ஆன்லைன் கற்றல் முறை தொடர்பாக உங்கள் 2021 தீர்மானத்தில் சேர்க்க வேண்டியவை

சென்ற வருடத்தில், உலகம் மொத்தமாக மாறிவிட்டது. இன்று, பள்ளிக்கூடம் என்பது ஒரு கணினித் திரைக்கு முன்பு நடக்கிறது. 2021 இன் எதிர்காலத்தைப் பார்க்கையில், PC வழி கற்றலுக்கு நாம் பொறுப்பானத் தீர்மானங்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

PC கல்விக்காக உங்கள் புத்தாண்டு தீர்மானத்தில் சேர்க்கவேண்டியவை இவை

இணையப் பாதுகாப்பைப் பராமரியுங்கள்

உங்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமல், தனிப்பட்ட மற்றும் நாசூக்கான தகவல்களை இணையத்தில் போடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் கடவுச்சொற்களை உங்கள் பெற்றோரன்றி வேறு யாரிடமும் பகிர வேண்டாம். ஒரு பொது கணிப்பொறியை உபயோகிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உபயோகித்த கணக்குகளில் இருந்து லாக் அவுட் செய்வதை உறுதி செய்யுங்கள்.

உங்கள் திரை நேரத்தின் மீது கவனம் கொள்ளுங்கள்

உங்கள் இணைய நேரத்தை பொழுதுபோக்கு மற்றும் கல்வித் தேவைகளுக்காக உபயோகிக்கும் பொழுது, நீங்கள் இணையத்தில் செலவிடும் நேரம் குறித்த கவனம் அவசியமாகிறது. இணையத்தில் முடிவே இல்லாத பல மணிநேரங்களைக் கழிக்காதீர்கள்.

ஆன்லைன் வகுப்புகள் மூலம் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்

2021 இல், PC வழி கற்றல் முறையை உங்கள் நன்மைக்காக உபயோகியுங்கள். உங்கள் ஆர்வம் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும், உங்கள் சாமர்த்தியத்தை மேம்படுத்தும், நீங்கள் புதிய திறமைகளைக் கற்பதை உறுதி செய்யும் வகுப்புகளில் இணைந்து, உங்கள் நேரத்தின் தலைவர் ஆகுங்கள்.

இணையத்தில் பிறர் மீது அன்பாக இருங்கள்

இக்காலத்தில் வெறுப்புப் பேச்சுகளும் நீசத்தனமானக் கருத்துக்களுமே இணையத்தை ஆளுமை செய்கிறது. வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபடாமல் அனைவருக்கும் 2021 ஐ ஒரு நேர்மறையான ஆண்டாக மாற்றுங்கள். முன்னேற்றும் ஊக்குவிக்கும் ட்வீட்கள், பதிவுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் இணையத்தை பாதுகாப்பாக மாற்றுங்கள்.

இந்தத் தீர்மானங்களை ஆண்டு முழுவதும் கடைபிடித்து இணையத்தை கல்வி கற்க பொறுப்பாக உபயோகியுங்கள்.