பரிட்சையின் போது மனஅழுத்தத்தை எவ்வாறு குறைப்பது

 

நீங்கள் பரிட்சை குறித்து அதிக கவலைபடும்போது, மனஅழுத்தம் உங்களை வருத்தும். அது உங்கள் ரிசல்ட்டை பாதிப்பதற்கு முன், நீங்கள் சிறப்பாக ஸ்கோர் செய்வதற்கு நோ ஸ்ட்ரெஸ் எக்ஸ்பிரஸை பெறுங்கள் மேலும் உங்கள் படிக்கும் ப்ரொஸஸை உண்மைகாகவே அனுபவிக்க ஆரம்பியுங்கள். அதற்கு இவ்வாறாக தான் ஒரு PC உங்களுக்கு உதவும்.

1. எல்லாவற்றிற்கும் காரணம் நேரம் தான்

பாடத்தைக் குறித்து தேர்வுக்கு ஒரு நாள் முன்பு எழும் சந்தேகத்தை விட வேறு மோசமான காரியம் எதுவும் இருக்காது. அதனால் தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நீங்கள் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பது மிகவும் நல்லது. நீங்கள் எந்த அளவுக்கு பாடத்தை ரிவிஷன் செய்கிறீர்களோ மேலும் கேள்விதாள்களை பயிற்சிசெய்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் தேர்வு நேரத்தில் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள்.

2. திட்டமிடுவதின் பலன்கள்

திட்டமிடுவது என்பது எல்லோருக்குமே இயற்கையாகவே வராது மேலும் ஆரம்பத்தில் இது பயமுறுத்துவதாக இருக்கலாம். இருப்பினும், கூகுள் காலண்டர் போன்ற கருவியைக் கொண்டு, ஒரு தெளிவான பாதையைப் பெற முடியும் அதாவது ஒரு பாடத்தை முடிக்க, கடினமான பாடத்தை முதன்மைபடுத்த சரியாக எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கண்டுகொள்ளமுடியும் மற்றும் இடையிடையே இடைவேளைகளையும் எடுக்க முடியும்.

3. இடைவேளைகளும் நல்லது தான்

இடைவேளையே எடுக்காமல் தொடர்ந்து படிக்கிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் சோர்வடையலாம் மேலும் தொடர்ந்து படிப்பதற்கு சலிப்பு ஏற்படலாம் அல்லது இரண்டுமே இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, ஒரு மணிநேரத்தை நீங்கள் படிப்பதில் கவனத்தை செலுத்துவதற்கும், பதினைந்து நிமிடம் விளையாடுவதற்கு என்றும் நேரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.

4. வெளியே பேசிவிடவும்.

பகிரப்பட்ட பிரச்சனை பாதி தீர்ந்ததற்கு சம்மாகும். குழந்தைகள் சமூக வலைதள நெட்வொர்க்கில் அவர்களுக்கான குழுவை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது விக்கிஸ்பேஸ் கிளாஸ்ரூமில் இணைந்து (இந்த வெப்சைட்டில் டீச்சர்ஸ் மற்றும் ஸ்டூடண்ட்ஸ்அவர்களுக்குரிய பாடத்திற்குரிய குறிப்புகளை சேர்க்கலாம்) ஏதாவது சந்தேகமிருந்தால் சக வகுப்பினரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் மேலும் மன அழுத்த எண்ணங்கள் வெளியே கொட்டிவிடலாம்.

5. ஒரு தெளிவான மனம் ஒரே புள்ளயில் கவனம் செலுத்தப்பட்ட மனத்திற்கு சமம்

நாம் மனஅழுத்தத்திற்கு ஆளாகும்போது, நாம் அதிகமாக ஓவர்- திங்க் செய்வோம் மேலும் நம்மை நாமே குழப்பிக் கொள்வோம். மைண்டு மேப்பிங் என்பது சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவுகிறது மேலும் அவைகளை பயன்பாட்டிற்கான கருத்துக்களாக மாற்றுகிறது, கடினமான பாடத்தை சிறு சிறு பிரிவாக உடைத்து புரிந்து கொள்ளக் கூடிய துணுக்குகளாக மாற்றுகிறது.

தேர்வு நேரத்தில் நமது மனஅழுத்தத்தை குறைப்பதோடு, ஒரு PC, அது முழு வருடத்திற்குமான அனைத்து பயன்பாட்டையும் கொண்டிருக்கிறது. ப்ரொஜக்ட் ரிசர்ச்சியிலிருந்து எஸ்ஸே ரைட்டிங் வரையில், ஒரு PC தான் உலகத்திற்கான ஒரு ஜன்னல், அதில் நீங்கள் விளையாட்டாகவும், ஆர்வத்தோடும் பலவற்றைக் கற்றுக் கொள்வதோடு உங்கள் ப்ரொஜக்ட்டில் -ஐ பெறுவதற்கான உங்கள் வாய்ப்பையும் அதிகரிக்கும்.