கல்விக்கு பிசி: தொழில்நுட்பத்துடன் வரலாற்றினை சிறப்பாக கற்பியுங்கள்

 

வரலாற்றினை கற்பிப்பது குறிப்பாக சவால் மிக்கதாகும்; அறிவியல் கருத்துகள் கணித வழிமுறைகளைப் சரியான கருவிகளைக் கொண்டு விளக்கலாம், ஆனால் ஈடுபடுத்தி எளிதாக கிரகிக்கத்தக்க வகையில் எவ்வாறு வரலாற்றினைக் கற்பிப்பீர்கள்?

வழக்கமாக, வரலாறு எப்போதுமே தேதிகளை மற்றும முக்கிய நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது பற்றியதாக இருந்து வருகிறது, ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது. சரியான கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அறிவுப்பூர்வமான பயன்பாட்டுடன், வரலாற்றினை எளிதாக கவரக்கூடிய ஒரு பாடமாக மாணவர்களுக்கு இருக்கலாம்; அவர்களின் கற்பனையை கவரும் மற்றும் வகுப்பறையில் ஈடுபடுத்தும்.

வரலாற்றினை சிறப்பாக கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படுகிற கருவிகள் மற்றும் வலைதளங்கள் இவையாகும்.

 

1. போரிடுங்கள் - காணொளிகளைப் பயன்படுத்தி வரலாற்றினை மீண்டும் உருவாக்குவது

புத்தகத்திலிருந்து படிப்பதைக் காட்டிலும் செயல்களை செய்வது மற்றும் பார்ப்பதன் மூலம் குழந்தைகள் கற்கிறார்கள். வரலாற்று வகுப்பில், போர்களைப் பற்றி வெறுமனே படிப்பதைக் காட்டிலும், ஒரு திரைப்படத்தை மாணவர்கள் தங்களுக்காக மீள் உருவாக்கச் செய்யுங்கள். மாணவர்கள் இயக்குநரின் கருத்துக்களை காணொளியில் சேரக்கலாம், போரின் முக்கிய பாகங்கள் பற்றி முன்னிலைப்படுத்தலாம். ஆசிரியர் டிவிடியை வைத்துக்கொண்டு அதை அடுத்து வரும் ஆண்டு மாணவர்களுக்கு காட்டலாம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஒரு போரினை அல்லது வரலாற்று நிகழ்வினை திரைப்படமாக எடுக்கலாம்.

 

2. காந்தியை ”நண்பராக்குவது”

வரலாற்றில் முக்கியமான நபர்களின் புரொஃபைல்களை உருவாக்குவதற்கு ஃபேஸ்புக்கை ஆசிரியர்கள் பயன்படுத்தி மாணவர்களை நண்பர்களாகுமாறு கேட்கலாம். குழந்தைகளுக்கு வரலாற்று பிரபலங்கள் வெறுப்பானவர்களாக இருப்பார்கள், குறிப்பாக அவர்களை பற்றி உரைநடைப் புத்தகத்தில் படிக்கும் போது. எனினும், மெய்நிகராக இந்த பிரபலங்களுடன் ஊடாடும் போது, அவர்களை அதிகம் உண்மையானவர்களாக ஆக்குகிறது, சூழல்களில் வரலாற்று நிகழ்வுகளை புரிந்துகொள்வது மாணவர்களுக்கு எளிதாகிறது.

தேசத் தந்தையுடன் நணபர்களாவதை கற்பனை செய்து பாருங்கள்!

 

3. விக்கி வகுப்பறைகள்

வரலாற்றை நவீனமான, பயன்படுத்துவதற்கு எளிதான சூழலில் வரலாற்றை கற்பது பற்றி உங்கள் மாணவர்களை ஆச்சரியப்பட வைக்கலாம். ஒரு வரலாற்று நிகழ்வினைப் பற்றி ஒரு விக்கியை மாணவர்களை உருவாக்க செய்யலாம். தனிப்பட்ட மாணவர்கள்/மாணவர்களின் ஒரு குழு நிகழ்வின் ஒரு பகுதியின் சுருக்கத்தை தயாரிக்க செய்யலாம், உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போரின் போது ஹவாய் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல், அதே சமயம் மற்றொரு குழு நிகழ்வின் மற்றொரு பகுதியின் மீது பணியாற்றலாம். ஒரு முழுமையான கண்ணோட்டத்தை இணைக்கும் போது, அவற்றில் பலவற்றை மாணவர்கள் உண்மையில் நினைவு கூர்வதை நீங்கள் பார்க்கலாம்!

 

4. நேஷனல் ஜியாகிரஃபியின் இன்டர்ஆக்டிவ் மேப்கள்

ஒரு இன்டர்ஆக்டிவ் மேப் என்பது வலை அடிப்படையிலான வரைபடம்சொடுக்கக்கூடிய இடக் குறியீடுகளைக் கொண்டிருக்கும். சொடுக்கும் போது, இந்த குறியீடுகள் ஒரு தகவல்  பெட்டியை உரை, படங்கள், காணொளிகள் அதோடு இடங்களுக்குத் தொடர்புடைய புற தளங்களுக்கான இணைப்புகளைக் காட்டும். ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது நாட்டின்  வரலாற்று நிகழ்வுகளை கற்பித்த பின் ஆசிரியர்கள் ஒரு ஊடாடு வரைபடத்தை மாணவர்களை உருவாக்க செய்யலாம். 

 

வெவ்வேறு வகையான கற்பவர்களை சென்றடைவதற்கும் பல்வேறு வகைகளின் மூலம் மாணவர்களின் புரிதலை மதிப்பிடுவதற்கும் ஆற்றல்மிக்க வகைகளை கல்வியாளர்களுக்கு தொழில்நுட்பம் வழங்குகிறது.  வரலாற்றினை கற்பிப்பதற்கு இந்த முறைகளைப் பயன்படுத்தவும் மற்றும் அது அவர்களின் விருப்பப் பாடமாக விரைவில் மாறும். #DellAarambh –ஐப் பயன்படுத்தி டுவீட் செய்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு சொல்லவும்!