ஈ-லேர்னிங் (E-learning) முறைக்கு மாற உங்கள் குழந்தைக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்

 

கற்றல் முறையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பெற்றோர்களும் ஈ-லேர்னிங் (E-learning) முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பயனுள்ள ஊடாடும் கணிப்பொறி சார்ந்த கற்றல்முறை மூலம் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் நீங்கள் பங்குபெற இது தான் தருணம்.

 

உங்கள் குழந்தைக்கு ஆன்லைன் வகுப்புகளைப் பயனுள்ளதாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்ளும் முன்பு, ஈ-லேர்னிங் (E-learning) குறித்த சில கட்டுக்கதைகளை உடைக்கும் உண்மைகள் இதோ.

 

-இது பயனுள்ள கற்றல் முறை அல்ல

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவைப் புகட்ட உதவும் ஊடகமாக தொழில்நுட்பம் இயங்குகிறது. ஆசிரியர்களின் நிபுணத்துவம் அப்படியே தான் இருக்கிறது.

 

-இது தாக்கத்தை ஏற்படுத்தாது

மாணவர்களுடன் ஈடுபட ஆசிரியர்களிடம் பல கருவிகள் இருக்கலாம், இதனால் தாக்கம் அதிகமாகத் தான் இருக்கும்.

 

-இதில் ஊடாட முடியாது

மதிப்பீடு, ஆன்லைன் வினாவிடை, வாக்கெடுப்புகள், ஒலி மற்றும் ஒளி மூலம் ஆன்லைன் கற்றல் முறையானது நேரில் கற்பதை விட இன்னும் அதிக ஊடாடுதல் மற்றும் ஈடுபாட்டைத் தருகிறது.

 

கற்றல் முறையில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து உங்கள் குழந்தையின் கல்வியில் ஈடுபட்டிருக்க பெற்றோர்களாக நீங்கள் செய்யவேண்டியவை இதோ:

  • குறைந்தபட்ச கவனச்சிதைவுகள் இருக்குமாறு படிப்பிற்காக ஒரு தனியான இடத்தை உங்கள் குழந்தைக்கு அமைத்துத் தந்து உதவுங்கள்.
  • பள்ளி செல்லும் பொழுது பின்பற்றிய அதே நேர அட்டவணையை இப்பொழுதும் குழந்தையைப் பின்பற்ற வையுங்கள்.
  • இடைவெளியின் பொழுது அவர்களுடன் நேரம் செலவழிக்குமாறு உங்கள் அட்டவணையையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
  • அவர்களது பணிகள் மற்றும் வீட்டுப்பாடங்களை பிரிண்ட் எடுத்து கொடுத்து திரையில் அவர்கள் செலவழிக்கும் நேரத்தைக் குறையுங்கள்.
  • மற்ற பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து உங்கள் குழந்தை கொடுக்கப்பட்ட பணியை முடிகிறதா என்று பாருங்கள்.

 

கல்விக்காக டெல்(Dell for education) முயற்சியின் மூலம் வீட்டில் சரியான ஆன்லைன் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்த உதவும் இணையவழி கருத்தரங்கங்கள் வெளியிட்டுள்ளோம். ஆன்லைன் கற்றலில் உங்கள் பங்கு, சமூக-மனநல திறன்களை வளர்த்தல், கற்றலுக்கான ஒரு இடத்தை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கூட்டணி அமைத்தல் மற்றும் வீட்டில் கற்பதை அதிகரித்தல் ஆகியவற்றைக் குறித்து நீங்கள் அறியலாம்.

 

நாம் அனைவரும் ஒன்றாக, கல்வியின் புதிய அலையை ஏற்றுக்கொண்டு, எதிர்கால கற்றல் முறையை இரு கைகள் கொண்டு அணைப்போம். இங்கே அழுத்துவது போன்று அதுவும் மிக எளிதானது.

(https://www.dellaarambh.com/webinars/)