கல்விக்கான PC: வேதியியலை சிறந்த டெக்னாலஜியோடு கற்பித்தல்

 

“எதை தவிர்ப்பது என்று அறிந்தவரே சிறந்த ஆசிரியர் ஆவர்.” - Otto Neurath

ஒவ்வொரு வேதியியல் ஆசிரியரும் கற்பிப்பதற்கென்று ஒரு தனித்த பாணியை வைத்திருப்பர். சிலர் நிஜ வாழ்க்கையை தியரியோடு தொடர்பு படுத்துவர், சிலர் குழு செயல்பாட்டிற்கு ஊக்கமளிப்பர், மேலும் சிலர் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே சொல்லி தருவர் - எவ்வாறாக இருப்பினும், தொழில்நுட்பம் ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும்  சிறந்ததையே வெளியே கொண்டு வர முடியும். பின்வரும் ஆதாரங்கள் வேதியியல் பயிற்றுவிப்பைத் ஒரு PC - யின் உதவியோடு சிறப்பாக தொடங்க நல்லதாக்குகிறது.

1. செம் கலெக்டிவ்

கெமிஸ்ட்ரி லேப்ஸ் எப்போதுமே கிடைக்காது ஆனால் ஒரு PC கிடைக்கும். செம் கலெக்டிவ்ஸ்’ ரிச்சுவல் லெப், ஒரு நிஜ லேபைப் பிரதிபலிக்கிறது. நூற்றுக்கணக்கான உருவகப்படுத்துதல்களுடன், மாணவர்கள் பாடசாலைகளில் கிடைக்காத இரசாயணங்களை கொண்டு கூட விருப்பமான பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம். இருப்பினும், ஆசிரியர்கள் இந்த எக்ஸ்பிரிமெண்ட்களை ஆஃப்லைன் பயன்பாட்டிற்கும் டவுன்லோடு செய்யலாம் மேலும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

2. சயின்ஸ் பட்டிஸ்

பாடம் திட்டங்களுக்கான ஒரு ஒன் ஸ்டெப் ரிஸோர்ஸ், விழிப்புணர்வுச் செயல்களில் இருந்து திட்டக் கருத்துக்கள் வரையிலான ஒவ்வொரு ஆதாரமும் விஞ்ஞான வளர்ச்சியில் அச்சிடப்படும். இந்த அறிவியல் முறை பிரிவு என்பது அதன் வரைபடங்கள் மற்றும் படிநிலைவாரியான  வழிகாட்டி மூலம் குறிப்பாக தியரியிலிருந்து நிஜ வாழ்விற்கு தொடர்பு படுத்தும் வகையில்  மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3. ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி

ஒவ்வொரு மாணவரும் இயல்பாகவே போட்டித்திறன் வாய்ந்தவர். விளையாட்டின் கிரிடுலாக் தொடர்களுடன் கூடிய சேனல், சரியான பதிலை எண்டர் செய்த பிறகு மட்டுமே லெவலை அன்லாக் செய்யும். சப்-ஆட்டோமிக் துகள்களில் இருந்து தொடங்கி குறியீடுகள் வரை, ஒவ்வொரு விளையாட்டும் சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் கோட்பாட்டு அறிவாற்றலை  மேம்படுத்துகிறது.

4. ஃப்யூஸ் ஸ்கூல் வீடியோஸ் 

வகுப்பின் இறுதியில் தலைப்புகளை சுருக்கமாக பார்ப்பதற்கு, இந்த வீடியோக்கள் தான்  மிகவும் சிறந்தவை.கேள்விகள் கேட்பதால் மாணவர்கள் தியரிகளை நன்றாகவே நினைவில் வைத்திருப்பார்கள் மேலும் அவர்களுக்கு முன்பு போல் இதனால் சலிப்பு ஏற்படாது. ஃப்யூஸ் ஸ்கூல் வீடியோஸ் புள்ளிவிவர தகவலுடன் ஒரு ஈடுபாடு உள்ள அனிமேட்டடு முறையில் இருக்கும் மேலும் மிக முக்கியமாக சுருக்கமான முறையில் இருக்கும் - ஒவ்வொரு வீடியோவும் 2 முதல் 5 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும்.

5. ஹார்டஸ்ட் பீரியோடிக் டேபுள் குயிஸ் எவர் 

பஸ்ஃபீடால் உருவாக்கப்பட்டது, இந்த குயிஸை ஒரு ப்ரொஜக்ட்டரைப் பயன்படுத்தி ஒன்றாக செய்யலாம் அல்லது மாணவர்களுக்கிடையே ஒரு போட்டியாகவும் நடத்தலாம். ஒவ்வொரு கேள்விக்கும் கால அட்டவணையோடு தொடர்பு உள்ளது மேல்ய்ம்  ஒவ்வொரு வகையான கேள்வியையும் உள்ளடக்கி இருக்கிறது குறியீடில் இருந்து ஆரம்பித்து தனிமங்களின் அணு எண்கள் வரை.

நீங்கள் பாடத் திட்டங்களை குறிப்பிடுவதாக இருந்தாலோ அல்லது வகுப்பில் விளையாட்டை ஆரம்பிப்பதாக இருந்தாலும் சரி, இந்த , உங்கள் மாணவர்கள் கெமிஸ்ட்ரி வகுப்பை அனுபவித்து படிக்க உதவும் மேலும் வகுப்பிலேயே தியரியை நன்கு புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு அதிகமான பாட-அடிப்படையிலான குறிப்பிட்ட  ரிஸோர்ஸஸ் தேவைப்பட்டால், உங்களுக்கு உதவ எங்களது டீச்சர்ஸ்’ ஃபாரம் இருக்கிறது.