STEAM கல்வி: ஒரு டீச்சர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

 

உலகத்தின் எதிர்காலம் உங்கள் வகுப்பறை தான். எதிர்காலமானது இன்றைய தினத்தை விட அதிகமான உயர் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும். ஒரு ஆசிரியராக, “ஜாப்-ரெடி’யாக இருப்பதை நீங்கள் புறக்கணிப்பதை மிகவும் கஷ்டம் எனென்றால் உங்கள் மாணவர்களுக்கு அது சிறு வயதிலேயே ஆரம்பிக்கிறது. அப்போது தான் இந்த STEAM எஜூகேஷன் நிலவரத்துக்கு வருகிறது.

STEAM எஜூகேஷன் என்றால் என்ன?

STEAM எஜூகேஷனில் கீழ்வருபவை அடங்கும்:
1) சைன்ஸ்
2) டெக்னோலாஜி
3) என்ஜினியரிங்
4) ஆர்ட்
5) மேத்தமெடிக்ஸ்

இந்த பாடத்திட்டங்கள் இன்றைய நடைமுறைகளுக்கு ஏற்ற நிறைய வேலை வாய்ப்புகளுக்கான அடிப்படை அடித்தளமாக உள்ளன அதோடு மட்டுமில்லாமல் இப்போது இல்லாத வேலைகளுக்கும் தான்.
ஒவ்வொரு பாடத்தினுள்ளும் உள்ள முக்கிய கருத்துகளில் மாணவர்களின் புரிந்தலை மேம்படுத்துவதே இதன் முழு யோசனையாகும் மேலும் ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை அவர்கள் கண்டுபிடிக்க செய்ய வேண்டும். இது ரிசர்ச் மற்றும் ப்ராக்டிக்கல், ப்ரொஜக்ட்- பேஸ்டு அசைண்மெண்டிற்காக உங்கள் PC யை பயன்படுத்தி மிகவும் அவசியமான விமர்சன சிந்தனை திறன்களை கூர்மையானதாக்க முடியும்.

STEAM எஜூகேஷன் ஏன் முக்கியமானதாக இருக்கிறது?

ஒரு மாணவர் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அவராகவே அதை எவ்வாறு சரி செய்வது என்று சிந்திக்க வேண்டும். இந்த STEAM சப்ஜக்ட் ஒரு “எக்ஸ்ப்ளோரர்”மைண்ட்செட்டை டெவலப் செய்வதற்கான ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கு கொடுக்கிறது மேலும் விமர்சன சிந்தனைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வைக்கிறது.

STEAM எஜூகேஷனின் எதிர்காலம் தான் என்ன?

இத்தகைய பாடங்களோ அல்லது குறைந்தபட்சம் பாடத்தின் அடிப்படை கொள்கை பகுதியோ நம்முடைய நாட்டில் ஏறக்குறைய அனைத்து போர்டுகளும் சிறு வயதிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதன் மையக்கருத்தானது எவ்வாறாகினும் கற்பிக்கப்பட வேண்டும். அது மூளையை கசக்கி பிழிந்து செய்யக்கூடிய அதிக எக்ஸ்ட்ரா-கரிகுலர் செயல்பாடாகவோ அல்லது ஹோம்வொர்க்கோ அல்லது STEAM –ன் தீமை சுற்றிலும் அடிக்கடி மேற்கொள்ளப்படும் தள சுற்றலாவாக இருந்தாலும் – அது மாணவர்கள் எடுக்கும் சிறு சிறு அடியாக இருந்தாலும் கூட தொலைதூரம் செல்லக்கூடியதாக அமையும்.

STEAM எஜூகேஷனை ஒரு ரெகுலர் பேஸிஸ் அடிப்படையில் உங்கள் வகுப்பின் ஒரு பகுதியாக்குவதற்கு நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன:

1) பள்ளியில் ஒரு மேக்கர்ஸ் ஸ்பேஸை அமைக்க உங்கள் மாணவர்களுக்கு எதில் ஆர்வம் நிறைய இருக்கிறது என்பதை கண்டறிய வாய்ப்பினை ஏற்படுத்தி தாருங்கள்.
2) ஹோம்வொர்க் கொடுங்கள் அது பாடத்திலிருந்தும் இருக்கலாம் அல்லது மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்டிலிருந்தும் கொடுக்கலாம் அதற்கு ஃபேன்ஸி மெட்டீரியல் தேவைப்படாது.
3) உங்கள் மாணவர்களுக்கு பள்ளியில் அக்ஸஸ் இருப்பதை உறுதி செய்யவும் மேலும் பெற்றோர்களிடம் அவர்களது பிள்ளைகளின் நீண்ட-கால நன்மைக்கு உதவியாக இருக்கும் ஒரு PC –யை வாங்கச் சொல்லுங்கள்.
4) உங்கள் வகுப்பை பல்வேறான செயல்பாடுகளுடன் கூடிய உரையாடலாக மாற்றுங்கள் அப்போது தான் STEAM சப்ஜக்ட் குறித்து அவர்களுக்குள் ஒரு ஆர்வம் எழும்.
5) குழு வேலைகளுக்கு ஓரளவுக்கு கவனம் கொடுக்கவும் அது சிறிய விவாதமாக அல்லது பட்டிமன்றமாக இருக்கலாம் அது பாடத்தின் மேல் குழந்தைகளுக்கு அதிக ஆர்வத்தை புகுத்தும்.

ஹேப்பி டீச்சிங்!