கற்றலுக்கான சரியான வழி குருட்டு மனப்பாடம் அல்ல

இந்திய கல்விமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு குருட்டு மனப்பாடம் பரீட்சையமான ஒன்றாகும். மீண்டும் மீண்டும் ஒன்றையேத் திரும்பச் சொல்லி, மாணவர்கள் தாங்கள் கற்றதை நினைவில் கொண்டுவரும் ஒரு மனப்பாட யுக்தியாகும். எனினும், இந்த முறையானது கருத்துக்களைப் புரிந்துகொள்ளாமல் அப்படியே மனப்பாடம் செய்வதையே ஊக்குவிக்கிறது.

தலையாயப் பிரச்சனை

இந்திய கல்விமுறையின் பாடத்திட்டங்கள் அனைத்தும் சொற்பொருள் விளக்கங்கள், சூத்திரங்கள், உண்மையானக் கூற்றுகள் மற்றும் கருத்துக்களை மனப்பாடம் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்திய வகுப்பறைகளில் வெறும் 14% மட்டுமே பாடப்புத்தகங்கள் தவிர வேறு கற்பிக்கும் பொருட்களை உபயோகிக்கின்றன. இது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புத்தன்மையைப் பாதிக்கின்றது. ஆய்வுகளின் படி இந்திய பொறியியல் பட்டதாரிகளில் 25% மட்டுமே பணியிடங்களில் வேலை செய்யும் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். 1

ஒரு கருத்தைப் புரிந்துப் படித்தால் தான், அதை நிஜ வாழ்க்கையில் ஒரு மாணவனால் செயல்படுத்த முடியும் என்பதே உண்மை. அது தான் அவனுக்குப் பணியிடத்தில் உதவி புரியும். ஏனென்றால், இன்றைய ‘டிஜிட்டல் இந்தியர்களுக்கு’ கற்பனைத்திறன், நெருக்கடிநிலையில் சிந்தித்தல் மற்றும் சிக்கலான பிரச்சனையைத் தீர்த்தல் ஆகிய மூன்றும் தான் மிகவும் விரும்பத்தக்க திறமைகளாகத் திகழ்கின்றன.

 

இதற்கானத் தீர்வு என்ன?

குருட்டு மனப்பாடத்தில் இருந்து நகர்ந்து செல்லுதல். இதற்காக, ஒவ்வொரு வருடமும் ஜூன் 10 ஆம் நாள் குருட்டு மனப்பாடம் எதிர்க்கும் தினமாக நாம் கொண்டாடுகிறோம். இதன் நோக்கம் குருட்டு மனப்பாடத்தை விடுத்தது சரியானக் கற்றல் முறைக்கு ஊக்கம் தருவதே ஆகும்.

இன்றைய தொழில்நுட்ப உலகில், சரியான வழி கற்றலை PC சார்ந்த கற்றல் முறை மூலம் கொண்டு செல்லலாம். இதைப் பின்வருமாறு செய்யலாம்:

  • ஈ-புத்தகங்கள்
    தற்போது உள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்புகளின் அளவு மாணவர்களைப் பயமுறுத்த வாய்ப்புண்டு. எனவே தான் சிறிய, சுருக்கமான மற்றும் ஊடாடக் கூடிய ஈ-புத்தகங்கள் மற்றும் PDFக்கள் கொடுப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


  • ஊடாடும் ஊடகம்
    ஒலி, காணொளி மற்றும் இயங்குபடங்கள் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் கவனத்தை நீண்ட நேரம் தக்கவைக்கிறது. எனவே இந்த முறையில் ஒரு கருத்து நீண்ட நேரம் அவர்களிடம் தங்கும்.

  • செயல்திட்டங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள்
    தனிநபர் விளக்கக்காட்சிகள் தரும் பொழுது ஒரு மாணவர் எந்த அளவிற்கு ஒரு கருத்தைப் புரிந்து வைத்துள்ளார் என்பது தெரியவரும், அதே நேரம் அவரது பேச்சுத்திறனும் மேம்படும்.

  • ஒத்த மாணவர்களுடன் கற்றல்
    Google ஆவணங்கள் மற்றும் மெய்நிகர் விவாதங்கள் போன்ற இணையக் கருவிகள் மூலம், மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து, புதிதான ஒன்றை உருவாக்கி கற்றும் கொள்ளலாம்.

  • சந்தேகம் தீர்க்கும் அமர்வுகள்
    புதிர்கள் மற்றும் பின்னூட்டப் படிவங்கள் மூலம், ஒரு கருத்தில் ஒரு மாணவருக்கு உள்ள புரிதலை அளவிட்டு, ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம்.

  • விருந்தினர் விரிவுரைகள்
    இணையவழி கற்றலில் எந்த உடல் சார்ந்த தடைகளும் இல்லை, உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் விரிவுரையாளர்களும் மாணவர்களுக்கு மெய்நிகர் வழியில் கற்பிக்கலாம்.

 

எங்கள் இணையவழி கற்றல் வெபினார்கள் மூலம், இந்த ஈடுபடுத்தும் ஊடாடும் கற்றல் முறைக்கு நீங்களும் மாறலாம்.