ஒரு டெக்- சாவி குழந்தையை எவ்வாறு உருவாக்குவது

“IT+IT=IT

இண்டியன் டேலண்ட் + இன்பாஃர்மேஷன் டெக்னாலேஜி = இண்டியா டுமாரோ

-நரேந்திர மோடி

 

இன்றைய காலகட்டத்தில் சோசியல் உலகம் என்பது  தனிப்பட்ட நடத்தைகள் வழியாக குறைவாகவே இருந்தாலும்,  நுட்பங்கள் மூலமாகவே அதிகமாக வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் புத்திசாலிகளாக, கவனிப்பவர்களாக, மற்றும் தொழில்நுட்ப வழிகளுக்கு தகவமைப்பு செய்பவர்களாக இருக்கிறார்கள்.

தொழில்நுட்பம் திறம்பட மற்றும் அதன் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த, ஒரு சீரான தொழில்நுட்ப ஆர்வலரான குழந்தையை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த சில கருத்துக்களை பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

  • தொழில்நுட்பம் தொடர்பான விவாதங்களில் அவர்களைத் தூண்டுவதன் மூலம்- தொழில்நுட்ப நன்மைகள் பற்றி உங்கள் குழந்தையுடன் கலந்துரையாட தயாராக இருங்கள். அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும், குறிப்பாக அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பிசிக்கள் குறித்த ஆரோக்கியமான கண்ணோட்டத்தை தீவிரமாக ஊக்குவிக்கவும். அவர்களிடையே பொறுப்புணர்வு உணர்வை ஏற்படுத்த அதன் நன்மை தீமைகள் பற்றி விவாதிக்கவும். 
  • கல்வித் துறையில் தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்பு - 5-24 வயது வரம்பில் உள்ளவர்கள் என பார்க்கு போது உலகிலேயே அதிக மக்கள் தொகையை இந்தியா கொண்டுள்ளது, இது கல்வித்துறையில் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது(ibef.org- July 2019). மாணவர்கள் தங்கள் உயர் கல்வியிலிருந்து தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அனுபவங்களை எதிர்பார்க்கிறார்கள். இதில் நிரம்பி வழியும் உள்ளடக்கம், கல்வி வீடியோக்கள், நிகழ்நேர பயிற்சி ஆகியவை எளிதில் கிடைக்கின்றன, இது கல்வி முறையை முற்றிலும் புதிய முறையில் மாற்றியுள்ளது. முன்பெல்லாம், ஒவ்வொரு பாடத்திற்கும் என ஒரு மாணவர் வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயணிக்க வேண்டியிருந்தது, ஆனால் நிகழ்நேர பயிற்சி  கல்வி மூலம் அவர்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு, முதலிட பயிற்சியைப் பெறுகின்றனர்.
  • தொழில்நுட்பத்தை ஒரு துணையாக கருதுதல் – ஒரு டெக் – சாவி குழந்தையாக,  அவர்கள் அவர்களது கெட்ஜட்டை ஆர்வத்தோடு பயன்படுத்தும் போது அது ஒரு துணை ஆகும். ஒரு  PC – என்பது ஒரு மெஷினுக்கும் மேலானது. இது கற்றலுக்கான ஒரு ஊடகம், ஒரு சர்வதேச நிறுவனம்,  ஒரு சிறந்த கதைசொல்லி மற்றும் இன்னும் பல ஆகும்!.
  • நடுநிலையைக் கொண்டிரு - தொழில்நுட்பத்தையே நீண்டகாலமாக நம்பியிருப்பது என்பது அதன் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எல்லா தகவல்களும் உண்மையான ஆதரவுடன் இருக்க முடியாது, ஆனால் ஒரு குழந்தைக்கு, கூகிள் என்பது ஊடுருவும் அறிவின் ஒரு வழிமுறையாகத் தோன்றலாம். ஒரு குழந்தை பெற்றோரின் நடத்தையை பின்பற்ற முனைகிறது. அதனால் நீங்கள் ஒரு சமநிலையை அடைவதை உறுதிசெய்து, உங்கள் குழந்தைகளுடன் தனிப்பட்ட முறையில் நேரத்தை செலவிடுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்  ஒரு PC என்பது கற்றலின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.  ஒரு பெற்றோராக ஒருவர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சரியான PC யைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் குழந்தைகள் வளர உதவுவதற்கு அதன் ஒரு பகுதியாக அது இருக்க வேண்டும்.