ஊடாடலுடன் கூடிய கற்றல் குழந்தைகள் சிறப்பாகக் கற்க உதவுகிறது.

கல்வி என்பது நிலையாக மாறிக்கொண்டிருக்கும் ஒன்று. கற்றலை குழந்தைகளுக்கு வேடிக்கையானதாகவும், ஈடுபாடு மிக்கதாகவும் ஆர்வமானதாகவும் ஆக்குவதற்கான முறைகளை கல்வியாளர்கள் நிலையாக ஆய்ந்து வருகிறார்கள். கற்றலுக்கான முக்கயி முறைகளில் ஒன்று, வகுப்பறைக்கும் அதற்கு அப்பாலும் ஆற்றல்மிக்கதாக காட்டப்படுகிற, ஊடாடலுடன் கூடிய கற்றலாகும்.

ஊடாடலுடன் கூடிய கற்றல் என்பது கற்றலுக்கான செய்முறையுடன் கூடிய, உண்மையான உலக அணுகுமுறையாகும். அது அறிவுக்கும் புரிதலுக்குமான செயல்முறையாகும்; அது வெறும் நுகர்வதற்காக மட்டும் அல்லாமல் பாடங்களில் ஈடுபடுவதற்கும்  தேவைப்படுகிற பயன்பாடு மற்றும் அறிவுக்கான செயல்முறையாகும். ஊடாடலுடன் கூடிய கற்றல் ஈடில்லாத கற்றல் அனுபவத்தைக் குழந்தைக்கு தருகிற தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிப் பொருட்களைக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு குழந்தைகளின் சிறப்பாக ஆக்கவதற்கு அது உதவுகிறது

1. முக்கியமான சிந்தனை மற்றம் பிரச்சனை தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது

மிகவும் செயல்திறமான சூழலில் வளர்க்கப்பட்ட மாணர்வகளை ஈடுபடுத்துவதற்குக் கூடுதலாக, பகுப்பாய்வு சார்ந்த நியாய விவாதங்களின்  மேபாட்டிற்கான அடிப்படையாக இருக்கும் முக்கியமான சிந்திக்கும் திறனை ஊடாடலுடன் கூடிய கற்றல் கூராக்குகிறது. [1]

கணிதம் குறிப்பாக பல மாணவர்களால் விரும்பப்படாத ஒன்று. பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணும் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவும் ஊடாடல் மிக்க விளையாட்டுகளின் உதவியுடன் இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்படலாம்.

2. உண்மை வாழ்க்கையின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான திறன்களை வளர்க்க   மெய்நிகர் பாத்திரமேற்றல் உதவுகிறது.

பாத்திமேற்றல் மற்றும் ஊடாடலுடன் கூடிய விளையாட்டுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது அவர்களின் தனிப்பட்ட, தலைமைத்துவ, குழுவாக செயல்படுகிற மற்றும் கூட்டுத்திறன்களை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உண்மை உலகப் பிரச்சனைகளுக்கான அவர்களின் கண்களை திறக்கிறது. ‘ஸ்டார்கிராஃப்ட்’ போன்ற குறிப்பிட்ட இணைய உத்திமுறை விளையாட்டுகள் கற்பனையான மற்றும் உண்மை வாழ்க்கை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறனை மேம்படுத்துகிறது, இது எவ்வாறு சாத்தியமாகிறது என்றால், அவை உத்திமறைத் திட்டங்களை வகுத்

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் பயனுறு இயற்பியலுக்கான, பேராசிரியரான எரிக் மஜூர், பல்கான்ஸ்கியைப் பொருத்தவரை, ஊடாடலுடன் கூடிய கற்றல் குழுக்களாக ஒருங்கிணைந்த எவ்வாறு வெற்றிகரமாக  வேலைசெய்வது என்பதை  கற்பிக்கிறது, அது கட்டமைப்பில் குழு அடிப்படையிலானதாக ஆகும் பணியிடங்களுக்குத் தவிர்க்க முடியாத திறனாகும்.

3. தங்களிடம் இருக்கும்  வேலையின் மீது கவனத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கிறது. 


