வகுப்பறையை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கான நேரம் இது

 

வேடிக்கை
கற்றல்
இரண்டும் சேர்ந்து செல்கிறதா?
ஆமாம், நிச்சயமாக!

உங்களிடம் இரு  இருந்து அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்திருந்தால், ஒரு வகுப்பறையில் கம்ப்யூட்டரின் பயன்பாட்டின் பலன்களைப் பயன்படுத்துவதைத் எதுவும் தடுக்க முடியாது!

கற்பதில் ஒரு PC -யை இணைப்பதற்கான மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று மின்புத்தகங்கள், சிறப்பாக கற்பிக்க அவை எவ்வாறு உங்களுக்கு உதவக்கூடும் என்பதற்கான ஒரு கண்ணோட்டம் இதோ இங்கே:


1. உங்கள் மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்

மின்புத்தகங்கள் சிறிய மற்றும் இலகுரகமாக இருப்பதால் அவற்றைச் எங்கும் சொண்டு செல்வதற்கு சுலபமாக்குகின்றன. இது அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாது, மேலும் பல பாடப்புத்தகங்களை சுமந்துசெல்வதை விட இதைக் கொண்டு நிர்வகிப்பது மிகவும் எளிதானது. இன்னும் சொல்ல வேண்டுமானால்,, ஒரு மாணவர் தனக்கு தேவையானதை தன் சௌகரியத்திற்கு ஏற்ப படிக்க முடியும். 


2. 24*7 அணுகக்கூடியது

ஒரு மின்புத்தகத்திற்கு எப்போதும் இண்டர்நெட் தேவையில்லை. உங்கள் மாணவர்கள் இண்டர்நெட்  இல்லாமலேயே படிக்கதக்க வகையில் ஆஃப்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து உலாவலாம். அதோடு இதன் முறையில் கவனச்சிதறல்கள் இருக்காது!


3. நெகிழ்வான அம்சங்கள்

மின்புத்தகங்களைப் பயன்படுத்த எளிதானவை – இதன் காரணமாக தான்:

 

  • தேடக்கூடிய உரை
  • டெக்ஸ்ட் பாக்ஸில் பக்க எண்ணைத் தட்டச்சு செய்வதன் மூலம் வழிசெலுத்தல்
  • எதிர்கால குறிப்புக்கான புக்மார்க்கிங்
  • படிக்கும்போது நீங்கள் ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்யலாம்.

 

4. எஜூடெய்ண்மெண்ட் ! எஜூடெய்ண்மெண்ட்! எஜூடெய்ண்மெண்ட்!

பிரசன்டேஷன் மற்றும் வீடியோக்கள் போன்ற ஊடாடும் ஊடகத்தைத் திறக்கும் மின்புத்தகத்தில் உள்ள இணைப்புகளை நீங்கள் கிளிக் செய்யலாம். இவை உங்கள் மாணவர்களுக்கு கருத்துக்களை உள்வாங்கவும் நினைவில் கொள்ளவும் உதவுகிறது.

 

5. அச்சிடும் செலவுகளைச் சேமிக்கும்

மின்புத்தகங்கள் சுற்றுச்சூழல் நட்பு சார்ந்தவை. இது அச்சிடும் செயல்முறையை முற்றிலுமாக நீக்குகிறது, அதனால் அச்சிடும் செலவுகளைச் சேமிக்க உதவுகிறது.

 

6. நிகழ்நேர புதுப்பிப்புகள்

ஒரு மின்புத்தகத்தில் உங்கள் உள்ளடக்கத்தை தினசரி அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் எப்போதும் புதுப்பித்த தகவல்களைச் சேர்க்கும் போது, அதன் மூலம் மாணவர்களுக்கு சமீபத்திய கற்றல் மெட்டீரியலை வழங்க ஏதுவாக இருக்கும். இது மறுபதிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டில் ஈடுபடும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

 

7. கண்களுக்கு எளிதானது

மாணவர்கள் திரையின் பிரகாசத்தை நாளின் நேரத்திற்கு ஏற்பவும், அவர்களின் விருப்பங்களைப் பொறுத்தும் மாற்றி அமைத்துக் கொள்ள  முடியும். அவர்கள் உரையின் எழுத்துருக்களைக் கூட மாற்றலாம், இதனால் மாணவர்கள் படிப்பதற்கு கண்களுக்கு அதிக சிரமத்தை கொடுக்க மாட்டார்கள்.

 

மின்புத்தகங்கள் அனைத்தும் எதிர்கால கற்றல் அனுபவத்தை மாற்றியமைக்க வந்துவிட்டன். இது ஆசிரியர்களாக நீங்கள் வளர உங்களுக்கு உதவ கூடிய PC-க்களால் மட்டுமே இயக்கப்பட்ட புதிய வகையான கல்வி!