உங்கள் சொந்த விக்கி ஸ்பேசஸ் வகுப்பறையை அமையுங்கள்!

 

“எனது பாடங்களை சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் நியாயமான முறையில் எனது மாணவர்களுடன் இணைவதற்கும் தொழில்நுட்பம் உதவுகிறது.”

2007ல் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் சிறந்த தேசிய இ-டீச்சருக்கான விருது திருமதி ராஷ்மி கதூர்யாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது

தளத்தில் உள்ள பங்களில் தங்களின் சொந்த கருத்துக்களைத் திருத்துவதற்கு அல்லது சேர்ப்பதற்கு பயனர்களை அனுமதிக்கும் ஒரு வலைத்தளம் விக்கி ஆகும்.[1] விக்கிப்பீடியாவை பற்றி சிந்தியுங்கள், ஆனால் சிறிய அளவில், பிசி இயலச் செய்யப்பட்ட கற்றலை செயல்படுத்தும் வகுப்பறைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்டது. இது மாணவர்களிடையே ஒத்துழைப்பு, ஆராய்ச்சி முனைப்புள்ள கற்றலை மாணவர்களுக்கு வழங்குகிறது மற்றும் மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும் இருக்கிறது.  மேலும், ஆசிரியர்களால் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் (தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும்), கற்றல் பொருட்களை ஒழுங்குப்படுத்தவும் மிக முக்கியமாக மாணவர்களிடையே சுதந்திரத்திற்கான உணர்வோடு ஆர்வத்துடிப்பிற்கான உணர்வினையும் ஊக்குவிக்க முடியும்.

 

உங்களின் சொந்த விக்கி வகுப்பறைகளை எவ்வாறு நீங்கள் அமைப்பது என்பது இதோ இங்கே:

வழிமுறை 1:

கூகுள் தளங்களில் ஒரு வலைதளத்தை உருவாக்கி அதை பின்வருவனவற்றிற்கு ஏற்ப பெயரிடவும் – மதிப்பு, பொருள், மற்றும் தேவைப்பட்டால் தலைப்பு.[2]

வழிமுறை 2:

உங்கள் குறிக்கோளினைப் பொறுத்து – அது குழு நியனமங்களோ அல்லது விரிவான அறிவுத்தளமோ (இரண்டும் இருக்கலாம்)!, உங்கள் தகவல்களை ஒழுங்குப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிகாட்டுதல்களையும் அமைக்கவும்.[3] நீங்கள் இணையத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதாரங்களை இணைக்கலாம் மற்றும் முந்தைய பணிகளையும் காட்சிப்படுத்தலாம் அதனால் உங்கள் மாணவர்களுக்கு ஒரு தரநிலை இருக்கும். இயன்ற அளவு உங்கள் மாணவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்க முயற்சிக்கவும் அதனால் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்கள், கட்டுப்பாட்டில் இருப்பார்கள் மற்றும் தன் விளைவாக திரும்பத் திரும்ப வருவதற்கு ஊக்குவிக்கப்பெறுவார்கள்.

வழிமுறை 3:

மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை இறக்குமதி செய்து தங்களின் சொந்த விக்கி வகுப்பறையை நல்லபடியாக பயன்படுத்துவதற்கு அவர்களை வரவேற்கவும். ஒரு ஆழ்ந்த டுடோரியலை தரப்பட வேண்டும் என்பதை அது சொல்லாமல்  சொல்கிறது மற்றும் உங்கள் கற்பித்தல் மெதுவாக இருந்தபோது இயற்கையாகவே விக்கியை உட்கிரகிப்பதற்கு முயற்சிக்கவும்.

புதிதாக இருக்கும் எதுவும் ஒரு புதிய காரணியை தன்னுடன் இணைக்கப் பெற்றிருக்கும் ஆனால் நீண்டகால பயன்பாட்டிற்கு, மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். ஒரு பரிசளிப்பு முறையுடன் ஒரு ஸ்கோர்போர்டு (நாம் அனைவரும் இயல்பாகவே போட்டித்திறனுள்ளவர்கள்) மூலமாக செய்யப்படலாம். குழுக்களிடையே ஒரு நட்புரீதியான போட்டியை கொண்டிருப்பது இதை செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும் அதே வேளையில்  யாரும் தனித்துவிடப்பட்டதாகவோ அல்லது வெளியேற்றப்பட்டதாகவோ உணராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.[4] பரிசானது மதிப்பெண்கள் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது தங்களின் சொந்த பாடம் தொடர்பான களப் பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு போன்ற கூடுதல் பாடநெறிகளாகவும் இருக்கலாம்.

வகுப்பறையில் தொழில்நுட்பத்தை நிறுவுவது நிச்சயமாக ஒரு நன்மையாகும் மற்றும் அது ஒரு மெய்நிகர் வகுப்பறையை உருவாக்குவதற்காக அதை நம் பயன்டுத்துவதற்கான நேரமாகும் இது!”

தங்கள் கற்பித்தலில் பிசி இயலச் செய்யப்பட்ட ஊடாடு கல்வியை செயல்படுத்த விரும்பும்  எவருக்கும் தேசிய சிறந்த இ-டீச்சர் விருதினை வென்ற திருமதி ராஷ்மி கதூர்யா மிகச் சரியான வார்த்தைகள்.[5]