ஆசிரியர்களின் கற்பித்தல் யுக்திகளைத் தொழில்நுட்பம் மாற்றிய ஏழு வழிகள்

ஒரு கற்றல் வெளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் எப்படி ஊடாடுகிறார்கள் என்பதைக் கடந்த இரு வருடங்கள் பெரிதும் மாற்றிவிட்டது. ரிமோட் சூழலில் தாக்கம் ஏற்படுத்தும் கல்வியைப் போதிக்க ஆசிரியர்கள் தழுவிய முக்கிய மாற்றங்கள் இதோ:

1. ஆன்லைன் கல்வி வளங்களை உபயோகித்தல்: டிஜிட்டல் ஆதாரங்களாக இருக்கும் அகாடமிகள் மற்றும் போர்டல்கள் ஆசிரியர்களின் உபயோகத்திற்காக இருக்கின்றன. அவற்றுள் சில புகழ்பெற்றவை இதோ Scholastic, Byju’s மற்றும் Vedantu.

2. கலந்த கற்றல் யுக்தி: முன்னரே பதிவு செய்த அமர்வுகள், சிலந்தி வலை விவாதங்கள், யோசியுங்கள்-ஜோடி சேருங்கள்-பணிகளைப் பகிருங்கள் போன்ற ஆன்லைன் கருவிகளுடன் ஒத்தியங்கும் மற்றும் ஒத்தியங்காத யுக்திகளை உபயோகப்படுத்தல்.

3. ஆன்லைன் குழுக்கள்: Google Classroom போன்ற தளங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சிக்கல் இல்லா கோப்பு பரிமாற்றங்களை வழங்குகிறது. Google docs போன்ற கருவிகள் நம்பிக்கையான சக நண்பர்களின் கருத்துகளை ஊக்குவிக்கிறது.

4. டிஜிட்டல் கருவிகள்: Nearpod Collaborate போன்ற கூட்டுமுயற்சி வாரியங்கள் ஒரு தலைப்பில் மாணவர்களின் கருத்துகளைப் பகிர அனுமதிக்கின்றன, அந்த விவாதக் குழுவிற்கு எதைச் சேர்க்கலாம் மற்றும் கூடாது விவாதத்தில் யார் பங்கேற்கலாம் என்று ஆசிரியர்கள் ஒப்புதல் அளிக்கலாம்.

5. புத்தகங்களுக்கு மாற்று: மின்-பணித்தாள்கள், மின்-அட்டவணைகள் போன்ற காகிதம் சார்ந்த வளங்களுக்கு மாற்றுகளை உபயோகித்தல் ஊக்குவிக்கப்படுகிறது, இதனால் குறைவாகக் கிடைக்கும் இயற்கை வளங்கள் குறித்து குழந்தைகள் அறிந்துகொள்வார்கள். இது கணிப்பொறி கற்றலுக்கு கவனத்தைக் கொண்டு செல்லும்.

6.    உலகத்தைக் குறித்து கற்றல்: சமூக ஊடகம் மற்றும் தற்போதைய நிகழ்வுகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்தல், இணையம் குறித்து மாணவர்களை அறிய வைத்தல் மற்றும் எப்படி பாதுகாப்பாக பிரௌஸ் செய்வது என்பதை கற்பித்தல்.

7. முழுமையானக் கற்றல்: ஆசிரியர்கள் மேம்பட தொடர் பின்னூட்டங்களை வழங்கி, அனைத்து விருப்பத் துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு முழுமையான கற்றல் சூழல்.

புதிய மற்றும் மேம்பட்ட கற்றல் முறைகளில் பரந்த மனப்பான்மையும் விரிவடைந்த எல்லைகளையும் கொண்ட கல்வியாளர்கள் இன்றைய ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகரித்த கற்றல் வாய்ப்புகளை வழங்க கணிப்பொறி அறிவை Dell ஊக்குவிக்கிறது. மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.