ஊடாடலுடன் கூடிய கற்றல், மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய ஒரு கற்றல் வகையாகும். படிப்பில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதால், கையில் உள்ள வேலையின் மீது அவர்களின் கவனமும் அர்ப்பணிப்பும் அதிகரிக்கிறது. இணையத்திலிருக்கும் சில குறிப்பிட்ட ஃபிளாஷ் விளையாட்டுகள் குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்த உதவுகின்றன ம்ற்றும் பலருக்கு இருக்கும் ADHDக்கான ஒரு நிவாரணமாக அறியப்படுகிறது.

4.அது மாணவர்களை படைப்பாற்றல்மிக்க மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை எதிர்பார்க்கச் செய்கிறது.

ஊடாடலுடன் கூடிய கற்றல் என்பது வழக்கமான “இரண்டும் இரண்டும் நான்கு” என்கிற கற்றல் வகையை சார்ந்ததல்ல. உரைநடைப் புத்தகங்களுக்கு அப்பால் வழக்கமான உணராக் கற்றல் முறைகளில் இருந்து விலகி செல்ல அது தயங்கவில்லை. அது மாணவர்களுக்கு தொடர்புடைய கருவிகளோடு புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்குவதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. பிரச்சனைகளை மற்றும் கற்றல் பொருட்களை,  அலசி ஆராய்வதற்கு மாணவர்களைத் தூண்டுவதன் மூலம்,எவ்வாறு தெளிவாகவும் ஆற்றலுடனும் சிந்திப்பது என்பதை அவர்களுக்கு கற்பிக்கிறது. [2]

ஊடாடலுடன் கூ டிய கற்றல் வழியாக குழந்தைகள் கற்கும் போது, அவர்கள் கருத்துருக்களை சிறப்பாக புரிந்துகொள்கிறார்கள் மற்றும் தங்களின் வாழ்வில் அவற்றை ஆற்றலுடன் பயன்படுத்த முடிகிறது. ஊடாடலுடன் கற்பதற்கான உண்மையான குறி என்பது தொழில்நுட்பக் காலத்தில் ஊடாடலுடன் கூடிய கற்றல் என்பது நுகர்விலிருந்து மாணவர்கள் பொருள் உருவாக்கத்திற்கு செல்லச் செய்கிற ஒரு முக்கியமான வேறுபடுத்தியாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் என்பது ஊடாடலுடன் கூடிய கற்றலை அறிமுகப்படுத்துவதற்கும் இதையொட்டிய முக்கிய அடிப்படைக் கருத்துருக்களுக்கான ஒரு சிறந்த கருவியாகும். குழந்தைகளின் கற்றல் மற்றும் மேம்பாட்டில் கம்ப்யூட்டரின் பங்கினை பெற்றோர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள் மற்றும் அதை தங்கள் இல்லங்களில் வரவேற்கத் துவங்கியிருக்கிறார்கள். கல்விக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் போது ஒரு கம்ப்யூட்டர்  குழந்தைகள் கற்றலை அனுபவித்து மகிழ்வதற்கும், அவர்களை அறிவார்ந்தவர்களாக ஆக்குவதற்கும் படைப்பாற்றல் மிக்க தனிநபர்களாக ஆக்குவதற்கும் உதவுகிறது.

சுபம் நாசிக்கில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் அவன் கம்ப்யூட்டரின் காரணமாக கல்வி சார்ந்த கருத்துருக்களில் தெள்ளத்தெளிவாக இருக்கிறான்.  கம்ப்யூட்டர் கற்றலை வேடிக்கையானதாக ஆக்குகிறது, சுபம் அதற்கான ஒரு சான்று.

தங்களின் கருத்துருக்களை சிறப்பாக கற்பதற்காக குழந்தைகளுக்கு பல ஊடாடலுடன் கூடிய கற்றல் வலைதளங்கள் இருக்கின்றன. அத்தகைய உதாரணங்களில் ஒன்று http://interactivesites.weebly.com/ அது புதியக் கருத்துருக்களை புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு மாணவர்களை பழையவற்றையும் திரும்பவும் அறிந்துகொள்ளவும் செய்கிறது.