வெற்றிகரமானப் பருவத்திற்குத் தயாராக ஆன்லைன் கற்றல் குறிப்புகள்

ஆன்லைன் கற்றலுக்கு மொத்த உலகமும் மாறிக்கொண்டிருக்கும் போது, ஓய்வு நேரத்திற்கும் படிப்பு நேரத்திற்கு இடையே ஒரு சமநிலையைக் கொண்டு வர மாணவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறை மற்றும் வீடு இரண்டும் உடன்நிகழும் போது, காலம் கடத்தும் மனநிலை ஏற்பட நெடுநேரம் எடுக்கப் போவதில்லை என்பதால் மாணவர்களுக்குச் சவாலாக இருக்கிறது. உங்கள் வகுப்பில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்ற நீங்கள் உபயோகிக்கக்கூடிய சில யுக்திகள் இதோ.

கவனச் சிதறல்களைக் குறையுங்கள்:

ஒரு நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் போது, கவனச் சிதறல்களைக் குறையுங்கள் மற்றும் உங்கள் விளையாட்டுகளைத் தள்ளி வையுங்கள். உங்கள் காணொளியை ஆன் செய்து வைத்து ஆசிரியரைக் கவனியுங்கள். உங்கள் வகுப்பில் மற்றவர்களையும் இப்படி செய்ய ஊக்குவிப்பது ஒரு சௌகரியமான கற்றல் சூழலில் பிறருடன் ஊடாட உதவும்,

கேள்விகளை எழுதி வையுங்கள்:

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை எழுதி வைத்து வகுப்பு முடிந்த பின்னர் ஆசிரியருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். வகுப்பு நடக்கும் போது குறிப்புகள் எடுப்பது வகுப்பு முழுவதிலும் கவனம் செலுத்த உங்களுக்கு உதவும்.

ஈடுபடுதல்:

வகுப்பில் உங்கள் கருத்துக்களைக் கூற வெட்கப்படாதீர்கள். ஈடுபாடுள்ள ஊடாடும் அமர்வுகள் உங்களை ஆர்வத்துடன் வைத்திருக்கும் மற்றும் வகுப்பையும் மகிழ்ச்சியாகக் கொண்டுச்செல்லும். படுக்கையில் அமர வேண்டாம் ஏனென்றால் நமது மூளை படுக்கையை ஓய்வுடன் தொடர்பு படுத்திவிடும். படுக்கையை விட்டு விலகி ஒரு படிப்பு மேசையில் நேரான நிலையில் உட்காருவது நீங்கள் வகுப்பு முழுவதும் ஆக்கத்துடனும் செயல்வேகத்துடனும் இருக்க உதவும்.

மொபைல் ஃபோனைத் தவிருங்கள்:

மொபைல் ஃபோன்கள் ஓய்வு நேரச் சாதனங்களாக உபயோகிக்கப்படுகின்றன. அதனால் ஆன்லைன் வகுப்பில் நீங்கள் ஃபோனில் இருந்தால் எளிதாக காலம் கடத்தும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். PC அல்லது மடிக்கணினியில் வகுப்புகளைக் கவனியுங்கள், அப்பொழுது தான் காகிதம் மற்றும் பேனாவைத் தேடாமல் அதிலேயே நீங்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் இருந்து கற்றலிம் நெகிழ்வுத்தன்மையை Dell உடன் மகிழுங்கள்.

சிறந்த வகுப்பறை சூழலுக்கு இந்த யுக்திகளைச் செயல்படுத்துங்கள். வீடு மற்றும் வகுப்பறை இரண்டிற்கும் இடையே ஒரு தெளிவான விரிவினை இருந்தால் நீங்கள் எளிதாக பிரித்துப்பார்க்கலாம். மேலும் அறிய எங்கள் வெபினாரில் இணையுங்கள்https://www.dellaarambh.com/webinars/