ஓவியங்கள் பிடிக்குமா? இந்த குதூகலமூட்டும் PC செயலிகளை முயற்சித்துப்பாருங்கள்!

 

ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஓவியரே. பிரச்சனை என்னவென்றால், வளர்ந்த பின்பும் ஓவியராகவே நீடிப்பது எப்படி என்பதே”

- பாப்லோ பிகாஸோ

 

உங்கள் குழந்தையின் படைப்பாற்றல் மற்றும் கற்பணாசக்தியியை வளர்ப்பதற்கான ஒரு அறிவார்ந்த வழிமுறை ஓவியங்களாகும். உங்கள் குழந்தை சிறந்த டிஜிட்டல் ஓவியச் செயலியை தேர்ந்தெடுக்க உதவிடும் வகையில், சிறந்த ஓவியச் செயலிகளின் பட்டியலை உங்கள் பரிசீலனைக்காக நாங்கள் கீழே தந்துள்ளோம்.

உடனே தயாராகுங்கள் மற்றும் டிஜிட்டல் ஓவியத்தில் சிறந்து விளங்கிடுங்கள்!

 

ஆட்டோடெஸ்க் ஸ்கெட்ச்புக்

மிக நீண்ட நாட்களாக, ஆட்டோடெஸ்க் ஸ்கெட்ச்புக் ஒரு சிறந்த கணிணிக்கான ஓவியச்செயலியாக நீடித்து வருகிறது. ஸ்கெட்ச்புக்கின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று, அதன் எளிமையான பயணர் இடையீடுகளே. உங்கள் கலைப்படைப்பை உருவாக்க உதவிடும் வகையில் அது மிகவும் சுலபமான வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

 

க்ரிதா

ஓவியங்கள் பிடிக்குமா? மிகச்சிறந்த ஓவியங்களை படைப்பதற்குத் தேவையான அனைத்து தொழில்நிபுணத்துவ கருவிகளையும் உள்ளடக்கியதொரு சிறந்த செயலிகளில் ஒன்றாக க்ரிதா திகழ்கிறது.

 

இங்க்ஸ்கேப்

படைப்பாளிகளுக்கான ஒரு ஆற்றல்மிக்க ஓவியச் செயலியாக இங்ஸ்கேப் திகழ்கிறது. ஒரு கற்பணை வெக்டாரை உருவாக்கும் விருப்பம் உங்களுக்கு இருப்பின், இங்கஸ்கேப் உங்களுக்கு ஏற்ற செயலியாகும். ஆப்ஜக்ட் கிரியேஷன், ஆப்ஜெக்ட் மேனிபுலேஷன், கலர்  செலெக்டர், நோட் எடிட்டிங் மற்றும் பல்வேறு வசதிகள் உட்பட்டச் செயலியாக இது திகழ்கிறது.

 

பெயிண்ட் 3D

நீங்கள் புதிதாய் ஓவியம் பழகுகிறீர்கள் மற்றும் உங்கள் தேர்வு டிஜிட்டல் வரைதல் எனில், விண்டோஸ் சாதனங்களில் முன்னமே-பதியப்பட்டு வெளிவரும் மைக்ரோசாஃப்ட்டின் பெயிண்ட் 3D உங்களுக்கான ஒரு அற்புதமான தேர்வாகும். பல்வேறு பிரஷ்கள் மற்றும் டூல்ஸ்களைக் கொண்டுள்ள இச்செயலி, உங்களுக்குள் உள்ள படைப்பாற்றலை கண்டறியவும் மற்றும் வெளிப்படுத்தவும் உங்களுக்கு உதவும்

 

ஃபயர் ஆல்பகா

எளிமையான செயல்முறைகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மிகச்சிறந்த கலவையாக இச்செயலி திகழ்கிறது. 10 மொழிகளில் கிடைக்கப்பெறும் இது, விண்டோஸிலும் இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒரு படைப்பினை சுலபமாக வரைய உங்களுக்கு உதவிடும் இந்த எளிமையான செயலி, ஓவியங்கள் குறித்த உங்களது அடிப்படை நிலை புரிதலை மேம்படுத்தும்.

 

புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைப்படைப்பை உருவாக்குவதற்கு சமமாக, ஒட்டுமொத்தமாக மாணவராக நீங்கள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டியதும் முக்கியமாகும். பள்ளி பாடங்கள், வீட்டுப் பாடங்கள், கூடுதல் செயல்பாடுகள் ஆகியவைகளிடையே ஒரு சமநிலையை பராமரிக்க வேண்டும். சரியான செயலிகள் உங்களிடம் இருப்பின், படைப்பாற்றலோடு செயலாற்றுவது என்பது மிகவும் சுலபமானதாக மாறும்!