ஒரு பிசி, நீங்கள் மூன்று வழிகளில் புதிய சொற்களை கற்றுக்கொள்ள உதவும்

சொற்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. அவை நமது உரையாடல்கள், நீங்கள் பள்ளியில் படிக்கும் பாடங்கள், மற்றும் நீங்கள் மகிழக்கூடிய எல்லாவிதமான &ndash டிவி நிகழ்ச்சிகள், கிரிகெட் மேட்ச்சுக்கள் மற்றும் மற்றவற்றை வளர்க்கும் அமைப்புகளாகும். அப்போது, நீங்கள் புதியவற்றை நீங்கள் எப்படி கற்றுக்கொள்கிறீர்கள்?

1) படி, படி, & படி!

பெரியவர்கள் உட்பட எல்லா வயதினருக்கும் மிகவும் முயற்சித்து மற்றும் பரிசோதிக்கப்பட்ட ஆலோசனை, தினமும் படிப்பதால் சொல்வளம் மேம்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நீங்கள் புதிய சொற்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு மற்றும் மொழியின் பொருளை புரிந்துக்கொள்ள முடியும். நீங்கள் உண்மையில் ரசிக்கக்கூடியதை படிப்பது தான் இதன் யுக்தி. அதனால், நீங்கள் நீண்டகால அடிப்படையில் அதை பற்றிக்கொள்ளலாம். புனைவு மற்றும் புனைவல்லாத கதைகள் இரண்டிற்கும் Good Reads[1] மற்றும் Read Any Book[2] தேர்வுகள் சிறந்தவை. நீண்ட படிப்பு உங்களுக்கு நீண்டகால ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்றால், செய்தி திரட்டி வலைத்தளங்களான Flipboard[3] மற்றும் In Shorts[4] போன்றவற்றிற்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள், அவை உங்கள் விருப்பத்திற்கேற்ற கட்டுரைகளை தனிப்பயனாக்கும்.

2) ஆமாம், நீங்கள் விளையாடிக்கொண்டே படிக்கலாம்

உங்களுக்கு உண்மையில் மகிச்சியளிக்கும் விளையாட்டை The Problem Site [5], EceEnglish [6] மற்றும் Free Rice[7] லிருந்து தேர்வு செய்து விளையாடலாம். நீங்கள் பள்ளியில் பிரேக் டைம்மில் ஒரு குரூப்பாக விளையாடலாம் அல்லது பள்ளி முடிந்த பின் அல்லது விடுமுறை நாட்களில் வீட்டில் உங்கள் பிசியில் விளையாடலாம். இதன் சிறந்த பகுதியானது, உங்களுக்கு *போர் அடிப்பது* மற்றும் பாதியில் விட்டு விடுவதற்க்கான வாய்ப்பே இல்லை. உங்களது ஊக்கம், உங்களுடைய அல்லது உங்கள் நண்பருடைய சிறந்த மதிப்பெண்களை முறியடிப்பதாக இருந்தாலும், நீங்கள் தினமும் ஒரு விளையாட்டு விளையாடினால், ஒன்று அல்லது இரண்டு சொற்களை கற்கலாம். வித்தியாசத்தை காண விளையாடுங்கள்!

3) தினமும் ஒரு சொல் என்ற சவாலை ஏற்படுத்துங்கள்

நீங்கள் சொந்தமாக விளையாட்டை ஏற்படுத்தும் ஐடியா உங்களுக்கு பிடித்திருந்தால், தினமும் ஒரு சொல் சவாலை ஏற்படுத்துங்கள். நீங்கள் Word Think [8]-ன் உதவியுடன் உங்கள் கிளாஸ்மேட்கள், நண்பர்கள், டியூசன் குரூப் அல்லது குடும்பத்தினருடன் விளையாடலாம். இது ஒரு குரூப்பில் எப்படி செயல்படும் என்பது இங்குள்ளது.


1) ஒரு மோடரேட்டரை வைத்துக்கொள்ளுங்கள், வலைத்தளத்திலிருந்து ஒரு சொல் மற்றும் அதன் அர்த்தத்தை கண்டுப்பிடிக்கும் ஒரு நபர்.

2) குரூப்பில் உள்ள எல்லோரும் அர்த்தத்தை எழுத வேண்டும்.

3) மோடரேட்டர் சரிபார்த்து சரியான பதிலுக்கு ஒரு பாயிண்டு அளிப்பார்.

கடைசியில் அதை கூட்டிய பின்னர், வெற்றியாளர் அவன் அல்லது அவளுக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்யட்டும்.

நீங்கள் #DellAarambh-ஐ பயன்படுத்தி இன்று உங்கள் குழந்தை எந்த புதிய சொல்லை கற்றுக்கொண்டார் என்பத எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள்.