ஸ்கிராபிள் பிடிக்குமா? உங்கள் விளையாடும் திறனை இக்குறிப்புகளைக் கொண்டு மேம்படுத்தவும்!

 

ஸ்கிராபிள் விளையாட்டை விளையாடுவது என்பது வேறு, அதில் வெற்றி பெறுவது என்பது வேறு. ஸ்கிராபிள் விளையாட்டானது வெறும் உங்களது சொல்லாற்றல் சார்ந்ததில்லை. அதற்கு தனிப்பட்ட திறன்கள், செயல்திட்டம் மற்றும் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்தல், ஆகியவற்றை ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் விளையாடும் திறனை மேம்படுத்த வேண்டுமா? தொடர்ந்து படிக்கவும்...

 

“ish”பயன்படுத்தி விளையாடவும் – மற்றும் ஒரு பம்பர் ஸ்கோரைப் பெறவும்!

ஒரு பம்பர் ஸ்கோர் வேண்டுமா? சரி, ஒரு வார்த்தைக்குப் பின்பு“ish”சேர்ப்பது, அதை பெறவதற்கான சுலபமான வழியாகும். உதாரணத்திற்கு, child என்னும் வார்த்தையை childishஎன்றும், warmஎன்னும் வார்த்தையை warmishஎன்றும், sheepஎன்னும் வார்த்தையை sheepishஎன்றும் மாற்றலாம்...

 

துவக்கத்திலிருந்தே உங்கள் பெஸ்ட் மூவ்களை விளையாடவும்

பொதுவாக நமது சிறந்த எழுத்துக் கலவைகளை நாம் இறுதியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஒத்திவைப்போம். காரணம் நமது போட்டியாளர் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அச்சமே. ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றாக, உங்களது சிறந்த மூவ்களை முன்கூட்டியே பயன்படுத்தி, தொடர்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் அதிக புள்ளிகளை ஈட்டுவதே நல்லதாகும்.

 

பிளே எ “Benjamin”அது வெறும் ஒரு பெயர் மட்டுமல்ல!

Brick என்னும் வார்த்தையை airbrick ஆக்கலாம்.

Jump என்னும் வார்த்தையை outjump ஆக்கலாம்.

Away என்னும் வார்த்தையை flyaway ஆக்கலாம்.

அடிப்படையில், போர்டில் ஏற்கனவே இருக்கும் வார்த்தையுடன் நீங்கள் ஒரு மூன்று – எழுத்து நீட்டிப்பை சேர்த்து ஒரு ஐந்து – எழுத்து வார்த்தையை உருவாக்குகிறீர்கள், அவ்வளவே!

 

மூன்று - எழுத்து வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடவும் – பெரிய வார்த்தைகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்

சில நேரங்களில், பெரிய வார்த்தைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், நாம் மூன்று – எழுத்து வார்த்தைகளின் ஆற்றலை மறந்துவிடுவோம். ஒரு மூன்று – எழுத்து வாத்தையை பயன்படுத்துவது என்பது, உயர்-புள்ளிகள் கொண்ட டைல்களை பெறுவதற்கு மிகவும் பயன்படும். குறிப்பாக, இரட்டை அல்லது மூன்று எழுத்து கட்டத்தில் ஒரு பவர் டைலை பெறுவதன் வழியாக.

 

உங்களது “E” மற்றும் “S”– களை சரியாகப் பயன்படுத்தி விளையாடுங்கள்!

ஒவ்வொரு செட்டிலும் “s” மற்றும் “e”-கள் சரியாக நான்கு மட்டுமே இருக்கும் என்பதால், அவற்றை கவனமாக பயன்படுத்தவும். காரணம் பெரும்பாலான வார்த்தைகளில் அவற்றை ஒன்றாகப் பயன்படுத்தப்பட வேண்டியதிருக்கும் என்பதால் – கூடுதல் கவனம் அவசியம்

இப்போது அடிப்படை விஷயங்களை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் – இந்த ஸ்கிராம்பிள் விளையாட்டுகளை உங்களது பிசி-யில் விளையாட தயாராகுங்கள்:

Funky Potato

Scrabble Sprint

Lexulous

அதிகம் விளையாடும் அதே நேரம் உங்கள் டைப்பிங்கையும் மேம்படுத்த விரும்புகிறீர்களா? இப்பட்டியலே உங்களது துவக்கப்பபுள்ளி, இனி, உங்களது எண்ணத்தை உங்களது டைப்பிங் வெளிப்படுத்தும்!