நீங்கள் ஒரு நேர்மறை டிஜிட்டல் கால்தடத்தினை உருவாக்குவதற்கான வழிகாட்டி

 

“உங்கள் ஆன்லைன் போஸ்ட் , உங்களது உண்மையான தன்மைகளை அதிகமாக வெளிப்படுத்தும். நோக்கத்துடன் போஸ்ட் செய்யுங்கள். எச்சரிக்கையோடு ரீபோஸ்ட் செய்யுங்கள்”

- ஜெர்மணி கென்ட்

 

ஒவ்வொருவரும் ஒரு டிஜிட்டல் கால்தடத்தைக் கொண்டுள்ளோம்

 

நீங்கள் ஆன்லைனில் எதையாவது போஸ்ட் செய்கையில் அல்லது பகிர்கையில், காலாகாலத்திற்கும் நீடிக்கும் வகையிலான ஒரு டிஜிட்டல் கால்தடத்தை அது உருவாக்குகிறது. எனவே, ஒரு நேர்மறை டிஜிட்டல் கால்தடத்தை உருவாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்:

 

1. ஒரு பாஸ்வேர்டு கீப்பரை பயன்படுத்தவும்

சமூக ஊடகங்களில் இருக்கும் பிரைவஸி செட்டிங்குகள், நீங்கள் உங்கள் போஸ்டுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா, பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா அல்லது பொதுவில் பகிர வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும். எந்த வகையிலான ஹேக்கிங்குகளையும் தவிர்க்க, ஒரு உறுதியான, நினைவில் நிற்கத்தக்க பாஸ்வேர்டை உருவாக்கவும்

 

2. அதிகஷேரிங்குகள் வேண்டாம்

ஒரு நேர்மறையான டிஜிட்டல் கால்தடத்தை உருவாக்க மிகவும் முக்கியம் என்பதால், ஆன்லைனில் போஸ்டிங் மற்றும் ஷேரிங்குகளை மேற்கொள்கையில் கவனமாக இருக்கவும். உங்கள் ஆன்லைன் குணாதிசியங்களின் அடிப்படையில் கமெண்டுகளுக்கு ரியாக்ட் செய்யவோ, உங்களுக்குத் தெரியாத விஷயங்களில் தலையிடவோ வேண்டாம். நீங்கள் ஆன்லைனில் போஸ்ட் செய்யும் விஷயங்கள் உங்களுக்கு பெருமையானதாக இருக்க வேண்டும். ஒரு முறை ஆன்லைனில் வந்துவிட்டால், அது காலம் முழுவதும் ஆன்லைனிலேயே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்

 

3. உங்களை நீங்களே தேடுங்கள்

உங்கள் பெயரைக் குறிப்பிட்டு நீங்களே ஒரு சர்ச் செய்து பாருங்கள். முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். பிறர் பார்க்க விரும்பாத விஷயங்கள் எதையேனும் நீங்கள் அதில் பார்த்தால், உடனடியாக அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மேலும், இதன் வழியாக உங்கள் பெயரில் ஏதேனும் பொய் கணக்குகள் உள்ளதா என்பதையும் நீங்கள் கண்டறியலாம்.

 

4. பழைய கணக்குகளை அழிக்கவும்

பழைய கணக்குகளின் அழிப்பு அல்லது டீஆக்டிவேஷன் செய்யாமை காரணமாக எதிர்மறை கால்தடம் ஏற்படுவதை நாங்கள் அதிகம் காண்கிறோம். ஒரு சமூக வலையமைப்பு விபரக்குறிப்பை நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்தியவுடன், அதை டீஆக்டிவேட் அல்லது டெலீட் செய்வதை உறுதி செய்யவும். அவற்றின் உள்ளடக்கங்கள் இயங்கும் நிலையிலும் மற்றும் சர்ச்சில் உட்படும் நிலையிலும் இருப்பது, அக்கணக்கு ஹேக் செய்யப்படும் சாத்தியத்தினை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்

 

உங்கள் ஆன்லைன் அடையாளம், உங்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை உண்டாக்கலாம் என்பதால், ஒரு நேர்மறை டிஜிட்டல் கால்தடத்தை உருவாக்குவது என்பது நல்லதொரு முடிவாகும். நீங்கள் மாணவர்களுக்கும் மற்றும் சமூகத்தினர் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். எனவே, ஒரு வழிகாட்டியாக, உங்கள் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உண்டாக்கும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களை ஊக்குவிக்கவும்.