டிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்

 

பேரண்டிங் (குழந்தை வளர்ப்பு)

அது ஒரு பணியாக இருப்பின் – ஒரு முழு நேர, 24/7 வேலை என்பதே நிஜமாகும்.

நீங்கள் விரும்புகிறீர்களோ அல்லது இல்லையோ...உங்களது பொறுப்பில் பல்வேறு “தொழில்நுட்பங்களும்” அதில் உட்பட்டே இருக்கும்.

இப்போது நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி, நீங்கள் ஒரு டிஜிட்டல் பேரண்டிங் நிபுணராகத் திகழ்வது எப்படி என்பதே ஆகும்

 

1. அது உங்களிடமிருந்தே துவங்குகிறது

உங்களுக்கு ஏதேனும் புரியவில்லை எனில் – ஆராயவும். பிற பெற்றோர்கள், உங்கள குழந்தையின் ஆசிரியர்கள், சக பணியாளர்கள், அண்டை வீட்டார் மற்றும் உங்கள் வலையமைப்பிலுள்ள அனைவரிடமும் அது குறித்து பேசி கற்றுக்கொள்ளவும். அடுத்த படிநிலை, உங்கள் குழந்தையை பயன்படுத்த அனுமதிப்பதற்கு முன்பாக எப்போதும், எந்தவொரு கணிணி ஆதாரத்தையும் நீங்களே சரிபார்ப்பதாகும்.

 

2. நீங்களே உங்கள் குழந்தையின் முன்னுதாரணம் ஆவீர்

நீங்களே அவர்களது முதல் சூப்பர்ஹீரோ. நீங்கள் என்ன செய்தாலும், அது அவர்களுக்கு முன்னுதாரணமாகும். நீங்கள் உங்கள் குழந்தையை கவனிக்காமல், நீண்ட நேரம் திரையை பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது தொழில்நுட்பங்களில் அதிக நேரம் செலவழித்தாலோ, அவ்வாறு செய்வது சரியென்றே உங்கள் குழந்தையும் நினைக்கும். அதே போல், நீங்கள் சரியான சமநிலையையும் மற்றும் முறையான செயல்முறை பாங்கினையும் பராமரித்தால், உங்கள் குழந்தையும் அவ்வாறே உங்கள் கால்தடத்தை பின் தொடரும்.

 

3. பெற்றோர்  கட்டுப்பாடுகள் உதவும்

உங்கள் குழந்தைக்கு ஒரு வேறுபட்ட பயணர் புரொஃபைலை உருவாக்கித் துவங்கவும் மற்றும் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு தளத்தையும் சரிபார்க்கவும். Google மற்றும் YouTube ஆகியவை முதன்மையான தளங்களாகும். இக்கட்டுப்பாடுகளை அமைத்துவிட்டால், நீங்கள் சற்று ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்.

 

4. விதிகளை சிறப்பானதான மீண்டும் மாற்றவும்

கட்டுப்பாட்டினைக் கொண்டிருப்பதை எவர்தான் விரும்பமாட்டார்கள்? உங்கள் குழந்தைகளுக்காக விதிகளை அவர்களைக் கொண்டே உருவாக்கிவிட்டால், விதி மீறல் என்ற பேச்சே எழாது. ஒன்றாக அமர்ந்து அவற்றை எழுதவும். உறுதியான பாஸ்வோர்டுகளை அமைத்தல் மற்றும் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுதல், புக்மார்க் செய்யப்பட்ட தளங்களை மட்டுமே பார்வையிடுதல் மற்றும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் கணிணியை பயன்படுத்தாமல் இருத்தல் ஆகிய விதிகள், உங்கள் குழந்தையுடன் கலந்தாலோசித்து அமல்படுத்தப்பட்டால், அவர்களும் அதை விரும்பவே செய்வர்.

 

5. சமூக செயல்பாடுகள் நல்லதே!

நிஜத்தில், அது சிறப்பானதாகும்!

ஆனால் இதில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது முக்கியமாகும். உங்கள் குழந்தை எந்தவொரு இரகசிய கணக்கினையும் கொண்டிருக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்

அதே நேரத்தில், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சற்று தனிப்பட்ட சுதந்திரத்தை தரவேண்டியதும் முக்கியமே – அவர்களது பதிவுகளை அதிகம் பகுப்பாய்வு செய்தல் மற்றும் அதில் அதிகளவு இடுகைகளை இடுதலை தவிர்க்கவும்

நீங்களும் மற்றும் உங்கள் குழந்தையும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் உங்கள் குழந்தை உங்களுடன் தகவல் தொடர்பை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும். முதன்மை நோக்கம், தொழில்நுட்பத்தின் உதவியோடு வளர்வதும் மற்றம் அதில் குதூகலம் கொள்வதுமே ஆகும், ஒன்றாக!