வளர்ந்து வரும் மாணவர்களை மேம்படுத்த திரையின் வழியே எட்டுதல்

கடந்த இரு ஆண்டுகளில் அனைத்துக் குழந்தைகளும் ஆன்லைன் கற்றல் தளத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். பெருந்தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பாக வைப்பதற்கு அது ஒன்று தான் வழி என்றாலும் கூட ஆன்லைன் கற்றல் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. இது கற்றல் செயல்முறையைப் பெரிதும் பாதித்துவிட்டது. தோலை தூர கற்றல் முறையின் தூரத்தை சிறிதே குறைக்க இதோ எளிய வழிகள்:

ஊடாடும் கற்றல்முறை: அனைவரும் மியூட் செய்யப்பட்டிருந்து கேமராக்களும் அனைத்திருந்தால் மாணவர்களின் கவனம் எளிதாகச் சிதறிவிடும். அமர்வு முழுவதும் குழந்தைகளைக் கவனத்துடன் வைத்திருந்தால் மட்டுமே அது வெற்றிகரமாக இருக்க முடியும். எனவே, குழந்தைகளின் ஆடியோ மற்றும் வீடியோவை ஆன் செய்து வைத்திருக்க ஊக்குவியுங்கள்.

வேடிக்கைச் செயல்பாடுகள்: வகுப்புத்தோழர்கள் இல்லாமல் இருப்பது கற்றலை சலிப்பாக மாற்றுகிறது. பிறரின் அருகாமை இல்லாமல் இருப்பதை ஈடுசெய்ய வேடிக்கைச் செயல்பாடுகளை நடத்துங்கள். உதாரணமாக, தாவரங்களின் வகைகளைப் பற்றி பேசும் பொழுது ஒரு தோட்டத்தில் இருந்து வகுப்பெடுப்பது போன்றவை.

தொடர்ந்து சோதனை செய்யுங்கள்: குழந்தைகள் வகுப்பில் அதிக கவனம் செலுத்துவதற்கு சிறிய தீடீர் தேர்வுகள் வைப்பது உதவும். வாரம் ஒருமுறை MCQ அல்லது பல்வேறு தலைப்புகளில் ஒரு சிறிய செயல்காட்சி நடத்துவது கற்றலை மகிழ்ச்சியாகவும் திறம்படவும் வைத்திருக்கும். அதுமட்டுமில்லாது, மாணவர்கள் சமூக திறன்களை வளர்த்தவும் அது உதவும்.

பாராட்டுங்கள் பரிசளியுங்கள்: கடின உழைப்பிற்கு பாராட்டுகளும் பரிசுகளும் கொடுத்தால், குழந்தைகள் இன்னும் சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். சிறிய பரிசுகள் பெரும் உதவி புரியும் மேலும் ஒரு சரியான விடைக்கு பாராட்டென்பது அவர்களைக் கவனத்துடன் வைத்திருக்க உதவும். மற்ற மாணவர்கள் கடினமாக உழைக்கவும் அது ஊக்குவிக்கும்.

இவை மட்டுமன்றி, குழுக்கள் அமைத்து ஊடாடும் செயல்பாடுகள், கேள்வி/பதில் அமர்வுகள் நடத்துவது பற்றி ஆசிரியர்கள் யோசிக்கலாம் மேலும் ஆன்லைன் கற்றலை மகிழ்ச்சியாக்க சிறப்பு விருந்தினர்களையும் அழைக்கலாம்.