உங்கள் குழந்தை படிப்பதற்கான மூன்று திறமையான வழிகள்

 

ஒவ்வொரு குழந்தைளும் அவரவர் படிக்கும் விதங்களில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சிலர் அவர்களுக்கு பிடித்தமான பாடங்களை கஷடப்பட்டு படிப்பார்கள் மேலும் இன்னும் சிலர் படிக்க வேண்டுமே என்று படிப்பார்கள். ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்ததையே கொடுக்க விரும்புவீர்கள் மேலும் வாழ்க்கைக்கான கற்றலுடன் லாங்-டர்ம், பாசிட்டிவ் ரிலேஷன்ஷிப்பையும் அவர்கள் பெற்று வளர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.

அதிகரித்து வரும் மன அழுத்தம் கொண்ட விவகாரமாக தேர்வுகள் இருப்பதால், உங்கள் பிள்ளைகள் அதிக நம்பிக்கையுடன் இருக்கவும், அந்த நாளிற்கென தயாராக இருக்கவும் நீங்கள் பின்வரும் நிரூபிக்கப்பட்ட மற்றும் பயனுள்ள ஆய்வு முறைகள் மூலம் அவர்களுக்கு உதவுங்கள்:

1. டெஸ்டிங்கை ப்ராக்டிஸ் செய்யவும்.

இது தான் படிப்பதற்கான மிக முக்கியமான பொதுவான வழிமுறை ஆகும், இது உங்களுக்கு சாதகமாக முறையில் வேலை செய்யும். கேள்வித் தாள்களை மீண்டும் மீண்டும் தீர்க்கும் திறன் மிகவும் சிறந்தது ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அவ்வாறு செய்யும் ஒவ்வொரு முறையும் அதை சிறப்பாக செய்ய உதவுவதுடன் தகவல்களை நினைவில் கொள்ளவும் உதவும். அதோடு, உங்கள் குழந்தை ரீ-லேர்னிங்கிற்காக பாடங்களை அடையாளம் காண முடியும்.

டீச்சர்ஸ் கூகுள் ஃபார்ம்ஸ் மூலம் குயிஸ்களை கொடுக்கலாம் அல்லது மாணவர்கள் பாடம் சார்ந்த வெப்சைட்களில் இருந்து அவர்களாகவே சொந்த நடைமுறை சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

2. டிஸ்ட்ரிப்யூட்டடு ப்ராக்டிஸ்

பாடத்தின் ஒரு பெரும்பகுதியை நீண்ட நேரத்திற்கு விழுந்து விழுந்து படிப்பதற்கு பதிலாக, சரியான நேர இடைவெளிகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், பாடத்தை சிறிய பகுதியாக பிரித்து படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மூளையானது அவ்வப்போது கற்கும் புதிய தகவல்களை உட்கிரகித்துக் கொள்வதற்கான நேரத்தைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தை ஒரு நாளில் புவியியல் பகுதியை ஒரு வேடிக்கையோடு படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், இருப்பினும் முழு பாடத்தையும் ஒரே மூச்சாக படிக்காமல் ஒவ்வொரு மணி நேரத்திற்கு பிறகும் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற ப்ரேக்ஸ் ஊக்கப்படுத்தும் TED டாக்ஸ் அல்லது எஜூகேஷனல் ஸ்போர்க்கல் கேம்ஸாக இருக்கலாம் இது படிப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.

இங்கே இருப்பது முக்கியமானது ஒரு கால அட்டவணையை அமைப்பது, இடைவெளிகளுக்கு எடுக்கும் நேரத்தை கணக்கிடுவது – அது பதினைந்து நிமிட இடைவெளியாக இருந்தாலும் அதையும் கணக்கெடுக்க வேண்டும்!

3. விரிவான வினாவல்கள்

விரிவான வினாவல்கள் ஒவ்வொரு கோட்பாட்டிற்கும் பின்னால் "ஏன்" என்பதை கண்டுபிடிப்பதற்கான செயல்முறையாக வரையறுக்கப்படுகிறது. கூகுள் ஸ்காலர் போன்ற PC-எனேபுல்டு டூல்ஸ் உண்மையில் உங்கள் குழந்தை பாட பொருளை ஆழமாக தோண்டியெடுக்க உதவும் ஒரு தொடக்க புள்ளியாக அமையலாம். "ஏன்" என்பதைக் கண்டறிவதன் மூலம் உங்கள் குழந்தை வகுப்பில் கற்றுக்கொண்டதை நிஜமாகவே உலகத்தில் உள்ள பொருளோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடர்புபடுத்த முடியும்.

இந்த முறை குழந்தைகள் அவர்களது வேகத்திலேயே சென்று படிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் கருத்துக்களை நன்றாக புரிந்து கொண்டு நீண்ட காலம் நினைவில் கொள்ளவும் செய்கிறது.