மாணவர்கள் படிப்பதை விரும்ப தக்கவர்களாக மாற்றும் உங்கள் மூன்று படிநிலை வழிகாட்டி

 

சில மாணவர்களுக்கு படிக்க பிடிக்கும் மேலும் சில மாணவர்கள் முடிந்த வரை படிப்பதை தவிர்க்க விருபுவார்கள். ஒரு டீச்சராக, படிப்பது என்பது கற்றலின் முக்கியமான ஒரு பகுதியாகும், அதை புறக்கணிக்க முடியாது. உண்மையிலேயே, குழந்தை எந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே படிக்க ஆரம்பிப்பார்களோ, அந்த அளவுக்கு சிறப்பாக இருப்பார்கள். பதிப்பிக்கப்பட்ட வெளிப்பாடு,நன்றாக எழுதப்பட்ட வேலை மாணவர்களின் சொந்த உரைநடைகளில், இலக்கணத்தில் மற்றும் கொள்கையைப் புரிந்து கொள்வதில் குறிப்பிட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கும்.[1]

உங்கள் மாணவர்களை படிப்பதை விரும்புபவர்களாக மாற்றுவதற்கு, இந்த மூன்று-படிநிலை செயல்பாட்டு திட்டத்தை பின்பற்றி, அதன் பிறகு வித்தியாசத்தைப் பாருங்கள்.

1) விருப்பம் உங்களுடையது! 

வகுப்பு அல்லது வீட்டுப்பாடத்தின்போது படிப்பதற்கு பாடத்திட்டத்தின் படி எந்த  பாடத்தை அல்லது புத்தகத்தை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை உங்கள் மாணவர்களுக்கு கொடுங்கள். இது சரிபடுமா என்று கூட நீங்கள் நினைக்கலாம் ஆனால் இது அவர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் ஆம் உங்கள் மாணவர்கள் தங்கள் சொந்த கற்றலில் அதிக ஈடுபாடு கொள்ள முயற்சி செலுத்துவார்கள். சத்தமாக படிப்பது என்பது ஒரு கற்பிக்கும் பயிற்சி அது முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது மேலும் இவ்வாறு தான் பல வருடங்களாக இருந்து வருகிறது, ஆகவே இதை உங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.

2) அதை ஒரு குழு செயல்பாடாக மாற்றுங்கள் 

நீங்கள் இதை ஒரு ரீடிங் க்ளப் என்று அழைக்கலாம் அல்லது அது போன்ற ஒன்றாக மாற்றி ரீடிங்கை ஒரு வாராந்திர செயல்பாடாக மாற்றுங்கள், எனவே மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகத்தைப் பற்றி அல்லது அதனுடைய பட பதிப்பு பற்றி ஒரு கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் - அவர்கள் பொறுப்புணர்வுடன் மற்றும் பொறுப்பானவர்களாகவும் ஆவார்கள். உண்மையில் ஒரு தினசரி அடிப்படையில் படிக்கும் போது இது ஒரு பெரிய ஊக்கியாக இருக்கும்.

3) மாணவர்கள் அனைவரும் நல்ல கதாசாரியர்கள்

"பயன்பாட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட கலைஞரிடமிருந்து கலையை தேர்வு செய்து, பிறகு ஒரு கதைபுத்தகத்தை உருவாக்க வார்த்தைகளை சேர்ப்பர்.... நான் நல்ல இடத்தில் அதாவது மாணவர்கள்  எழுதக் கூடிய ஆன்லைனில் என் சைட்டை சேர்ப்பேன்."  

லாரி ஃபெர்லஸோ

ஆசிரியர், எழுதியோன், பதிவர்

மாணவர்கள் ஸ்டோரிபர்டுடன் அவர்களுக்குள் இருக்கும் கதாசிரியரை வெளியேக் கொண்டு வரட்டும். இந்த இலவச பயன்பாடு மற்றும் இண்டர் ஆக்டிவ் PC கருவி கருவி உங்கள் மாணவர்களின் கற்பனையை அதிகரிக்கும் மற்றும் அதிக சிந்தனைகளுக்காக படிப்பதில் அவர்களை அதிகமாக ஊக்குவிக்க உதவும். இந்த கருவியின் சிறப்பான பகுதி என்னவென்றால், குழந்தைகள் முழுமையான படைப்பு சுதந்திரத்தை பெற்று, அவர்களின் உள் இருக்கும் கதாசிரியரை மெருகேற்றுவார்கள்.

இப்பொழுது உங்கள் வகுப்பினரை படிக்கும் செயல்பாட்டுக்கு நீங்கள் இட்டுச் செல்ல வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த PC –யையும் பயன்படுத்துங்கள்!