இக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்

 

எப்போதும் பாதுகாப்பு என்பதே பாதுகாப்பின் முன்னுரிமையாகும்

- சார்லஸ் M.ஹேஸ்

 

நமது அன்றாட வாழ்வின் ஒரு மிகப்பெரிய அங்கமாக தொழில்நுட்பம் திகழ்கிறது. அது மிகுந்த பயன்தரத்தக்கதாகவும், தகவல்கள் வழங்குவதாகவும் மற்றும் குதூகலமளிப்பதாகவும் இருந்தாலும், பிரவுசிங்கின் போது நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தாலும், அதிக இடர்கொண்டதாகவும் திகழ்கிறது. நல்ல கணிணி பாதுகாப்பு வழக்கங்களை பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் வழியாக, நீங்கள் உங்களையும் மற்றும் உங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

  சிறந்த பாஸ்வேர்டு

 

நாம் பல்வேறு அச்சுறுத்தும் கட்டுரைகளையும் மற்றும் மிகைபடுத்தப்பட்ட ஹேக்கர்கள் மற்றும் பிற அத்தகைய ஆபத்துகள் குறித்தவற்றயும் கண்டுள்ளோம். நிஜத்தில் அவற்றுள் சில மிகுதியான கற்பணையாகவே இருந்தாலும், பின்னர் வருந்துதைக் காட்டிலும் முன்கூட்டியே பாதுகாப்பாக இருப்பதே நல்லதே ஆகும். நீங்கள் என்ன செய்யலாம்:

  • நீண்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்தவும் – 8 அல்லது அதற்கு மேற்பட்ட கேரக்டர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • ஒரு உறுதியான கேரக்டர்கள் கலவையை பயன்படுத்தவும் மற்றும் பல்வேறு தளங்களுக்கு ஒரே பாஸ்வேர்டை எப்போதும் பயன்படுத்த வேண்டாம்
  • உங்கள் பாஸ்வேர்டுகளை எப்போதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது மற்றும் அவற்றை எப்போதும் எழுதக்கூடாது (குறிப்பாக ஒரு போஸ்ட்-இட் நோட்டில் எழுதி உங்களது மானிட்டரில் இணைப்பது)
  • உங்கள் பாஸ்வேர்டுகளை அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தவும். குறைந்தபட்சம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு (90 நாட்களுக்கு ஒரு முறை செய்வது மிகவும் நல்லது) ஒரு முறை.

 

சந்தேகத்திற்கு இடமானதாக இருப்பின், அதை திறக்க வேண்டாம்

 

ஏதேனும் ஒரு பிரபலமான ஆன்லைன் சேவையிலிருந்து வந்துள்ளது போன்று தோற்றமளிக்கும், தளத்தில் லாக் ஆன் செய்து தங்களது தனிப்பட்ட தகவல்களை உறுதி செய்யச் சொல்லும் மின்னஞ்சல்கள் எப்போதும் போலியானவையே!

இந்த மின்னஞ்சல்கள் பொதுவான உங்கள் மின்னஞ்சல் செயலியின் ஸ்பேம் ஃபில்டர் வழியாகவே அடையாளம் காணப்பட்டுவிடும். எனினும், அதிலிருந்து தப்பி, நீங்கள் அதை கிளிக் செய்கையில், உங்களிடம் சரியான மென்பொருள் இருப்பின், உங்கள் வெப் பிரவுசர் அதை கண்டறிந்து பிளாக் செய்து விடும்.

 

  பேக் அப் செய்யவும்

 

பேக்அப் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருப்பது எதிர்பாராத நேர்வுகளிலிருந்து உங்களைக் காக்கும். நீங்கள் உங்கள் தரவை பேக் அப் செய்யவில்லை எனில், வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேர்த்த விஷயங்களை இழக்க வேண்டியது நேரிடலாம் உங்கள் சாதனங்கள் நேரடி பாதுகாப்பு என்பது, அதன் தொழில்நுட்ப பாதுகாப்பிற்கு நிகரானதாகும்.

  • நீங்கள் உங்கள் கணிணியை விட்டு நீண்ட நேரம் விலகியிருக்க வேண்டியதிருந்தால், வேறு எவரும் அதை பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து விட்டு செல்லவும்
  • உங்களது ஃபிளாஷ் டிரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவில் நீங்கள் முக்கியமான தகவல்களைக் கொண்டிருந்தால், அவற்றையும் லாக் செய்து வைப்பதை உறுதி செய்யவும்
  • டெஸ்க்டாப் கணிணிகளை, பயன்படுத்தாத வேளையில் ஷட்டவுன் செய்யவும் அல்லது ஸ்கிரீனை லாக் செய்யவும்

 

உங்கள் குழந்தையயை இணையத்தில் பாதுகாப்பாக இருக்கச் செய்யும் அளவிற்கு நீங்கள் தற்போது ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணர் ஆகிவிட்டீர்கள் – மகிழ்ச்சிகரமான டிஜிட்டல் பேரண்டிங்கிற்கு வாழ்த்துக்கள்!