இந்தியாவின் சிறந்த மின்னணு-ஆசிரியர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!

2007ல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மூலம் தேசிய சிறந்த மின்னணு-ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட செல்வி. ரஷ்மி கத்தூரியா, ஒரு சாதாரண ஆசிரியரிலிருந்து நாட்டின் சிறந்த மின்னணு-ஆசிரியர் வரையிலான தனது பயணத்தைப் பற்றி நம்மிடம் பேசினார்.

2000ஆம் ஆண்டில், அவர் தனது பள்ளியில் ஒரு கணித ஆய்வகத்தை அமைத்தார், அது கான்கிரீட் பொருட்களை பயன்படுத்தி கணித கருத்துக்களை கற்பனை பார்க்க மற்றும் பரிசோதனை செய்ய மாணவர்களுக்கு உதவுகிறது. மேலும், 500க்கும் அதிகமான கற்றல் வளங்கள், திட்டத்திற்கான யோசனைகள் மற்றும் பலவற்றை வழங்கும் ஒரு வலைப்பதிவை மாணவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆய்வகத்தில் ஏற்படுத்தினார். தனது கற்றல் வளங்கள் மாணவர்களுக்கு எளிதாக இணையத்தில் கிடைக்கச் செய்ததற்காக, 2010-ல் ஜனாதிபதி டாக்டர். பிரணாப் முகர்ஜியிடம் இருந்து தேசிய ஐ.சி.டி விருது பெற்றார்.

செல்வி. கத்தூரியா உடனான எங்கள் உரையாடலை படியுங்கள்!

 

நீங்கள் வகுப்பறையில் எவ்வளவு காலமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள்?

கடந்த 12 ஆண்டுகளாக நான் கற்பிப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். நான் முதலில் வலைப்பதிவுகளில் தொடங்கினேன், என் வலைப்பதிவின் இணைப்பை என் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். பாடங்கள் பற்றிய என் ஆய்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் போடுவதால், குழந்தைகள் அந்தப் பாடங்களில் உள்ள எல்லா தகவல்களையும் புரிந்து கொள்கிறார்கள். நான் விக்கி வகுப்பறை ஒன்றையும் ஆரம்பித்தேன், மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களிடமிருந்து நான் நல்ல கருத்துக்களைப் பெற்றேன்.

 

நீங்கள் பயனுள்ளதாக கருதும் சில தொழில்நுட்ப- கருவிகளின் சில உதாரணங்களை எங்களுக்குத் தர முடியுமா?

நான் கணிதத்தைக் கற்பிப்பதற்காக தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினேன். வடிவவியல் மற்றும் இயற்கணிதம் ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக, வகுப்பில் நான் கற்பிக்க வேண்டிய ஒவ்வொரு பாடத்தையும் கொண்டுள்ள கருவியான, ஜியோஜிப்ரா என்பதை நான் பயன்படுத்துகிறேன். வகுப்பறை நேரத்தில் வரைபடங்களை வரைவதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதாலும், வகுப்பறை நேர எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதாலும், வரைபடங்களை வரைவதற்கு நான் மேலும் சில கருவிகளைப் பயன்படுத்துகிறேன்.

படிப்பதற்கான வளங்களை குழந்தைகளுக்கு வழங்கினால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று காலப்போக்கில் நான் புரிந்துகொண்டேன், எனவே நான் கற்றல் வளங்களை உருவாக்கத் தொடங்கினேன். நான் உருவாக்கிய அனைத்து கற்றல் வளங்களின் இணைப்பையும், rashmikathuria.webs.com-ல் நீங்கள் பார்க்கலாம்.

 

தொழில்நுட்பத்தில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த ஒரு பகுதி என்ன?

தேர்வுகளை மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரம் எடுக்கிறது, எனவே வகுப்புகளில் நான் கற்பிக்கும் பாடங்கள் குறித்து ஆய்வுசெய்ய எனக்கு குறைவான நேரமே கிடைக்கிறது. எனவே MCQ தேர்வுகளை வடிவமைப்பதற்கு கூகுள் படிவங்களை (Google Forms) நான் பயன்படுத்தத் தொடங்கினேன், அவை MCQ-க்களாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் தேர்வுகளை சமர்ப்பித்த உடனேயே கூகுள் படிவங்கள், அவற்றை தானாகவே மதிப்பீடு செய்கின்றன. எனது மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்று நான் உடனடியாகக் கருத்தைப் பெற இது எனக்கு உதவுகிறது. மேலும், நேரம் மிச்சமாவதால் என்னால் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.

 

வகுப்பறை கல்வியில் உங்களின் சமீபத்திய தொழில்நுட்ப பரிசோதனை என்ன?

எனது பாடங்கள் குறித்து சிறப்பாக திட்டமிடவும், என்னுடைய மாணவர்களுடன் நான் நேர்த்தியாகத் தொடர்பில் இருக்கவும் தொழில்நுட்பமானது உதவுகிறது. வகுப்புகளில் நடப்பதைப் பற்றி அப்பொழுதுவரையிலான தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு சமூகத் தளத்தில் நான் இணைந்திருக்கவும், வெவ்வேறு வகுப்புகளுக்கான வாட்ஸ்அப் (Whatsapp) குழுக்களைக்கூட நான் ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்பதற்காக, அவர்களுக்கான ஒரு தனியான கூகுள் ஆவணம் உள்ளது. அடுத்த வகுப்புவரையிலும் காத்திருக்காமல், அவர்களின் சந்தேகங்களை அப்பொழுதே தீர்த்துவைக்க இது எனக்கு உதவுகிறது!

 

புதிதாகச் சேரும் ஆசிரியர்களுக்கு ஏதேனும் குறிப்பு / ஆலோசனை?

வகுப்பறையில் தொழில்நுட்பத்தை இணைப்பது நிச்சயம் நன்மை பயக்கும் ஒரு செயலாகும். அதைப் பயன்படுத்தி, ஒரு பெரிய மெய்நிகர் வகுப்பறையயை நாம் உருவாக்குவதற்கான நேரம் இதுவாகும்!