ப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக செய்வது எப்படி!

ஒரு படத்தில் ஆயிரம் வார்த்தைகளுக்கான மதிப்புள்ளது என்று பழைய பழமொழி சொல்கிறது.

நாம் பார்ப்பது நம்மீது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது - அதனால்தான் சரியான படங்களுடன் நன்கு எடிட் செய்யப்பட்ட ப்ரெசன்டேஷன் உங்கள் கற்பித்தலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது.

இமேஜ் க்ராப்பிங்

இது தேவை இல்லாத பகுதிகளை நீக்கும் அதே நேரத்தில், படத்தின் தொடர்புடைய பகுதிக்கு கவனம் செலுத்த உதவுகிறது.

எப்படி:

 • ப்ரெசன்டேஷனை திறங்கள்
 • மெனுவில் இன்செர்ட் என்பதனை தேர்ந்தெடுங்கள்
 • இமேஜ் வரை கீழே வரவும்
 • அப்லோட் ஃப்ரம் கம்ப்யூட்டர் என்பதை செலக்ட் செய்யவும்
 • இமேஜை தேர்ந்தெடுத்து ஓபனை க்ளிக் செய்யவும்
 • இமேஜை க்ராப் செய்ய, அதில் டபுள் க்ளிக் செய்து  நீங்கள் விரும்பிய அளவிற்கு ப்ளாக் டாப்ஸ்-ஐ இழுக்கவும்

இமேஜ் காலவுட்:

இது பவர்பாயிண்ட்டில் மிக சக்திவாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும். காலவுட்டில், படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு கவனத்தை ஈர்ப்பதற்கு நீங்கள் ஒரு வடிவத்தை வெட்டுகிறீர்கள்.

எப்படி:

 • திருத்த வேண்டிய படத்தை காபி பேஸ்ட் செய்யவும்
 • மற்றொரு படத்திற்கு மேலே அதை வைக்கவும்
 • இன்செர்ட் டாபில் இருந்து ஸ்ஷேப்ஸ்-ஐ செலக்ட் செய்யவும்
 • விரும்பிய வடிவத்தை செய்யவும்
 • ஃபார்மட்டுக்கு சென்று ஃபார்மட் ஆப்ஷன்ஸ் வரை கீழே போகவும்
 • ஃபார்மட் ஆப்ஷனில் சைஸ் & பொசிஷன் என்பதை க்ளிக் செய்யவும்
 • ஒரு சிறந்த வடிவத்தை உருவாக்க அகலமும் உயரமும் சமமாக இருக்க வேண்டும்
 • அசல் படத்திலிருந்து ஃபார்மட் ஆப்ஷனுக்கு சென்று பிரகாசத்தைக் குறைக்கவும். இது அசல் படத்திலிருந்து காலவுட் தனியாக தெரிவதற்கு உதவும்.

இமேஜ் ஓவர்லே:

டெக்ஸ்ட் படிப்பதற்கு கடினமாக இருக்கும் மற்றும் படத்தில் எளிதில் தொலைந்து போகலாம். இமேஜ் ஓவர்லே டெக்ஸ்ட் படிப்பதற்கு உதவுகிறது. அசல் படத்திற்கு மேலே ஒரு ஒளிஊடுருவக்கூடிய வடிவத்தை சேர்க்கிறது, இது டெக்ஸ்ட் மற்றும் படம் இரண்டையும் பார்க்கக்கூடியதாக மாற்றுகிறது.

எப்படி:

 • இன்செர்ட் மெனு பாரில் ஸ்ஷேப்ஸ்-ஐ தேர்வு செய்யவும்
 • மூலைகளைப் பிடித்துக்கொண்டு உங்கள் படத்திற்கு ஏற்றவாறு இழுக்கவும்
 • மெனு பாரில் ஃபில் கலருக்கு செல்லவும்
 • கீழே கஸ்டம் என்பதை க்ளிக் செய்யுங்கள்
 • ட்ரான்ஸ்பரன்சிக்கு ஒரு சிறிய விண்டோ திறக்கும்
 • முற்றிலும் ட்ரான்ஸ்பரன்ட் ஆகும் வரை ட்ரான்ஸ்பரன்சியை குறையுங்கள். டெக்ஸ்டை படிக்கவும், படம் தெளிவாக இருக்கவும் இது டார்க்காக இருக்க வேண்டும்

கையில் இருக்கும் இந்த திறமையால், அனைவரும் உங்கள் ப்ரெசன்டேஷன்களில் கவனம் செலுத்தப் போகிறார்கள். இன்னும் சிறப்பாக வர, வகுப்பிற்கான உங்கள் ப்ரெசன்டேஷன் திறமைகளை மேம்படுத்துவதற்கான ஐந்து வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.