இந்தத்திட்டத்தின் தாக்கம

இந்தியாவில் கணிப்பொறி ஊடுருவல் பிரச்சனையைக் கவனிக்க நாங்கள் டெல் ஆரம்ப்(Dell Aarambh) திட்டத்தைத் துவங்கினோம். தொழில்நுட்பத்தின் சக்தி கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கல்விக்கான ஒரு துவக்கத்திட்டமே ஆரம்ப்(Aarambh) ஆகும். இந்தியா முழுவதிலும் கணிப்பொறி குறித்த எண்ணம், பயன்பாடு மற்றும் கணிப்பொறி கல்வியில் ஒரு புரட்சி ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் ஆகும்.

 

 

தாக்கத்தைக் கணக்கிடுதல்

இந்தத் திட்டத்தினால் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் நடுவே உருவாக்கும் கணினியின் விருப்பத்தை மற்றும் இதன் பொருந்தும் திறனை நாங்கள் கந்தர்(Kantar) அறிக்கை மூலம் கணக்கிட்டோம். பயிற்சியை எடுத்துக்கொண்ட ஒரு சோதனைக் குழு மற்றும் எடுக்காத குழு இரண்டிற்கும் முறைப்படுத்திய நெறிமுகத் தேர்வை நடத்தினோம்.

100% ஆசிரியர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சராசரியாக 66% பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி மற்றும் 15 கணிப்பொறிகள் இருக்கும் நிலையில், செயலி வாரியாக உபயோகத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம்.

 

 

பயிற்சி

10 இல் 8 ஆசிரியர்கள் இதன் உள்ளடக்கம் எளிதாக, முறையாக, பயனுள்ளதாக மற்றும் தெளிவாக இருப்பதாகக் கூறினர். இந்தப் பயிற்சியின் எண்ணிக்கை 3 மாதத்திற்கு ஒரு முறை என்று அதிகரிக்க அவர்கள் விரும்பினார்கள். 10 இல் 8 ஆசிரியர்கள் இணைய வழி பயிற்சியில் சௌகரியமாக உணர்ந்தனர்.

 

 

கருத்து மாற்றம்

கணிப்பொறி குறித்தானக் கருத்து கணிசமாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் இப்பொழுது சுய-கற்றலுக்கும் வகுப்பறை பாடங்களைத் தயார் செய்யவும் கணிப்பொறி மற்றும் ஸ்மார்ட்போர்டுகளை உபயோகிக்கின்றனர்.

கணிப்பொறியானது கல்வியில் நேர்மறையான பங்கு வகிக்கின்றது என்று பயிற்சி பெற்ற 92% ஆசிரியர்கள் நினைக்கின்றனர். அதில் 68% ஆசிரியர்கள் கணிப்பொறியில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றனர். கட்டுப்பாட்டுக் குழுவில் 83% கணிப்பொறி பொருத்தமாக இருப்பதாக உணர்கின்றனர்.

 

 

பயிற்சியின் தாக்கம்

பாடத்திட்டங்கள் உருவாக்க, உதாரணங்கள் மற்றும் AVக்கள் மூலம் ஒரு கருத்தினைப் பயனுள்ளதாக எடுத்துக்கூற மற்றும் இருக்கும் இடத்தில் இருந்தே தொலைவில் இருக்கும் மாணவர்களுடன் இணைந்திருக்க கணிப்பொறிகளைத் தாமாக உபயோகிக்க ஆசிரியர்கள் இப்பொழுது விரும்புகிறார்கள். இது இப்பொழுது சிறிய நகரத்தில் உள்ள ஆசிரியர்களிடம் அதிகரித்துள்ளது.

பாடத்திட்டங்களை உருவாக்குவது, வீட்டுப்பணிகளை கொடுப்பது, மாணவர்களுடன் இணைந்திருப்பது மற்றும் ஸ்மார்ட்போர்டுகளை உபயோகிப்பது ஆகியவற்றை கணிப்பொறியின் உபயோகமானது பல வகைகளில் விரிவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் எதிர்மறை எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் கூட கணிப்பொறியில் நிபுணத்துவம் பெற்றுவிட்டனர்.

 

 

கணிப்பொறி சார்ந்த எதிர்காலம்

ஆசிரியர்கள் சுயமாக கணிப்பொறியினை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்(37%), அவர்கள் ஸ்மார்ட் வகுப்பறைகளில் 100% வருகை இருப்பதாகவும் நினைக்கின்றனர்.

கல்வித்துறையில் முழுமையான மாற்றம் கொண்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முதல்வர்களிடம் இருந்து பரவலான ஒப்புதலுடன், இனி வரும் காலங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்க நாங்கள் விழைகின்றோம்.