ஒரு நல்ல ஆசானை – சிறந்த ஆசானாக மாற்றுவது எது?

அனைத்து பிற தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழிலாக கற்பித்தல் திகழ்கிறது”

- யாரோ ஒருவர். [1]

 

ஒரு ஆசானை சிறந்தவராக மாற்றுவது எது? ஒரு பெற்றோர், குழந்தைகளின் கல்வித் திறனை தொடர்ச்சியாகவும் மற்றும் சிறப்பாகவும் வெளிக்கொணரும் தன்மை என்று கூறலாம். மற்றொரு வகையில், ஒரு சிறந்த ஆசான் என்பவர், தினசரி கற்றலில் குதூகலத்தை புகுத்தி, கருத்தாக்கம் எவ்வளவு சிக்கலாக இருப்பினும் அதை புரிந்துகொள்வதையும் மற்றும் நினைவுபடுத்திக்கொள்வதையும் சுலபமாக்கும் வகையில் கற்றுத்தரும் தன்மை என மாணவபர்கள் கூறலாம்.

எனில், ஒரு நல்ல ஆசானை – சிறந்த ஆசானாக மாற்றுவது எது?

 

1. அவர்கள் இலக்குகளைக் கொண்டிருப்பர்

நீங்கள் ஒரு இலக்கினை நிர்ணயிக்கையில், ஒரு நீண்ட – கால கண்ணோட்டத்தை பெறுவர். உத்வேகமும் மற்றும் செயல்பாடுகளும் இயற்கையாகவே தொடரும். உயர் எதிர்பார்ப்புகளை நிர்ணயிக்கையில், நீங்கள் உங்களுக்கு உத்வேகம் அளித்துக்கொள்வீர் மற்றும் தெளிவான திசை தெரியவரும்.

 

2. அவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தயாராவர்

செயல்திட்டம் இல்லா இலக்கு இலக்கே அல்ல? அது வெறும் கனவு! அதன் காரணமாகவே, ஆசிரியர் பணிகளில் பாடங்களை – திட்டமிடல் என்பது மிக முக்கியமானதொரு அங்கமாகும். அது, நாடகத்திற்கு முன்பாக ஒத்திகை பார்ப்பது போன்றதாகும். இதோ உங்களுக்காக ஒரு துவக்கப்புள்ளி: பாடதிட்டங்களுக்கான உங்களுக்கான அத்தியவசியமான 5 புள்ளிகள்

 

3. அவர்கள் கவனிக்கின்றனர்

இது, நாம் தவறவிடும் சாத்தியமுள்ள விஷயங்களில் ஒன்றாகும். நாம் கேட்கிறோம், ஆனால் கவனிப்பதில்லை. பல்லாண்டுகால ஆய்வுகளில், மாணவர்களுடன் ஒரு ஒறவினை கட்டமைக்க ஆசிரியர்கள் நிஜத்தில் முயற்சிப்பதும் மற்றும் அவர்கள் கூறுவதிலும் மற்றும் கேட்பதிலும் கவனம் செலுத்துவதையும் – ஒரு சிறப்பான செயல்திறன் மற்றும் ஈடுபாடு கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கும் முயற்சிப்பது தெரியவந்துள்ளது.[2]

 

4. அவர்கள், அவர்களது கற்பித்தலை நிஜ வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கின்றனர்.

இந்த இடத்திலேயே கணிணி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு கணிணியானது, உண்மையாகவே கற்பித்தலை நிஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகிறது மற்றும் பிரசன்டேஷன்கள், வீடியோக்கள், இன்ஃபோகிராஃபிக்குகள், கல்வி விளையாட்டு மற்றும் பல்வேறு பிற அத்தகைய இடையீடு மிக்க மற்றும் உடனடியாக கிடைக்கப்பெறும் ஆதாரங்களின் வழியாக அது சாத்தியமாகிறது.

 

5. அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்கிறார்கள்

உங்கள் கற்பித்தல் பணியின் எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து விரல் நுணியில் விபரங்களை அறிந்திருக்க வேண்டும். நிஜத்தில் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்தோ அல்லது உங்களுக்கு முற்றிவலும் புதிதான ஒரு விஷயம் குறித்தோ கற்றுக்கொள்வது, உங்கள் கண்ணோட்டத்தை விசாலப்படுத்தும். இது உங்களை அறிவுசார் தூண்டுதலுக்கு ஆளாக்குவதோடு மட்டுமின்றி, தங்களுக்கு முன் தோன்றும் வாய்ப்புகளை அடையாளம் காணவும் உதவும்.

இவையனைத்தும் ஒருங்கிணையும் புள்ளி #DigitalLearning, இதில் கணிணிகள் உட்பட்ட தொழில்நுட்பத்தின் முழுமையான ஆற்றலை பயன்படுத்தி, உங்களது மாணவர்களுக்கு மிகச்சிறந்த கற்றலை சாத்தியமாக்கலாம்.