டெல் ஆரம்பிற்கு ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி நோக்கங்கள் என்ன அர்த்தமாகிறது

 

செப்டம்பர் 2015 இல், ஐ.நா பொதுச் சபை நிலையான வளர்ச்சிக்கான 2030 செயற் நிரலை ஏற்க சம்மதித்தது, அதன் மையத்தில் 17 நிலையான வளர்ச்சி நோக்கங்கள் (எஸ்.டி.ஜி) இருந்தன. இந்த எஸ்.டி.ஜி-க்கள் வறுமையை போக்கவும், சுகாதாரம் மற்றும் கல்வியை உயர்த்தவும், சமத்துவமின்மையைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் பல நாடுகளை அழைத்தன.

இந்த எஸ்.டி.ஜி-க்களில், தங்கள் குடிமக்களுக்கு உள்ளடக்கிய மற்றும் நியாயமான தரமான கல்வியை வழங்குவதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும், மேலும் வாழ்நாள் முழுவதும் அனைவருக்குமான கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிப்பதாக 4வது நோக்கம் கூறுகிறது.

 

 

இன்று, பருவநிலை மாற்றம் போன்ற சிக்கல்கள் முன்னிலை வகிப்பதால், நமக்கு நாமே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட முக்கியமாகிறது, சரியான திறன்கள், மதிப்புகள் மற்றும் அணுகுமுறைகளுடன் நம்மைச் தயாராக்கிக் கொள்வது அவசியமாகிறது.  தரமான கல்விக்கான வாய்ப்பைப் பெறுவது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை ஊட்டவும், சிறந்த வாழ்க்கை முறைகளை உருவாக்கவும் உதவும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வெளிவருகின்றன. இந்த சூழலில், நிகழ்நிலை படிப்புகள் மற்றும் ஊடாடும் கற்றல் மூலம் கல்வி எண்ணிலக்க தளத்தை நோக்கி நகர்வதால், அடிப்படை திறன்களுடன் தன்னைச் வளர்த்துக்கொள்வது மிக முக்கியம்.

தற்போதுள்ள இந்த எண்ணிலக்க பிளவை இணைப்பதற்கு, டெல் டெக்னாலஜிஸ் மற்றும் யுனெஸ்கோ எம்.ஜி.ஐ.இ.பி ஆகியவை பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய பிசி திறன்களைக் கற்பிப்பதற்காக இணைந்துள்ளன. இந்த இணைப்பின் மூலம், குழந்தைகள் மத்தியில் கற்றலை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் திறனை வளர்க்கவும் தரமான கல்வி பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்குவார்கள்.

டெல் ஆரம்பும், யுனெஸ்கோவின் எம்.ஜி.ஐ.இ.பி-யின் ‘ஃப்ரேமர்ஸ்பேஸ்’ தளமும் ஒன்றினைந்து அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கிறது, எனவே அமைதியான மற்றும் நிலையான சமூகங்களை உருவாக்க கல்வியின் எஸ்.டி.ஜி 4.7-ஐ நோக்கி செயல்படுகிறது.

எண்ணியக்க கற்றலுக்கான ஆசிரியரின் பயணம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் (ஐ.சி.டி) டெல் ஆரம்ப் வழங்கிய ஸ்பிரிங்போர்டால் ஆரம்பிக்கப்படும். இதற்கிடையில், ஃப்ரேமர்ஸ்பேஸ் ஆசிரியர்களுக்கு பலதரப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்கும் திறன்களையும், கல்வியின் தரத்தை உயர்த்த உதவும் ஒரு பகுப்பாய்வு நுண்ணறிவையும் வழங்கும்.

ஃப்ரேமர்ஸ்பேஸ், ஏஐ-யில் இயங்கும் டிஜிட்டல் தளம், ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கான தனிப்பட்ட கற்றல் திட்டங்களை கருத்தாக்கம் செய்யவும், செயல்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் உதவும். ஐ.சி.டி மற்றும் முன்னோக்கிய தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவை இது ஆசிரியர்களுக்கு வழங்கும், ஆகவே தரமான கல்வியை அடைய அவை மாணவர்களுக்கு உதவும்.

இந்த தன்மயமாதல் மூன்று நிலைகளில் பரவுகிறது: ஆசிரியர்களுக்கு ஃப்ரேமர்ஸ்பேஸைப் பயன்படுத்த பயிற்சி அளித்தல், 200 மணிநேர பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கு கூட்டு சான்றிதழ் வழங்குதல் மற்றும் கற்றல் விளைவுகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்.

இந்த இணைப்பின் மூலம், கல்வியின் எஸ்.டி.ஜி.யை சாதிப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களைச் அடைவோம் என நம்புகிறோம் மற்றும் மற்றவர்களுக்கும் டிஜிட்டல் கல்வியைத் தொடர்ந்து வழங்கும் ஆசிரியர்களின் குழுவை உருவாக்குவோம் என நம்புகிறோம்.