பாதுகாப்பான பாஸ்வேர்டுகளை அமைப்பதற்கு உங்கள் முழுமையான வழிகாட்டி

 

எத்தகைய விஷயமாக இருந்தாலும் பாதுகாப்பது

நீங்கள் வீட்டிலும் பள்ளியிலும் PC –யை பயன்படுத்துகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய வார்த்தைகள் உள்ளன. நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும் கூட – எஸ்ஸே எழுதுவதாக இருக்கலாம், க்ரூப் ப்ரொஜக்ட் செய்வதாக இருந்தாலும் அல்லது ஆர்வமிக்க ஒரு தலைப்பை தேடுவதாகவும் இருக்கலாம்: ஒரு PC –யை எல்லா நேரமும் பாதுகாக்க ஒரு பாஸ்வேர்டு என்பதுமிகவும் முக்கியம்.

ஒருவேளை உங்கள் வீட்டின் முன் கதவை திறப்பதற்கு உங்களிடம் உங்கள் வீட்டின் சாவி இல்லை என்று வைத்துக் கொள்வோம், அதே போல் தான் நீங்கள் தினசரி பயன்படுத்தும் உங்கள் PC, இமெயில் அக்கவுண்ட்ஸ், ஆன்லைன் லேர்னிங் ரிசோர்ஸஸ் மற்றும் சோஷியல் மீடியா சேனல்களை லாகிங் இன் செய்வதற்கு ஒரு பாஸ்வேர்டு தேவைப்படுகிறது. கீழ்வரும் வழிகாட்டுதல் குறிப்புகளை மனதில் கொள்வதன் மூலம், நீங்கள் இது போன்ற விஷயங்களை பாதுகாக்க முடியும்:

1) மல்டி-ஃபேக்டர் அதன்டிகேஷனை இயக்குதல்

இந்த பாஸ்வேர்டு டே, அதற்கான கருப்பொருள் என்பது #லேயர்அப். ஒரு மொபைல் அல்லது இமெயில் OTP –யை நீங்கள் சேர்ப்பதன் மூலம், நீங்கள் உங்கள் அக்கவுண்டிற்கு இன்னொரு அடுக்கு பாதுக்காப்பை சேர்க்கிறீர்கள். இது உங்கள் லாகின் ப்ரொஸஸிற்கு இன்னொரு அதிகபடியான படியை சேர்க்கும் ஆனால் அடையாளம் திருட்டு மற்றும் சமூக ஊடக கணக்கு கடத்தல் போன்ற சைபர் மோசடிகளுக்கு எதிராக உங்களுக்கு சக்தி வாய்ந்த பாதுகாப்பை அளிக்கிறது. [1]

2) நீண்ட பாஸ்வேர்டாக இருப்பின், அதை க்ராக் செய்வது மிக கடினம்

உங்கள் பாஸ்வேர்டை வெறும் வார்த்தையாக மட்டும் வைக்காமல், ஓரிரு ஸ்பெஷல் கேரக்ட்டர்களை சேர்த்து நீண்ட வாக்கியமாக உருவாக்கலாம். அது ஒரு வரிசையை பின்தொடர்வதாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதை நினைவில் கொண்டிருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்! அதோடு வெறும் ஆங்கில வார்த்தைகள் மட்டுமே போதாது – உங்கள் தாய்மொழியையோ அல்லது உங்களுக்கு தெரியும் வேரு மொழியையோ நீங்கள் சேர்த்து ஒரு வலுவான பாஸ்வேர்டை நீங்கள்வைத்துக் கொள்ளலாம்.

3) வெளிப்படைகளைத் தவிர்க்கவும் – பெயர்கள், பிறந்த நாட்கள் & நீங்கள் வாழும் இடம் அல்லது நகரத்தின் பெயர்

ஆரம்பத்தில், அதை செய்வது எளிதாக தோன்றலாம் ஆனால் உங்கள் உங்கள் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு தனித்துவமிக்கதாக இருக்கிறதோ- அந்த அளவுக்கு அது உங்களுக்கு நன்மைமிக்கதாக இருக்கும்.

சோர்ஸ்: https://securingtomorrow.mcafee.com/author/cybermum-india/

4) இவைகளின் கலவையாக இருக்கட்டும் –எழுத்துக்களை கேப்பிட்டல் ஆக்கவும் , குறியீடுகளை சேர்க்கவும் & ஒரு ரேண்டம் வார்த்தையை சேர்க்கவும்

@#$% இது போன்ற தொடர்பற்ற வார்த்தைகளை சேர்க்கும் போது உங்கள் பாஸ்வேர்டை யூகிப்பது மிகவும் கடினம். இது போன்ற பொதுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்: [2]

1. 123456
2. 123456789
3. password
4. admin
5. 12345678
6. qwerty
7. 1234567
8. 111111
9. photoshop
10. 123123
11. 1234567890
12. 000000
13. abc123
14. 1234
15. adobe1
16. macromedia
17. azerty
18. iloveyou
19. aaaaaa
20. 654321

5) ஒரு பாஸ்வேர்டை திரும்பவும் பயன்படுத்தவேண்டாம்

ஏனோ, நாம் அவ்வப்போது ஒருவித குற்றவுணர்வோடே இருப்போம், அதனால்தான் ஒவ்வொரு அக்கவுண்டிற்கும் வெவ்வேறு பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்துவது சிறந்தது ஆகும். நீங்கள் ஒரு எண், சிறப்பான கேரக்டர் அல்லது உணவு, நாடுகள் போன்றவற்றை ஒரு தீமாக வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் குறித்து நீங்கள் நன்றாக தெரிந்து கொண்டால், கற்றல் என்பது சுலபமான ஒன்று ஆகும்.