கல்வித்துறையில் இந்தியாவின் தலையெழுத்தை PC சார்ந்த கற்றல் முறை மாற்றியெழுதுகிறது

கல்விகற்றல் ஒரு மாபெரும் மாற்றத்தைச் சந்திக்கின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனிவரும் காலங்களில் PC வழி கற்றல் முறையே கல்விகற்றலின் அச்சாணியாக இருக்கப்போகிறது.

இந்தியாவில் கணினி கல்வி 1963 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, PC சார்ந்த கல்விகற்றலின் வரலாறு தொடங்குகிறது.1 அன்று முதல் பரவலாகக் கிடைக்கபெறும் அதிவேக இணையத்தினால், இணைய வழி கற்றல்முறையானது நாடு முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி 2020 இல் எடுத்த கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 688 மில்லியன் சுறுசுறுப்பான டிஜிட்டல் பயனர்கள் உள்ளனர்.2 


இன்று, ஈ-கற்றல் சந்தையில் 9.5 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது, 2021 க்குள் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.3

PC - வழி கல்விகற்றல் என்றால் என்ன?

PC - வழி கல்விகற்றல் முறையில் மாணவர்கள் கருத்துக்களை ஒளி-ஒலி வடிவில் புரிந்துகொண்டு அவற்றை நினைவில் வைத்துக்கொள்வார்கள். இது பழங்கால முறையான குருட்டு மனப்பாடத்திற்கு நேர் எதிரான முறையாகும். இந்த கல்வியைப் புகட்டும் பயனுள்ள முறையில் மாணவர்கள் பாடங்களை வெறும் நினைவில் மட்டும் கொள்ளாமல் அவற்றைப் புரிந்தும் கொள்வார்கள்.கூடுதலாக, PC க்கள் மாணவர்களுக்குக் கீழ்கண்ட நன்மைகள் தருகின்றன-

  • உலகம் முழுவதிலும் இருக்கும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்

  • ஏற்கனவே இருக்கும் புதிர்களுக்கு தனித்துவமான பாதையை மாற்றியமைக்கக்கூடிய வழிகளில் விடை கண்டுபிடிக்கலாம்.

  • அவர்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் முறையில் கற்றுக்கொள்ளலாம் அது ஒலி, ஒளி, எழுத்து அல்லது வரைபடம் எதுவாகவும் இருக்கலாம்.

  • ப்ராஜெக்ட்களில் வேலை செய்யும் பொழுது சமமான நிலையில் இருப்பவர்களோடு இணைந்து கருத்துகளைப் பரிமாறி மேலும் கற்றுக்கொள்ளலாம்.
  • தங்கள் வீட்டின் வசதியில், விருப்பமான நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.
  • வெறும் மதிப்பெண்களுக்காக ஒரு கருத்தை மனப்பாடம் செய்யாமல், சந்தேகங்களை அதே இடத்தில் நிவர்த்திசெய்யலாம்.
  • உலகம் முழுவதிலும் இருக்கும் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார செய்திகள் குறித்து உடனுடன் அறிந்துக்கொள்ளலாம்.

 

PC சார்ந்த கற்றல்முறையைப் பொறுத்த வரையில், ஒரு நாடாக நாம் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளோம். இருப்பினும் நாம் இன்னும் நெடு தூரம் செல்ல வேண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.4 மில்லியன் PC அலகுகள் அனுப்பப்பட்டிருந்தாலும், நாட்டின் மொத்த PC ஊடுருவல் 10% சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.4

 

நமக்கானத் தீர்வு?

 

டெல் ஆரம்ப் (Dell Aarambh) - இது, சிறந்த கற்றலுக்காக ஒரு PC ஐ எவ்வாறு உபயோகிப்பது என்ற அறிவைக் கற்பித்து, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்து, டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நடைபோட வைக்கும், இந்தியா முழுவதிலும் இருக்கும் கல்விக்கான ஒரு துவக்கமுயற்சியாகும். 

எங்களது டெல் சேம்ப்ஸ் பள்ளி தொடர்பு திட்டம்(Dell Champs School contact program) மூலம், நாங்கள் ஏற்கனவே 1.5 மில்லியன் மாணவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்த, தீர்வை நோக்கி சிந்திக்க, சிக்கலான பிரச்னையைத் தீர்த்தல் மற்றும் அவர்களது சிந்திக்கும் முறையை மேம்படுத்த ஈடுபட்டுள்ளோம்.

4,793 பள்ளிகளுக்கு நன்மை செய்வதோடு, 91,351 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து சான்றிதழ் கொடுத்து, 1,29,362 தாய்மார்களுக்கு பயிற்சியளித்து, நாட்டிற்குள் எதிர்காலத்திற்குத் தயாரான கல்வித்துறையைக் கொண்டு வர நாங்கள் PC யின் ஊடுருவலை அதிகரிக்க பணிபுரிகிறோம்.