பெட்டர் ஸ்கூல் ப்ரசன்டேஷனை எவ்வாறு உருவாக்குவது

 

ப்ரசன்டேஷன் என்பது வகுப்பில் பயத்தை உருவாக்கலாம், ஆனால் அதற்கு அவசியமே இல்லை. ஒரு நல்ல வலுவான PC -யுடன் சரியான திட்டமிடலும், தயாரிப்பும் இருந்தால் போதும் அது உலகத்தில் வித்தியாசத்தை வித்திட உதவும். அப்படி உங்களுக்கு ஏதேனும் ஸ்கூல் ப்ரசன்டேஷன் இருந்தால், அதை எளிதாக செய்து முடிக்க நாங்கள் உதவுவோம்.

இத்தகைய சில எளிய டிப்ஸ் மூலம், உங்கள் முழு வகுப்பும் என்ஜாய் செய்யும் அளவிற்கு உங்களால் ஒரு சிறந்த ப்ரசன்டேஷனை உருவாக்க முடியும்!

1. குறிப்பிட்டவாறு இருங்கள்

உங்கள் ப்ரசன்டேஷனை ஆரம்பிக்கும் முன் நீங்கள் உங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள், “என்னால் மூன்று விஷயங்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும் என்றால், நான் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்?”.

இது நோக்கமற்ற எல்லாவற்றையும் விடுத்து பாடத்தை பாயிண்ட்களாக நினைவில் வைத்திருக்க உதவும். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப்போகும் எல்லாவற்றையும் ஒரு செக்லிஸ்டாக உருவாக்கவும் மேலும் பட்டியலில் தேவை இல்லாமல் இருப்பதை அதிலிருந்து அகற்றி விடவும்.

2. படங்களோடு அதை சொல்லவும்

நாம் 90% தகவல்களை காட்சிகள் வழியாக தான் உள்வாங்குகிறோம். காட்சிகள் என்றால் போட்டோகிராஃப்ஸ். டையகிராம்ஸ், சார்ட்ஸ், மேப்ஸ், ட்ராயிங்ஸ் இவை –அனைத்தும் நீங்கள் ப்ரசண்ட் செய்யும் மற்றவர்கள் நீங்கள் சொல்வதை கூர்ந்து ஒரே புள்ளியில் கவனிக்க உதவியாக இருக்கும். நீங்கள் உருவாக்கும் ப்ரசன்டேஷனிற்கு நீங்கள் பயன்படுத்தும் விஷூவல் கூடுதல் ஆதாரம் அளிக்கிறதா என்பதை உறுதி செய்யவும் மேலும் உங்கள் ஸ்லைடை அழகாகவும், நேர்த்தியாகவும் முன் வைக்க ஒரு ஸ்லைடுக்கு படம் வைக்கவும்.

3. டெம்ப்ளேட்ஸ் உடன் பரிசோதனைகள்

மைக்ரோஸாஃப்ட் பவர் பாயிண்ட், கூகுள் ஸ்லைட்ஸ், ப்ரீஸி மற்றும் பிற PC ப்ரசன்டேஷன் டூல்ஸ் போன்றவை நீங்கள் தேர்வு செய்வ்தற்கென பல கஸ்டமைஸபுள் டெம்ப்லேட்ஸ்களைக் கொண்டிருக்கின்றன. அஃபாண்ட்ஸ், ஸ்லைடு ட்ரான்ஸிஷன்ஸ், அனிமேஷன் சவுண்டுஸ், மற்றும் செக்ஷன் ஹெட்டரில் ஆரம்பித்து என்டயர் பேக்ட்ராப் வரை மாற்றங்களை மேற்கொண்டு மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்டும் விதத்தில் ஒரு ப்ரசன்டேசனை உருவாக்க முடியும்.

4. பயிற்சி ஒருவரை பண்பட்டவராக்கும்

உரையாடல்கள் தான் ஒரு சிறந்த ப்ரசன்டேஷன் ஆகும். ஒரு இருவழி உரையாடல் உங்களை (அல்லது உங்கள் குழுவை) மறக்க முடியாத ஒன்றாகவும், கலந்தாய்வில் ஆர்வமாக பங்கேற்கவும் ஏதுவானவர்களாக்கும். இது உங்கள் ஆசிரியர்கள் பாராட்டும் ஒன்று ஆகும். உங்கள் பொது மேடை பேச்சுத் திறன் நம்பிக்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் முன்னிலையில் உங்கள் ப்ரசன்டேஷனை பழகவும் மேலும் உங்கள் ப்ரசன்டேஷனை இன்னும் சிறப்பாக்க அவர்களின் கருத்துக்களை பெறவும். நினைவில் கொள்ளவும், ஒவ்வொரு முறையும் நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்யும் போது, உங்கள் பாயிண்ட்ஸை தெளிவாகவும், விரைவாகவும் செய்ய உங்களால் முடியும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தால், சரியான தகவல் மற்றும் டிசைனுடன் சேர்ந்த கொஞ்சம் ப்ரசன்டேஷன் பயிற்சி மட்டுமிருந்தால் உங்கள் பிரசன்டேஷனை பள்ளியில் நீங்கள் சிறப்பான விதத்தில் முன் வைக்க உதவியாக இருக்கும்.

இந்த ஆர்டிக்கல் பயனுள்ள விதத்தில் இருக்கிறதா? பள்ளிக்கான அதிக பயனுள்ள உதவிக்குறிப்புகளுக்கு, நீங்கள் உங்கள் ப்ரொஜக்டிற்கு 10/10 எப்படி பெறுவது என்பதை படியுங்கள்.