கணினி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவது எப்படி

இணையம் என்பது கற்றுக்கொடுக்கவும் மற்றும் தகவலளிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு தலைப்பையும் குறித்த தரவு மற்றும் தகவல்களைக் கொண்ட ஒரு புதையலாகும். அதே நேரத்தில், தவறான தகவல்களையும் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிதாக இருக்கிறது. அத்தகைய தகவல்களை அணுகுவதிலிருந்து மாணவர்களை தடுக்க பள்ளியில் சில நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். [1]

பின்வருமாறு நீங்கள் செய்யலாம்:

1. வயதுவந்தோர்க்கான உள்ளடக்கம் உள்ள வலைத்தளங்களின் அணுகலை தடுக்கவும்

போதைப் பொருட்கள், துப்பாக்கிகள் அல்லது குழந்தைகள் பார்க்கக் கூடாதவற்றை ஊக்கப்படுத்துகிற கிராஃபிக் உள்ளடக்கம் உள்ள ஏராளமான சூதாட்ட தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஏராளமாக உள்ளன. பருவம் வந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் வயதுவந்தோர்க்கான வலைத்தளங்களை தேடுகிற வேளையில், இளம் குழந்தைகள் (பொதுவாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் புகைப்படங்கள் அல்லது இணைப்புகளை சொடுக்குவதன் மூலம்) தற்செயலாக அவற்றில் விழுந்துவிடக் கூடும். இந்த காரணத்திற்காக, வயதுவந்தோர்க்கான வலைத்தளங்களின் அணுகலை பள்ளியில் உள்ள கணினிகளில் தடை செய்ய வேண்டும்.

2. VPNகள்- மூன்றாம் தரப்பு கோப்பு பகிர்வை தடுப்பதன் மூலம் பதிவிறக்கத்தை தடுக்கவும்

ஒரு குடைவை உருவாக்குவதன் மூலம் செயல்பாட்டிலுள்ள பாதுகாப்பு தடைகளை கடந்து செல்ல ஒரு VPN (மெய்நிகர் தனியார் பிணையம்)  மக்களை அனுமதிக்கிறது. மாணவர்கள் இணைய தடை பிரிவுகளை அணுகுவதை அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்வதை  தடுக்கும் நெட் நானி, நார்டன் ஃபேமிலி அல்லது K9 வலை பாதுகாப்பு போன்ற மென்பொருளை பயன்படுத்தவும்.

3. கோப்பு அணுகலை கட்டுப்படுத்தும் அணுகல் வடிகட்டிகளின் பயன்பாடு

அணுகல் கட்டுப்பாடு பட்டியல் (ACL) ஆனது கணினியில் பயனர்கள் எதை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கிறது. இணையத்திலிருந்து பொருளை பதிவிறக்கம் செய்வதிலிருந்து மாணவர்களை தடுக்க, கோப்புகளை பதிவிறக்கம் செய்வதிலிருந்து அவர்களை தடுக்க ACL-யினை மாற்றியமைக்க வேண்டும். கோப்பு அணுகல் வடிகட்டிகளைக் கொண்ட பல்வேறு இணைய சேவைகளை பயன்படுத்தி இதை செய்யலாம். பிற கோப்புகளை வைத்திருக்கும் போது, இந்த வடிகட்டிகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. [3]

மிக முக்கியமான காரணி என்னவென்றால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகமானது பள்ளி சுவர்களுக்குள் மாணவர்கள் அணுகுவதற்கு உகந்த வலைத்தளங்களை தீர்மானிக்க வேண்டும் மற்றும் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய அணுகலை வடிகட்டும் போது, மாணவர்களால் இன்னும் அது தொடர்புடைய அல்லது ஏற்புடைய தகவல்களை அணுக முடிகிறதா என்பதை சரிபார்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கில் சேவையளிப்பதற்காக, மேக்ஃபீ ஒருங்கிணைக்ப்பட்ட பாதுகாப்பு சேவைகளுடன் பல AIO டெஸ்க்டாப்கள் வருகின்றன, இவை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்கின்றன. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, பள்ளியில் மாணவர்களுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவோம்.