ஆல்ஃபபட்டை கற்றுக்கொள்ள எனது மகள் PC –யை பயன்படுத்துகிறாள்

 

 

ஸ்நேகா ஜெயின் என்பவர் https://blogsikka.com –ல் ஒரு மல்டி டாஸ்க்கிங் மாம் ப்ளாகர். அவள் 12 வருடங்களாக நுண்ணுயிரியல் வல்லுநராக இருக்கிறார் மேலும் ஆராய்ச்சிகள் கூட செய்திருக்கிறார். அவர் ஒரு பிரத்யேக தொழில்நுட்ப பிரியர் மற்றும் 18 ஆண்டுகளாக ஒரு PC யை பயன்படுத்தி வருகிறார்.

1) கல்விக்காக ஒரு PC –யை பயன்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?

புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள PC தான் ஒரு அற்புதமான மற்றும் ஊடாடும் வழியாகும். அவை நாம் வேகமாக வளரவும், மேலும் ஒரு இளம் வயதில் இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவும். ஒரு பெற்றோரின் மேற்பார்வைக்குட்பட்ட கண்காணிப்புக்கு கீழ் குறைந்தபட்ச மணிநேரத்திற்கு PC ஐப் பயன்படுத்த எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

2) ஒரு பெற்றோராக, கல்வியின் எதிர்காலம் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?

ஒரு காசுக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் வழி வித்தியாசமானது மற்றும் அது ஊடாடும் மற்றும் மெய்நிகர் கற்றலை இறுதியில் அதிகரிக்கும் ஆனால் இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் விரைவில் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அதி வேகமாக இருக்கிறார்கள் மேலும் அதையும் ஒரு PC மற்றும் இண்டர்நெட்டை பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும்.

3) உங்கள் குழந்தையோட கல்விக்காக நீங்கள் ஒரு PC –யை எப்படி பயன்படுத்துவீர்கள்?

என் மகள் ஆங்கில எழுத்துக்கள், புதிய ரைம்ஸ் மற்றும் விலங்குகள், கலர்ஸ் மற்றும் இன்னும் அதிகத்தைக் கற்றுக் கொள்ள PC –யை பயன்படுத்துகிறாள்.

PC-யின் சகாப்தத்திற்கு முன்னால் உள்ள கல்வியோடு ஒப்பிடும் போது இப்போது இது எளிதாக மாறிவிட்டது. அவளுக்கு கிராஃப்ட்டை கற்றுத் தருவதற்காக நான் லைவ் வீடியோக்களைக் பயன்படுத்துவேன். மேலும் வாழ்க்கை கோட்பாடுகள் மற்றும் சட்டங்களுக்கு வீடியோக்கள் மற்றும் அனிமேஷனை பயன்படுத்துவேன். சில நேரங்களில் அவள் அதற்கு அடிமையாவதை நானும் பார்த்திருக்கிறேன் ஆனாலும் நான் ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அப்போது தான் நான் அதை திறமையாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதிகமாக இல்லை என்று உறுதி செய்து கொள்கிறேன். உண்மையிலேயே வீட்டிற்கு PC அவசியம் அதை பயன்படுத்தி வரையவும், வோர்டில் எழுதவும் கற்றுக் கொடுக்கிறேன். அதோடு PC அவளுக்கு வொர்க்ஷீட்களை செய்யவும் மற்றும் வீட்டுப்பாடமாக வரும் ஆய்வுப் பொருட்களை பதிவிறக்கம் செய்யவும் உதவுகிறது. PC வண்ணம் கொடுக்க, பல்வேறான வெற்று ஓவியங்களை டவுன்லோடு பெற எனக்கு உதவுகிறது. அவளுக்கு வரையவும், கைவினை மற்றும் வடிவமைப்பு விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.

அது மட்டுமல்ல என் PC –யில் உள்ள எஜூகேஷனல் CD–க்களில் விளையாடுவேன் அதனால் அவள் உண்மையான காட்சிப்படுத்தல் மூலம் கருத்துக்களை புரிந்துகொள்கிறாள்.