இப்படிநிலைகளை பின்பற்றி, உங்கள் குழந்தையின் இணையப் பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றுங்கள்

 

தங்களது மகிழ்ச்சியின் ஊற்றுகண், நிஜவாழ்விலும் மற்றும் இணையவாழ்விலும் பாதுகாப்பாகவும் மற்றும் நலமாகவும் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவர். எனினும்,  தற்காலத்து பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, குழந்தைகளை தொடர்ந்து கண்காணிப்பது என்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதில், மனநிம்மதியைப் பெறுவதற்கான சிறந்த வழி,  நிகழ்நிலைபடுத்தப்பட்ட மற்றும் நிஜமான அறிவினை நீங்கள் கொண்டிருப்பதே ஆகும். இப்படிநிலைகளைப் பின்பற்றி, உங்களது குழந்தையின் கணிணி பயன்பாடு பாதுகாப்பானதாக அமைவதை நீங்கள் உறுதி செய்யலாம்.

 

1. துவக்கத்திலிருந்து தொடங்குதல்

இது முதலில், அதிக காலம் பிடிக்கும் செயல்முறையாகத் தோன்றினாலும், இறுதி முடிவு, அந்த அளவிற்கு மதிப்பு மிக்கதாக இருக்கும். முதலில், உங்கள் கணிணிக்கு மல்டிபிள் யூஸர்களை உருவாக்கவும். இதனால், அவர்களது வயதிற்கு ஒவ்வாத இணையதளங்களை அவர்கள் பார்வையிடுவது தவிர்க்கப்படும். அடுத்து, உங்கள் பிரவுஸர் செட்டிங்குகளில், சரியான வயது ஃபில்டரை சேர்க்கவும். இறுதியாக, கணிணி-கற்றலுக்கான ஆதாரங்களை புக்மார்க் செய்து, அவர்களுக்கு துரிதமான அணுகுதலையும் மற்றும் குழந்தைகள் முதன்மையாக அத்தகைய இணையதளங்களுக்கு  மட்டுமே செல்வதையும்  உறுதி செய்யவும். உங்கள் குழந்தை இணையம் பயன்படுத்துகையில் ஒன்று நீங்கள் அவர்களுடன் இணைந்து அமர்ந்து கண்காணிக்கலாம் அல்லது தள்ளியிருந்து திரையை பார்வையிட்டு கண்காணிக்கலாம்.

 

2. காலமுறைப்படுத்தல்

உங்கள் குழந்தைக்கு நிச்சயம் உதவும் உத்தரவாதம் கொண்டதொரு படைப்பாற்றல் நுட்பமாக இது திகழ்கிறது! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், குதூகலம் மற்றும் கற்றலுக்கான காலமுறை நிர்ணயிப்பது மட்டுமே. இதனால், உங்கள் குழந்தைக்கு எப்போது என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை, கணக்குப் பாட நேரம் எனில், அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை  யூடியப் நேரமெனில், நீங்கள் அவர்களை கண்காணிக்கலாம். உங்களால் அருகில் இருக்க முடியாத நிலையில், வீட்டின் பிற மூத்த வயது பிள்ளைகளை கண்காணிக்குமாறு கோரலாம்.

 

3. ஒன்றாக அமர்ந்து செயலாற்றுதல்

இது, ஒவ்வொரு பெற்றோரும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதொரு விஷயமாகும். நீங்கள் வெளிப்படுத்தும் அக்கறை உங்களது குழந்தைகளை குதூகலிக்கச்செய்வதுடன், அவர்கள் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை ஒருங்கிணைந்து கற்பதையும் சாத்தயிமாக்கும். ஒன்றாக இணைந்து விளையாட்டுகளை விளையாடுவது முதல் ஆன்லைனில் கட்டுரைகளை படிப்பது வரை, குடும்பமாக இணைந்து மேற்கொள்ளப்படும் பல்வேறு கணிணி செயல்பாடுகள், சிறந்த பலன்களை வழங்கும். கணிணி ஆதாரங்களை ஒன்றாக முயற்சிப்பது, உங்களுக்கு புதிய விஷயங்களை கற்றுத்தரும் மற்றும் உங்கள் குழந்தைக்கு எது நல்ல என்று தீர்மானிக்கவும் உதவும்.

 

உங்கள் குழந்தைக்கு விருப்பமான இணையதளம் யூடியூப் எனில், https://www.dellaarambh.com/tamil/post/this-is-how-you-can-make-youtube-safe-for-your-little-ones என்னும் இணைப்பில்வழங்கப்பட்டுள்ள கல்வி  வீடியோக்களை பயன்படுத்தவும்.

மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு வாழ்த்துக்கள்!