கல்விக்கான PC: உயிரியலை சிறந்த டெக்னாலஜியோடு கற்பித்தல்

 

உயிரியல் என்பது அறிவியல் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் மேலும் மரபியல், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் போன்ற பரந்த தலைப்புகளின் உள்ளடக்கமும் இதில் அடங்கும். இந்த பாடமானது எந்தவொரு மாணவருக்குள்ளும் ஆழமான ஆர்வத்தை தூண்டுவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டிருக்கிறது. மேலும் மருத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி ஆகிய துறைகளில் பல தொழில்களுக்கு ஒரு அடித்தளமாக அமைகிறது. பெரும்பாலும் படிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதால், மாணவர்கள் பெரும்பாலும் ஆர்வத்தை இழந்துவிடுகிறார்கள் ஏனென்றால் சலிப்பான பொருளடக்கமும், பாடத்தை நடத்தும் விதமுமே ஆகும்.

ஒரு ஆசிரியராக, வகுப்பில் மாணவர்களை ஆர்வத்தோடு வைத்திருக்க நீங்கள் நிறைய செய்யலாம். வகுப்பறையில் மாணவர்களின் கவனத்தை கவர்வதற்கு கருவிகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கற்பித்தலோடு இணைக்கலாம், அவர்களும் கற்பிப்பதை பிடித்து கொள்வார்கள் மேலும் அவர்களை ஈடுபாட்டோடு வைத்துக் கொள்ளலாம். [1]

1.  இண்டர்ஆக்டிவ் பையோலாஜி

இண்டர்ஆக்டிவ் பையோலாஜி என்பது மற்ற கற்பித்தல் வளங்கள் போன்றதல்ல.   வெப்சைட்டில் உள்ள வீடியோக்களை காட்டும் போது   மாணவர்கள் வகுப்பில் கற்பிக்கப்பட்டதை உண்மையில் கற்பனை செய்வதற்கு வாய்ப்பு அளிக்கின்றன. ஒவ்வொரு வீடியோவும் பொருத்தமான வாசிப்பு புத்தகம் மற்றும் சிறந்த பகுதியுடன் கூடிய லிங்க்களுடன் சுருக்கமாக உள்ளது. ஒவ்வொரு வீடியோவும் உயிரியல் துறையின் சிறந்த ஆராய்ச்சியாளரான லெஸ்லி சாமுவேல் அவர்களால் உண்மையாகவே நடத்தப்பட்ட பாடங்களைக் கொண்டிருக்கிறது.

2.  செரென்திப் ஸ்டுடியோ

கேளிக்கையில் இருக்கும் போது உங்கள் அறிவாற்றலை பரிசோதிப்பதற்கு விளையாட்டுகள் சிறந்தது ஆகும். வகுப்பறைக்கு அவர்கள் கொண்டு வரும் காம்பிடிட்டிவ் எல்மண்ட் உற்சாகத்தை உருவாக்க உதவுகிறது.    செரென்திப் ஸ்டுடியோவில் உள்ள ஒவ்வொரு தலைப்பும், ஒரு விளையாட்டு சேர்ந்து வருகிறது,   இதனால் மாணவர்கள் அவர்கள் ஒரு சராசரி பரீட்சையைப் போல் உணராமல் அவர்க்ள் கற்றதை சோதிக்க முடியும். மேலும், வெப்சைட்டானது திறம்பட கற்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள், ஆயத்த தயாரிப்புக்கள் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

3.  பையோலாஜி கார்னர்

இது வகுப்பில் ஒரு சிறிய குழு செயல்பாடாக இருந்தாலும், சிக்கலான கோட்பாடு அல்லது வீட்டுப்பாட செயல்பாட்டைப் பயன்படுத்துவதற்கான ஒரு சோதனையாக இருந்தாலும், ஒரு ஆசிரியர் மாணவர்களை பையோலாஜியோடு ஆழமாக இணைக்க தொடர்ந்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிதாள்களை கொடுக்க வேண்டி இருக்கும். இந்த பையோலாஜி கார்னர் உடற்கூறியலில் இருந்து சூழலியல் வரை பல்வேறு தலைப்புகளுக்கான பயிற்சிதாள்களை கொண்ட ஒரு ஆதாரமாகும். இந்த வெப்சைட் ஒரு &ldquoஹேண்டி சையின்ஸ் மெத்தடுஸ்&rdquo பிரிவையும் கொண்டிருக்கிறது. இது பாடத்திட்டங்களொடு கூடிய படிநிலைவாரியான   பரிசோதனை வழிகாட்டுதல்களையும் கொண்டிருக்கிறது.

இந்த கருவிகள் வகுப்பறையை எப்போதும் உயிரோட்டமுள்ளதாக ஆசிரியர்கள் வைக்க ஏதுவாக்குகிறது. மாணவர்கள் தூண்டுதலின் சரியான சமநிலை மற்றும் தகவல்களை அடையும் போது, மாணவர்கள் வெறுமனே தகவல்கள்களை நுகராமல் கற்றல் செயல்பாட்டிலுள்ள செயலில் ஈடுபாடுள்ள பங்கேற்பாளர்களாக இருப்பதை அவர்கள் உணர்வார்கள்.

உயிரியல் உங்கள் மாணவரின் பிடித்த பாடமாக கூட மாறிவிடும்!