நீங்கள் பின்பற்றக் கூடிய மூன்று குழந்தை யூ ட்யூபர்ஸ்

 

யூடியூப்பின் மகிழ்ச்சி என்னவென்றால், நீங்கள் விரும்பும் எதையும் பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்க முடியும்.”

- பெயர் வெளியிடாதவர்

 

உங்களுக்கு யூடியூப்பை பிடிக்கும், ஆமாம் தானே? நீங்கள் இசையைக் கேட்பதற்காக, சில வேடிக்கையான குறும்பு வீடியோக்களைப் பார்க்க மற்றும் படிப்பு அல்லது முழுமையான அசைண்மெண்ட்டை செய்ய தேடும் ஒரு இடம்.

 

ஒரு கேமராவின் பின்னால் இருப்பவர் இதற்கான முயற்சியை எல்லாம் செய்கிறார், மில்லியன் கணக்கான மக்களுக்கு வீட்டில் உள்ள ஒரு PC யின் சக்தியுடன் ஊக்கமளிக்கிறார். ஒரு யூடியூபர் ஒரு எளிய சிந்தனையுடன் அவரது செயல்பாட்டை  முன் வைத்து  அவரை அடையாளப்படுத்துகிறார். உங்களுக்காக சில உத்வேகம் இங்கே உள்ளன: 

 

1. அமரோடு சேர்ந்து கற்க 

அமர் தோகிதி இந்தியாவை சேர்ந்தவர், பல இளைஞர்களில் ஒருவர் மேலும் மிகவும் பிரபலமான யூ ட்யூபர். இவர் புவியியல் பாடங்களை வேடிக்கையாக, தொடர்புடைய முறையில் விளக்குகிறார், இது நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை விட உரையாடுகிறீர்கள் என்ற உணர்வையே கொடுக்கிறது. இவர் தனது 10 வது வயதிலேயே  2016-ம் ஆண்டு “ லேர்ன் வித் அமர்” என்ற யூ ட்யூப் சேனலை ஆரம்பித்தார்.

தற்போதைய யூ ட்யூப் வலிமை – 281,021

 

2. கைராஸ்கோப் டாய் ரிவியூஸ்

கைராஸ்கோப் டாய் ரிவியூஸ் என்பது ஒரு பிரபலமான யூ ட்யூப் சேனல் ஆகும், இது கைரா என்ற பெயர் கொண்ட ஒரு 7 வயது சிறுமியால் 2016 –ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவளது சேனல் பொம்மை பற்றி கருத்தாய்வுகளைக் கொண்டிருக்கும், மேலும் சிறு கதைகளையும், ஊக்க துணுக்குகளையும் மற்றும் சில வேடிக்கையான குடும்ப தருணங்களையும் கொண்டிருக்கும். அடிப்படையில் உங்களுக்கான ஒரு “வேடிக்கையான கல்வி” தொகுப்பு அது.

தற்போதைய யூ ட்யூப் வலிமை – 11,622 

 

3. டெக் ரிவியூவர் ரோஹித் சிங் 

ரோஹித் சிங் என்பவர் 14 வயதானவர் மேலும் இந்தியாவை சேர்ந்த மிக இளைய டெக் யூ ட்யூபர். இவர் 2015-ல் தனது சேனலை ஆரம்பித்தார். அவர் வைத்திருக்கும் கேஜெட்களை திறந்து மதிப்பாய்வு செய்கிறார் மேலும் சாதனங்களுடன் மறுஆய்வு வீடியோக்களை உருவாக்குகிறார், தொழில்நுட்பத்தில் அனைத்து பொருட்களுக்குமான அவரது தனித்துவமான தனிப்பட்ட முன்னோக்கு விளக்கங்களை அளிக்கிறார்.

 

தற்போதைய யூ ட்யூப் வலிமை –2637

 

இப்போது நீங்கள் உங்களைப் போன்ற இந்த குழந்தைகளைப் பற்றிய கதைகளை படித்திருக்கிறீர்கள், இவர்கள் போன்றே ஒரு காரியத்தைச் செய்ய நீங்கள் உற்சாகமாகவும் உந்துதலாகவும் இருக்கிறீர்கள் இல்லையா?

 

PS: யூ டியூப் என்பது இண்டர்நெட்டின் தொடக்கத்திற்கான ஒரு முனை மட்டுமே. ஒரு PC என்பது உங்களுக்கு பிடித்த பொம்மையாக, உங்கள் நூலகமாக இருக்கலாம் மற்றும் ஒரு முறை கிளிக்கில் பொழுதுபோக்கு அனைத்தும் ஒன்றாக உருட்டப்படுகின்றன. வீட்டில் ஒரு PC யை வைத்திருந்தால் அது உற்பத்தித்திறன் மிக்க வாய்ப்பை வழங்கும் மேலும் உங்கள் நூலகத்திற்கு அப்பாற்பட்ட அறிவை நீங்கள்  பெற முடியும்.