ஒரு ஆசிரியராக LinkedIn – ஐ சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி

 

உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் நீங்கள் இணைய உதவுவதால், வலையமைப்பினை மேற்கொள்ள உங்களுக்கான ஒரு அத்தியாவசியமான டூல் LinkedIn ஆகும். ஆனால், அதை பயன்படுத்துவதற்கு முன்பாக, நீங்கள் சரியான பாதையில் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் உங்கள் விபரக்குறிப்பை மேம்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும் – இது உங்களுக்கான வழிகாட்டி:

 

1. ஒரு ஹெட்ஷாட்டை அப்லோடு செய்யவும்

உங்களுடைன LinkedIn புரொஃபைலுக்கு, உங்களது ஒரு தொழில்நிபுணத்துவ ஹெட்ஷாட்டை பயன்படுத்தவும். புகைப்படம் இல்லாத அல்லது குழு புகைப்படம் வைத்திருக்கும் நபர்களைக் காட்டிலும், முறையான புரொஃபைல் படங்களை வைத்திருப்பவர்கள் 14X அதிகம் பார்க்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.

 

2. ஹெட்லைன்

ஆம், உங்கள் ஹெட்லைன் முக்கியமானதாகும்! ஒரு கவர்ச்சிகரமான ஹெட்லைன், உங்களை போன்ற விருப்பங்களைக் கொண்டிருக்கும் பிற நபர்களை தேடுகையில் அவர்களுக்கு சிறப்பான முடிவுகளை வழங்கும். அது, LinkedIn-ல் உங்கள் பெயருக்கு அருகில் தோன்றுவதால், மக்களின் கவனத்தை சரியாக ஈர்க்க அது ஒரு சிறந்த வழியாகத் திகழ்கிறது.

 

3.சுருக்கம்

உங்கள் ஹெட்லைன் சரியான நபர்களின் கவனத்தை ஈர்த்த பின்பு, அவர்களை மேற்கொண்டு உங்களைப் பற்றி படிக்கவைக்க வேண்டும். அதற்கேற்றவாறு உங்கள் கதையை வடிவமைக்கவும் மற்றும் எது முக்கியம் என்பதை காட்டவும், உங்கள் சாதனைகளை மற்றும் முக்கியத் திறன்களை, உங்கள் அசல் தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தவும்.

 

4. அனுபவம்

குறைந்தபட்சம் இரண்டு முந்தைய பணிகள் குறித்து குறிப்பிட வேண்டியது மிகவும் முக்கியமாகும். மேலும், நீங்கள் எதிர்நோக்கும் புதிய வகை பணி குறித்தும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் பயணிக்க விரும்பும் பாதை – நீங்கள் தேடுவது குறித்தும் விளக்கவும்

 

5. பரிந்துரைகள்

உங்களை பரிந்துரைக்குமாறு ஒன்று அல்லது இரண்டு நபர்களை கேட்டக்கொள்ளவும். அது உங்கள் விபரக்குறிப்பிற்கு மதிப்பினை சேர்க்கும். பரிந்துரைகள் உங்கள் விபரக்குறிப்பின் மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பதால், நிங்கள் காண்பிக்க விரும்பும் குறிப்பிட்ட திறன்களின் மீது கூர்நோக்கம் கொண்டிருக்கவும்.

 

6. போனஸ் – அடிக்கடி அப்டேட் செய்யவும்

எந்தவொரு பிற சமூக ஊடகச் சேனல்களையும் போல், உங்களுக்குப் பலன் கிடைக்க வேண்டுமெனில், LinkedIn -ஐயும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கல்விகுறித்த போஸ்டுகளை பகிரவும், கட்டுரைகளில் கருத்து தெரிவிக்கவும்,நடப்பு மற்றும் முன்னாள் சக பணியாளர்கள், குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கவும், உங்களது சாதனைகளை புரொஃபைலில் தொடர்ந்து நிகழ்நிலைபடுத்தவும் மற்றும் செய்திகளுக்கு சரியான நேரத்தில் பதிலளிக்கவும், கற்பித்தல் உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்து எப்போதும் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

 

எனவே, மேற்கொண்டு முன்னேறுங்கள் மற்றும் உங்கள் கற்பித்தல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் அதே நேரத்தில்,LinkedIn-ன் பலன்களையும் அனுபவியுங்கள்.