குழந்தைகள் விரும்பும் மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள்

 

ஒரு மேக்கர்ஸ்பேஸ் என்பது பலவிதமான கருவிகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய, சிந்தனை செய்யக்கூடிய, கண்டறியப்படக்கூடிய ஒரு இடமாகும்.

ஒரு மேக்கர்ஸ்பேஸ் என்பது பலவிதமான கருவிகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய, சிந்தனை செய்யக்கூடிய, கண்டறியப்படக்கூடிய ஒரு இடமாகும். [1]இந்த இடமானது குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றாததால், அதை அவர்களே தயார்செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

இந்த மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் சேரும்போது அவர்கள் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகிறது. இந்தத் திட்டங்கள் கல்விசார்ந்தவையாக மட்டுமல்லாமல், மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளன.

1. 4 சக்கர பலூன் கார்

இந்தத் திட்டமானது குழந்தைகளுக்கு பொழுதுபோக்காகவும் இருக்கும் மற்றும் கற்பிக்கும் வகையிலும் இருக்கும். பாடப்புத்தங்களில் மட்டும் குழந்தைகள் படிக்கும் முக்கியமான இயற்யியல் சொற்களான உந்தம், விசை, உராய்வு மற்றும் வேகம் ஆகியவை பலூன்கள், உறிஞ்சுகுழாய், பாட்டில்கள் மற்றும் டேப் போன்ற அடிப்படை பொருட்களுடன் நமது வாழ்வில் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தை உருவாக்க வீட்டில் உள்ள பழைய பொருட்களை குழந்தைகள் மீண்டும் பயன்படுத்துகிறார்கள், இது தங்கள் முடிவுகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

2. ஒரு அமைப்பாளராக லீகோ(Lego)

லீகோ(Lego) என்பது ஒரு வேடிக்கையான மற்றும் பல்வகைப்பட்ட மேக்கர்ஸ்பேஸ் பொருள் ஆகும், இது பலவற்றை கட்டமைக்கப் பயன்படுகிறது. பல்வேறு வகையான துண்டுப்பொருட்களை இணைத்து, சேமிப்பதற்கான டிராயர்கள் மற்றும் வெற்று இடங்களை உருவாக்குவதன் மூலம், உங்கள் குழந்தைகளால் எழுதுபொருட்கள், நாணயங்கள், பளிங்கு கற்கள், சார்ஜிங் கேபிள்கள் போன்றவற்றிற்கான ஒரு அமைப்பாளரை உருவாக்க முடியும். இது நிஜ வாழ்க்கை சூழ்நிலையில் வடிவங்கள், பரிமாணங்கள் மற்றும் இடம் போன்ற அடிப்படை வடிவியல் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது.

3. கடத்தும் திறன் கொண்ட வாழ்த்து அட்டைகள்

கைநிறைய பெற்ற அனுபவமானது ஒரு குழந்தைக்கு புரிந்துகொள்ள உதவுவதோடு, பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட இயற்பியல் பாடங்களை நன்றாக தொடர்புபடுத்திப் பார்க்க உதவுகிறது. பெற்றோர் அல்லது மேற்பார்வையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மின் திறன், மின் அலகுகள் மற்றும் மின்னழுத்தம் போன்ற கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கும், கற்பனை செய்வதற்கும் கடத்தும் திறன் கொண்ட வாழ்த்து அட்டைகள் என்பது ஒரு அருமையான வழியாகும். இந்த திட்டமானது மின் வழங்கல் குறித்த அறிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு உதவுகிறது, மேலும் சிறப்பான சந்தர்ப்பங்களில் புதுமையாக இருப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

ஒவ்வொரு மேக்கர்ஸ்பேஸ் திட்டமும் உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள புதியவற்றை வழங்குகிறது. ஒரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் இருந்து வரும் சாதனை உணர்வு என்பது வேறு எதிலும் கிடைக்காது. மேலும், ஒரு குழந்தை நம்பிக்கையானவராக உணர்கிறார் மற்றும் கற்றல் குறித்த அடுத்த திட்டத்தை எடுக்க ஊக்கம் பெறுகிறார். மேக்கர்ஸ்பேஸ் என்பது எதிர்காலத்திற்கான நூலகம் ஆகும், மேலும் மேக்கர் மனதை கட்டமைப்பதன் மூலம், நாளைய தொழில்நுட்பம் சார்ந்த உலகில் வெற்றிகரமாக இருப்பதற்கு தேவையான சரியான திறன்களை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு உதவுகிறது.

உங்கள் குழந்தை ஒரு மேக்கர்ஸ்பேஸ் திட்டத்தை செய்துபார்க்க முயற்சித்திருக்கிறாரா? #DellAarambh-ஐ பயன்படுத்தி ட்விட்டரில் அவர்களின் படைப்பாற்றலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த இடமானது குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றாததால், அதை அவர்களே தயார்செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

இந்த மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் சேரும்போது அவர்கள் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகிறது. இந்தத் திட்டங்கள் கல்விசார்ந்தவையாக மட்டுமல்லாமல், மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளன.