மாணவர்கள் தங்கள் கேமராக்களை ஆன் செய்து வைப்பதை ஊக்குவிக்க சில யுக்திகள்

கற்றலின் அனைத்து வழக்கங்களையும் கடந்த இரு வருடங்கள் மாற்றியமைத்துவிட்டது. ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தை ஆன்லைன் வகுப்புகள் காரணமாகத் தங்கள் மடிக்கணினியிலேயே கழிப்பதால், குழந்தைகள் சோர்வடைகிறார்கள். தங்கள் வகுப்புத்தோழர்களுடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த அனுபவங்களையும் தவறவிடுகிறார்கள். இவற்றுக்கு எதிராகச் செயல்பட, ஆன்லைன் வகுப்புகளை மகிழ்ச்சியாக்க மற்றும் தங்களது கேமராக்களை ஆன் செய்து ஒரு சமூக உணர்வை மீண்டும் கொண்டு வந்து கீழ்கண்டவற்றைச் செய்ய சமூக-உணர்வு சார்ந்த கற்றல் முறைகளை ஆசிரியர்கள் உபயோகிக்கலாம்:

பாத்திரமேற்று நடித்தல்: இலக்கிய வகுப்புகளில் ஆற்றலை அதிகரிக்க பாத்திரமேற்று நடித்தல் ஒரு சிறந்த வழியாகும். மாணவர்களுக்கு பாத்திரங்களை ஒதுக்கி நீங்கள் அந்த நாடகம் அல்லது பாடத்தைப் படிக்கும் பொழுது நடிக்கச் சொல்லலாம்.

கதைநேரங்களை உபயோகியுங்கள்: வகுப்புகளின் இறுதிப்பகுதியை கதைநேரத்திற்கு என்று ஒதுக்கி மாணவர்கள் ஒரு இடைவேளை எடுப்பதை ஊக்குவிக்கலாம். உங்கள் இளைய மாணவர்களின் நாளை நீதி கொண்ட ஒரு வேடிக்கையான கதை பிரகாசிக்க வைக்கும். மாணவர்கள் தங்கள் கேமராக்களை ஆன் செய்து ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் ஒரு கதையைச் சொல்ல ஊக்குவியுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களது பொதுப் பேச்சுத் திறனையும் மேம்படுத்தும்.

கற்பனை மிகுந்த காட்சி செயல்பாடுகள்: பள்ளிப்பணியைத் தவிர்த்து வேறு தலைப்புகளில் காட்சி செயல்பாடுகள் என்பது மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் ஊடாட ஊக்குவிக்கும். மீண்டும் வகுப்பறையில் இருக்கும் உணர்வை ஒன்றாக அமர்ந்து குழுச்செயல்கள் செய்வது கொண்டுவரும்.

இதைத்தவிர, அன்றாடச் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் ஊடாடுவது, ஒருவரது முன்னேற்றத்தை மற்றவர் குறிப்பது மற்றும் கூட்டாக கற்றல் யுக்திகளை அறிமுகப்படுத்துவது என்று பலவற்றை நீங்கள் செய்யலாம். இதன் மூலம், செயல்பாடற்ற பங்கேற்பாளர்களாக அல்லாமல், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் தன்னம்பிக்கை பெற்று தங்கள் கேமராக்களை ஆன் செய்து வகுப்புகளில் பங்கேற்பார்கள்.