கல்விக்கான PC: ஆங்கிலத்தை சிறந்த டெக்னாலஜியோடு கற்பித்தல்

 

“ நாம் இதை நினைவில் வைப்போம்: ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை, மற்றும் ஒரு ஆசிரியையால் இந்த உலகத்தையே மாற்ற முடியும்.”

- மலலா யூசுஃப்சாய்

வகுப்பில் ஒரு சிறிய படி மாணவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு நீண்ட பாதையாக அமையும் மேலும் கற்பிக்கையில் ஒரு டிஜிட்டல் வளத்தை புகுத்துவது ஒரு அருமையான முறையாகும். ஆன்லைன் வளங்களை பயன்படுத்தி பாடத்திட்டங்களை உருவாக்குவதிலிருந்து ஆரம்பித்து வகுப்பின் போது தேர்வுசோதனைகளில் ஒரு விரைவான கருத்துக்களை வழங்குவதில் மாணவர்களை ஈடுபடுத்துவது வரை - ஒரு ஆசிரியர் பள்ளியில் ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்துவதிலிருந்து அதிகமான பலன்களைப் பெறுகிறார். 

1. இங்க்லிஷ் க்ளப்

இங்க்லிஷ் க்ளப் என்பது அனுபவமிக்க மற்றும் புதிய ஆசிரியர்கள் என இருவருக்குமான வொர்க்ஷீட்ஸ், ஹேண்ட் அவுட்ஸ், க்ரூப் ஆக்டிவிட்டி ஐடியாஸ் மற்றும் பாடதிட்டங்களுக்கான ஒரு பாப்புலர் சோர்ஸ் ஆகும். இந்த வெப்சைட் எதனால் முன்னிலை வகிக்கிறது என்றால், இது ஒரு ஆசிரியரின் கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த ரிஸோர்சில் மாணவர்களோடு தொடர்பு கொள்வதற்கான அறிவுறுத்தல்கள், பயிற்சிப்பு கருவிகள், உலகில் எங்கிருந்தும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு மன்றம் போன்றவை இதில் அடங்கும்.

2. TedEd த ரைட்டர்ஸ்’ வொர்க்ஷாப்

TedEd என்பது ஒவ்வொரு வீடியோவையும் சுருக்கமாகவும், தொடர்புடைய தொடரின் பகுதியாகவும் கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் கற்பிப்பதற்கான சிறந்த ஆதாரம் ஆகும். த ரைட்டர்ஸ்’ வொர்க்ஷாப் என்பது நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த வரிசையுடைய TedEd மூலங்களும் வீடியோக்களும் ஆகும். மேலும் கூடுதலாக, ஒவ்வொரு வீடியோவும் ஒரு பல- தேர்வு வினாடி- வினா, கூடுதல் வாசிப்பு மற்றும் ஒரு மன்றத்துடன் சேர்ந்து கேள்விகளை விவாதிக்க அல்லது கேட்பதற்கு, பார்வையாளர்களை ஆழமான கருத்துக்களில் ஆழ்ந்து செல்ல உதவுகிறது.

3.  கேம்ஸ் டு லேர்ன் இங்க்லிஷ்

விளையாட்டு அடிப்படையில் கற்றல் என்பது மாணவர்களுக்கு வேடிக்கையானதாக இருக்கும், முக்கியமாக சிறுவர்களுக்கு மேலும் சோதனைதேர்வுக்கும், வகுப்பில் கற்பிக்கப்படும் கோட்பாடுகளை பிரயோகிப்பதற்கும் இது   சிறந்தது. கேம்ஸ் டு லேர்ன் இங்க்லிஷ் தேர்வு செய்வதற்கென பலவற்றைக் கொண்டிருக்கிறது, கிராமரிலிருந்து ஆரம்பித்து, வொக்காபுலரி, ஸ்பெல்லிங் மற்றும் பல பிற தலைப்புக்களைக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களும் இந்த வெப்சைட்ஸ்’ கேம்ஸை பயன்படுத்தி ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் இன்- கிளாஸ் போட்டிகளை நடத்தலாம்.  அதை தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ வைத்து வகுப்பினரின் ஆர்வ கட்ட நிலையை தக்க வைக்கலாம்.

4.  மைக்ரோஸாப்ட் எஜூகேட்டர் கம்யூனிட்டி.

இது ஆசிரியர்களுடனும் நிபுணர்களுடனும் ஆலோசனைக்காக இணைவதற்கான ஒரு தளம், கற்பிக்கும் உலகின் தற்போதைய போக்குகள் பற்றி விவாதித்தல் மற்றும் கருத்துக்களை பகிர்தல்,  இந்த மைக்ரோஸாப்ட் எஜூகேட்டர் கம்யூனிட்டி என்பது வளரும் மற்றும் புகழ்பெற்ற ஆன்லைன் நெட்வொர்க் ஆகும். ஃபாரமில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல், ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது, இது நம்பகத்தன்மைக்கு தேவையான முத்திரையைக் கொடுக்கிறது

தொழில்நுட்பம் உண்மையிலேயே புத்துயிர் பெற்றுள்ளது, வகுப்பறை அனுபவத்தை சிறப்பாக செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல மாறாக ஆசிரியர்களுக்கும்.

ஆங்கிலத்தை கற்பிப்பதற்கு நீங்கள் வேறு எந்த கருவியையாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா?   #DellAarambh -ஐ பயன்படுத்தி டுவீட் செய்து, எங்களுக்கு தெரிவியுங்கள்.