பீசி ப்ரோ சீரீஸ்: இந்த #WorldStudentsDay வில் கருத்துத் திருட்டுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்

 

பள்ளியில் கணினிகள் வைத்திருப்பது தான் ஜென் இசட் அல்லது மில்லனியலாக இருப்பதற்கான அழகு. உங்களிடம் ஒரு நல்ல, தரமான பீசி இருக்கும்போது, (நீங்கள் சரியானதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்) திருட்டுத்தனம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தகவல் உங்கள் விரல் நுனியில் இருக்கும்.  இதை ஊக்குவிப்பது மிகவும் நெறிமுறையற்றது

யோசனை திருட்டு: ஒருவரின் யோசனைகளையும் வேலையையும் திருடுவதால் மாணவர் நடத்தை குறியீட்டை நீங்கள் மீறுவதற்கு வழிவகை செய்கிறது.

சக மாணவர்கள் அவமதிப்பு: நீங்கள் அனுமதியின்றி வேறொரு மாணவரின் வீட்டுப்பாடத்தை காபி செய்தால், உங்களுடன் பதில்களைப் பகிர்ந்து கொண்டதற்காக நீங்கள் அவர்களை அபாயத்தில் தள்ளலாம். ஆசிரியருக்கு இது உண்மையாக யாருடைய வேலை என்பது பற்றி எதுவும் தெரியாது. மேலும் உண்மை வெளிவந்து சக மாணவர் தப்பித்தாலும் கூட, ஏமாற்றுக்காரன் என்று உங்கள் பெயர் பள்ளி முழுவதும் பரவும்!

இது படிப்பதன் நோக்கத்தை தகர்க்கிறது: பள்ளியில் காகிதங்களில் எழுதுவது மற்றும் மதிப்பீடுகள் செய்வதன் நோக்கம் நெருக்கடியான நேரத்தில் சிந்திப்பது மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவின் தரத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் கருத்து திருட்டு செய்தால், இந்த கல்வியின் நோக்கம் வெற்று ஆகிவிடுகிறது.

பீசியை பயன்படுத்தி கருத்துத் திருட்டை நீங்கள் எவ்வாறு தவிர்ப்பீர்கள்?

உண்மையான அர்த்தத்தை உணருங்கள்: சந்தர்ப்பத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கவும். மேலும் கண்மூடித்தனமாக விக்கிபீடியா மற்றும் கூகிள் ஸ்காலர் போன்ற களஞ்சியங்களில் இருந்து நீங்கள் கண்டறிந்த தகவல்களை காப்பி எடுத்து ஒட்ட வேண்டாம். அதற்கு பதிலாக, கருத்து திருட்டை தவிர்க்க நீங்கள் அதை உங்கள் சொந்த வார்த்தைகளில் மீண்டும் உருவாக்கம் செய்ய வேண்டும்

மேற்கோளிடுங்கள்: வேறொரு மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட உரை என்பதைக் குறிப்பதற்காக மேற்கோள்களைப் பயன்படுத்தவும். மேற்கோள்களை நீங்கள் எங்கிருந்து எப்படி எடுத்தீர்களோ அதே போல இங்கேயும் சரியாக இருக்க வேண்டும்.

சரியாக குறிப்புகளை காட்டுங்கள்: எந்தவொரு வார்த்தையையும் அல்லது யோசனைகளையும் ஒரு மூலத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டால் அதற்கு மேற்கோள் காட்டப்பட வேண்டும். பரிசோதனை செய்தபின் நீங்கள் சேகரித்த முடிவை மேற்கோள் காட்டக்கூடாது. மேலும், உண்மைகள் அல்லது பொதுவான விஷயங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டத் தேவையில்லை.

குறிப்பு: Ctrl+Shift+Plus ஐ கோ-டூ விற்கு செல்ல உங்கள் குறுக்குவழியாக மாற்றுங்கள்

எடுத்துக்காட்டு: திருட்டுத்தனத்தைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான முறைகளில் ஒன்று எடுத்துக்காட்டு கொடுப்பதாகும்.  உங்கள் வேலையின் முடிவில் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு பக்கம் அல்லது படைப்புகளின் பக்கத்தைப் பயன்படுத்தவும்.

கருத்துத் திருட்டிலிருந்து உங்களுக்கு உதவக்கூடிய பீசி ஆதாரங்கள்:

  1. https://www.duplichecker.com/
  2. https://www.grammarly.com/plagiarism-checker
  3. https://www.quetext.com/

இதை தொடங்கும் போது உங்களுக்கு கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம், ஆனால் திருட்டுத்தனத்தைத் தவிர்ப்பதற்கான பழக்கத்தை நீங்கள் கடைப்பிடித்தால் அது நல்ல திறன் படைத்த மாணவராக உங்களை இருப்பதற்கு உதவும். எனவே, கருத்து திருட்டுக்கு வேண்டாம் என்றும் உண்மை தன்மைக்கு ஆம் என்றும் சொல்லுங்கள்!