உங்கள் குழந்தைக்கு ஹைபிரிட் கல்விமுறை பயனுள்ளதாக மாற்ற சில குறிப்புகள்

குழந்தைகளுக்குக் கல்வியைப் புகுத்த ஆன்லைன் அமைப்புகளின் பயன்பாட்டை ஹைபிரிட் கற்றல் முறை உபயோகிக்கிறது. பெருந்தொற்றின் காரணமாக இப்பொழுது பெரும்பாலான பள்ளிகளில் இதுவே வழக்கமாக மாறிவிட்டது. ஹைபிரிட் கல்விமுறை இங்கே நிலைத்திருக்கப்போவதால், குழந்தைகளுக்கு இதை மேலும் வேடிக்கையாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் மாற்ற பெற்றோர்களுக்கு சில குறிப்புக்கள் இதோ:

  1. ஒரு வரையறுக்கப்பட்ட கல்வி இடம்: வீட்டில் இருந்தும் வேலை பார்க்கும் பெற்றோர்களுக்கு தனி ரிமோட் அலுவலக இடங்கள் இருப்பது போல, குழந்தைகளுக்கும் தங்கள் வகுப்புகள் மற்றும் பிற வழக்கமான கற்றல் செயல்களைச் செய்ய ஒரு தனியிடம் தேவை
  2. சுய இயக்கக் கற்றல்: வகுப்புகளில் நீங்கள் தொடர்ந்து உதவுவதைத் தவிருங்கள். இதனால் குழந்தைகள் தங்கள் மீது நம்பிக்கை பெற ஆரம்பித்து வகுப்பில் நடக்கும் தலைப்புகளை தாங்களே கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் சிறு வயதிலேயே அவர்கள் சுதந்திரமாகக் கற்க ஆரம்பிப்பார்கள்.
  3. ஊடாடும் கருவிகளை உபயோகியுங்கள்: வைட்போர்டுகள், நேரலை-அரட்டைகள் மற்றும் தொடர் பின்னூட்டங்கள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ரிமோட் கற்றலின் போது சிறப்பான தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை உருவாக்க உதவும். தூண்டுதல் மூலம் வெட்கப்படும் மாணவர்களையும் வகுப்பறையில் ஈடுபட வைக்கலாம்.
  4. அடிக்கடி இடைவேளை: தொடர்ந்து திரையைப் பார்ப்பது ஆபத்தில் முடியக்கூடும். இதைத் தவிர்க்க, புதிர்களைத் தீர்ப்பது மற்றும் ஒலிப்புத்தகங்களைக் கேட்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளை ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையே நடத்தி திரையைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம்.
  5. விரிவானக் கற்றல்: கல்வி என்பது முழுமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் ஒட்டுமொத்த கவனம், வெளிப்பாடு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க சரியான விகிதத்தில் PC சார்ந்த கற்றல் மற்றும் ஊடாடும் உடற்பயிற்சிகள் இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு PC கற்றல் முறையை எப்படி ஒரு தூண்டுகோலாக மாற்ற முடியும் என்பதை அறிய எங்கள் வெபினாரில் இணையுங்கள் - https://www.dellaarambh.com/webinars/