உங்கள் குழந்தையின் முதல் கற்றல் கருவியாக கம்ப்யூட்டர் ஏன் இருக்கவேண்டும்?

ஒரு குழந்தையின் மிக முக்கியமான வழிகாட்டிகள் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான். பொதுவாக, ஒரு குழந்தைகள் உண்மைகளை விவாதிக்கவும் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பதில்களுயம் எதிர்பார்க்கக்கூடும் [1].

 

 

அதே சமயம் வழிகாட்டிகள் சார்ந்திருக்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம், அவர்களுக்கென்று பின்னடைவுகள் இருக்கலாம். உதாரணத்திற்கு, பெற்றோர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்காது, அதே சமயம் ஆசிரியர்கள் எல்லா நேரங்களிலும் கிடைக்கப்பெறுவதில்லை. மேலும், குழந்தைகளில் மறுமொழி அமைப்பு மிகவும் தேர்வுக்குரியதாக இருக்கலாம், அவர்களில் பெரும்பாலானவர்கள் காட்சிகள், ஒலி மற்றும் நிறங்களுக்கு ஆற்றலுடன் பதில் தரலாம் [2]. ஒரு உள்ளார்ந்த வகையில் நமது கற்றலுக்கான சாத்தியத்தை நாம் அதிகரிக்கிறோம் என்பதை இது முக்கியமானதாக ஆக்குகிறது. அந்த வகையில் ஒரு நம்பிக்கைக்குரிய தோழனாக – கம்ப்யூட்டர் மீட்பில் வருகிறது.

“பெற்றேர்களுக்கு எல்லாமும் தெரியாது அதே சமயம் ஆசிரியர்கள் எல்லா நேரங்களிலும் கிடைக்கப்பெறுவதில்லை.”

 குழந்தைகள் அனைத்தையும் அறிந்துகொள்ள ஆவலாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உலகை ஆய்ந்திட விரும்புகிறார்கள் மற்றும் இருக்கக்கூடிய முடிவற்ற சாத்தியங்களை அறிய விரும்புகிறார்கள். ஒரு கம்ப்யூட்டருடன், இன்டர்நெட்டில் கிடைக்கப்பெறம் பல்வேறு கல்வி வளங்களை ஒரு குழந்தையால் அணுக முடியும்.

மேலும், ஒரு கம்பயூட்டர் உங்கள் குழந்தையின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவுகிதறு. 1993ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கின்டர்கார்ட்டன் மாணவர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது நேரத்தில் 90% வேலையில் (கவனம் செலுத்துவதில்) அவர்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளது.

ஊடாடலுடன் கூடிய பாடங்கள் தகவலை சிறப்பாக புரிந்துகொள்ளவும் மற்றும் தகவல்களை தக்கவைத்துக்கொள்வதற்குமான குழந்தையின் திறன்களை விரிவாக்குகிற காட்சிகள் மற்றும் நிறங்களை பயன்படுத்துகின்றன. கல்வித் திட்டங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களை உருவாக்கலாம், அதே சமயம் விளையாட்டுகள் அடிப்படையிலான வேடிக்கை கருத்தாக்கங்கள் குழந்தையின் ஆற்றலுடன் அறிவை கிரகித்து தக்கவைக்க உதவுகிறது, இது சைக்காலஜி டுடேவில் வெளியிடப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்டையில் அறியப்படுகிறது.

 

 

டக்ளஸ் எச். கிளெமன்ட்ஸ் வெளியிட்ட “The Effective Use of Computers with Young Children" (குழந்தைகளுடன் கம்ப்யூட்டர்களின் ஆற்றல்மிக்க பயன்பாடு)” என்கிற ஆய்வுக்கட்டுரை கம்ப்யூட்டர்களின் பயன்களுக்கு ஆதாரமாக இருக்கிறது. அதில் அவர், “ பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும், வரைவதற்கும் டர்டல் வடிவியலை   செய்வதற்குமான புதிய வகைகளை கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் குழந்தைகள் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம், அது அவர்களுக்கு கற்றலுக்கும் கணித ரீதியாகவும் அறிவியில் ரீதியாகவும் மேம்படுவதற்கு உதவுக்கூடும் “ என்று கூறுகிறார்.

பல பெற்றோர்கள் டேப்லட்கள் மற்றும் பிற மொபைல் சாதனங்களை நோக்கி ஈர்க்கப்படும்போது, ஒரு கம்ப்யூட்டர் தரக்கூடிய அதிவேகமான மற்றும் தொட்டுணரக்கூடிய சூழலை அவற்றால் வழங்க முடியாது. மொபைல் சாதனங்கள் நம்பமுயாத வகையில் குழந்தைகளுக்கு சிறந்த சாதனங்கள் என்றாலும், அவர்கள் மொழியை உணர்ந்து எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் வாக்கியங்களை உருவாக்கும்போதும், வாசித்தல் மற்றும் எழுதுதல் மூலம் குழந்தையின் கற்றலை கம்ப்யூட்டர் மேம்படுத்தும் என்பதால் அவர்களுக்கு அதை அறிமுகப்படுத்துவது சிறந்தாக இருக்கும்.

கம்ப்யூட்டர் உங்கள் குழந்தையின் முதன்மை சாதனமாக இருக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணம் நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் அடிப்படையான அல்லது மிகவும் முதன்மையான சாதனமாக இருக்கிறது. புதிய நூற்றாண்டில் செய்யப்படும் அத்தனை மேம்பாடுகளுக்குமான ஒரு முன்னோடியாக அது இருக்கிறது மற்றும் உங்கள் குழந்தை இறுதியாக பயன்படுத்தக்கூடிய எந்தவொரு எதிர்கால சாதனத்திற்குமான ஒரு உறுதியான அடித்தளமாக அது அமைகிறது.

முழுமையாக அதிகரிக்கப்படும்போது, உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும மேம்பாட்டினை விரைவுப்படுத்தும் ஒரு அடிக்கல்லாக கம்ப்யூட்டரின் ஆற்றல்மிக்கப் பயன்பாடு இருக்கும். அதற்கான ஒரு உதாரணம், நாசிக்கில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் சுபம் ஒரு மாணவன் அவன் கம்ப்யூட்டரின் காரணமாக கல்வி சார்ந்த கருத்துருக்களில் தெள்ளத்தெளிவாக இருக்கிறான்

கம்ப்யூட்டர் பன்முகப் பலன்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, அது பெற்றோர்களும் மாணவர்களும் நிறைவு செய்வதை சிரமமாக  கருதக்கூடிய சுருக்கமான மற்றும் உண்மை உலகத்திற்கு இடையிலான இடைவெளியை இணைக்கிறது. நீண்ட கால அடிப்படையில் உங்கள் குழந்தைக்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்குவதற்கான முடிவு நிச்சயமாக பயனுள்ள முடிவாக நிரூபணமாகும்.