நீங்கள் உங்கள் மாணவர்களை எவ்வாறு ஊக்குவிக்கலாம் – இவ்வாறாக தான்

 

ஊக்கம் எல்லோருக்கும் எளிதாக வருவதில்லை. சிலருக்கு அது கூடவே பிறக்கும் ஆனால் அதிகபடியான மாணவர்களுக்கு அவ்வப்போது ஏதோவொரு விதத்தில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளுடைய சொந்த இலக்காக இருப்பின் அவர்கள் வழியிலேயே ஊக்குவிப்பது பயனுள்ளதாக இருக்கும் – அது வகுப்பில் முதலாவதாக வருவதாக இருக்கட்டும், சேம்பியன்ஷிப் பட்டதை வெல்வதாக இருக்கட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அதிக நாலேஜைப் பெறுவதாக இருக்கட்டும். ஒரு டீச்சராக, உங்கள் வகுப்பினரை இவ்வாறாகதான் ஊக்குவிக்கலாம்:

1. மதிப்பெண்களை எனக்கு காட்டுங்கள்

பணியிடத்தில் மதிப்பீடுகளும் பதவி உயர்வுகளும் பெரியவர்களுக்கு கிடைப்பது போலவே தான் குழந்தைகளும் கூட மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகள் மூலம் உள்நோக்கத்துடன் உந்தப்படுவார்கள். உங்கள் மாணவர்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் அவர்களது அனைத்து முயற்சியையும் வழங்குவதற்கு, முடிந்த வரை அதிகபடியான மோக் டெஸ்ட்களை கொடுக்கவும் அப்போது உங்கள் மாணவர்கள் நிஜமான தேர்வுக்கு தங்களை முழுமையாக தயாரித்துக் கொள்வார்கள்!

2. மேம்பாட்டை அடையாளம் காணங்கள்

உங்கள் மாணவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு மிகச்சிறிய முன்னேற்றங்கள் கூட அடையாளம் காணப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு வேளை ஒரு மாணவர் இங்கிலிஷ் வக்காபுலரி டெஸ்ட்டில் 6/10 யிலிருந்து 8.5/10 என முன்னேறி இருந்தால் கூட அதை ஒரு ‘வெல்டன்’ அல்லது ஒரு ஸ்டார் ஸ்டிக்கரை ஒட்டி அந்த டெஸ்ட்டிலேயே பாராட்ட வேண்டும் - அது உங்கள் சொந்த பாணியில் பாராட்டுவதை மேலும் ஊக்கமளிப்பதை பொறுத்து அமையும்.

3. செயல்பாட்டு கற்றல் ஒரு தொடர்ந்து செல்லும் வழி ஆகும்

அதிகமான நேரங்களில், வகுப்பில் பெரும்பகுதி நேரம் பேசுபவர் ஒரு ஆசிரியராக தான் இருப்பார். பாடநெறி செயல்பாடுகளை ஒரு இண்டராக்டிவ் வீடியோ அல்லது இரண்டு, குழு விவாதங்கள் மற்றும் சூப்பர் டீச்சர் வொர்க்ஷீட்ஸ் போன்ற டீச்சிங் ரிசோர்ஸிலிருந்து ப்ராப்ளம்- சால்விங் வொர்க்ஷீட்களை பயன்படுத்தி அதிக அளவு உரையாடலாக மாற்றுவதன் மூலம் அந்த நெறிமுறையைத் திருப்பலாம்.

4. பலங்களை கட்டி எழுப்புங்கள்

உங்கள் மாணவர் ட்ரைகோனோமேட்ரியில் (கோணவியல்) கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் காட்டுகிறார் என வைத்துக் கொள்வோம் மேலும் உண்மையான ஆர்வம் கொண்டிருக்கிறார் எனில் அந்த மாணவரை 100 ப்ராப்ளம்ஸ் சேலன்ஞ்க்கு பதிவு செய்யுங்கள் மேலும் இந்த ஆர்வம், மிகவும் விரும்பப்படும் பேரார்வமாக மாறுவதை கவனியுங்கள். இதேப் போன்றே, பல மாணவர்கள் அவர்களது பலத்தை அதிகரிக்க உதவுவதற்கு பல PC ரிசோர்ஸஸ் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மாணவர்களுடன் ஒரு ஆழமான உரையாடலை உருவாக்கி, அவர்களில் புதைந்து கிடக்கும் ஆர்வத்தை கண்டு பிடிக்க வேண்டும் மேலும் அந்த ஆர்வத்தை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள அவர்கள் ஒரு PC ரிசோர்ஸஸை கண்டறிய உதவ வேண்டும்.

நீங்கள் ஒரு அனுபவமுள்ள அல்லது முதல் தடவை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் உங்கள் பாடத்தில் கைத்தேர்ந்தவராக இருந்தாலும், வகுப்பறையில் நீங்கள் ஆர்வத்தை உருவாக்குவதற்கு – ஒரு PC தான் ஒரு முக்கியமான டீச்சிங் டூல் ஆகும். இது ஒரு லேர்னிங் டூல் உங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆனால் உங்களுக்கும் தான்!