ளலாம்! இவ்வாறான "பரிச்சயம்" காரணி கண்டிப்பாக அதை நீண்டகால நினைவு கொள்வதற்கு உதவும்.

 

3) ஃப்ளாஷ் கார்டோடு சிறந்த நண்பராகுங்கள்

சொல்லகராதியை கற்றுக் கொள்வதற்காக நிரூபிக்கப்பட்ட ஒரு வழி தான், இந்த ஃப்ளாஷ் கார்டு இது ஒரு மொழியை ஆளுமை செய்வதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் போட்டிக்குரிய வழியாகும். 101 Languages என்பது நம்முடைய மேஜர் ரீஜனல் லாங்குவேஜிகளில் கிடைக்கும் ஒரு அருமையான PC ரிசோர்ஸ் ஆகும்.

1. ஹிந்தி
2. பெங்காலி
3. தெலுங்கு
4. தமிழ்
5. மராத்தி
6. குஜராத்தி

இந்த வெப்சைட் அனைத்து தேவைகளுக்குமான சிறந்த ஒன்று ஆகும், அது அனைத்து அரசு தேர்வுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிகளுக்கும் சிறந்தது.

 

ஒரு டிஜிட்டல் பேரண்ட்டின் சிறந்த பகுதியாக இருப்பது எதுவெனில் வரவிருக்கும் கல்வி ஆண்டுகளில் உங்கள் பிள்ளையின் வெற்றிக்கான வழியை நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.