ஹைபிரிட் மற்றும் கலவை கற்றல் முறை

சில வருடங்களுக்கு முன்பு வரை கற்றல் என்பது வகுப்பறைகளுக்குள் மட்டுமே என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2020 முதல், பெருந்தொற்றின் காரணமாக மெய்நிகர் வகுப்பறைகளுக்கு கற்றல் நகர்ந்துசென்று விட்டது. லாக்டவுன் தளர்த்தல்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தினால், ஹைபிரிட் மற்றும் கலவையான கற்றல் முறைகள் மூலம் மீண்டும் பழைய வழக்கத்திற்குத் திரும்ப நாம் முயற்சி செய்கிறோம்

ஹைபிரிட் கற்றல் மற்றும் கலவையான கற்றல் முறை இரண்டும் ஒன்று தான் என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இரண்டிலும் ஆன்லைன் மற்றும் நேரில் நடக்கும் வகுப்புகள் என்று ஒரே கூறுகள் இருந்தாலும் கூட இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. இரண்டையும் வேறுபடுத்திக்காட்ட உங்களுக்கு உதவும் சில புள்ளிகள் இதோ:

  • ஹைபிரிட் கற்றல் என்பது சில மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் சென்று, சிலர் PC மூலம் கல்வி கற்கும் முறையாகும். வகுப்பில் உள்ளவர்களுக்கு நேரடியாகவும் ஆன்லைனில் கற்பவர்களுக்கு வீடியோ கலந்துரையாடல் போன்ற தொழில்நுட்பத்தையும்  ஒரே நேரத்தில் ஆசிரியர் அல்லது பயிற்றுனர் உபயோகிப்பர்.
  • கலவையான கற்றல் முறையில் மாணவர்களுக்குக் கற்பிக்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வளங்கள் இரண்டையும் கலந்து ஆசிரியர் அல்லது பயிற்றுனர் உபயோகிப்பார். சில பயிற்சிகள் PC கற்றல் முறையிலும், சில பயிற்சிகள் நேரடியாக வகுப்பறையிலும் நடைபெறும்.
  • ஹைபிரிட் கற்றலில், PC சார்ந்த கற்றல் மற்றும் நேரடி கற்றல் இரண்டிற்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மாணவர்களைப் பொறுத்தது.
  • அதேநேரத்தில், கலவையான கற்றல் முறையில் ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சிகளை ஆசிரியர் முடிவெடுப்பார்.
  • ஹைபிரிட் கற்றலில் நேரடியாக மற்றும் ஆன்லைனில் கற்பவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்கள்.
  • கலவையான கற்றல் முறையில் அதே மாணவர்கள் தான் நேரடியான மற்றும் ஆன்லைன் வகுப்பு இரண்டிலும் பங்கேற்பார்கள்

இரண்டு வகையிலும் PC சார்ந்த கற்றல் மற்றும் நேரடி கற்றல் முறை இரண்டையும் உபயோகித்தாலும் கூட, இரண்டும் வெவ்வேறு கற்றல் முறைகள். இது போன்ற தருணங்களில், இரண்டு கற்றல் முறைகளுமே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்மை தரக்கூடியது.